வாழைப்பூ வடை செய்வது எப்படி?

Image
வாழைப்பூ வடை செய்வது எப்படி புகைப்படத்துடன் கூடிய செய்முறை விளக்கம். கொங்கு மாவட்டங்களில் வடை பருப்பு ரொம்ப பிரசித்தம் ஆனால் மற்ற இடங்களில் வடை பருப்பு கிடைக்குமா என்று எனக்கு தெரிய வில்லை. எனவே நான் இங்கு கடலை பருப்பு கொண்டு வடை செய்துள்ளேன். நீங்கள் இருக்கும் இடத்தில வடை பருப்பு கிடைக்குமெனில் அதையே உபயோகிக்கவும். வாழைப்பூவின் மகத்துவத்தை நான் சொல்லித்தான் உங்களுக்கு தெரிய வேண்டும் என்பது இல்லை.   எப்பொழுது இதனை செய்வது என்று பார்க்கலாம். வாழைப்பூ வடை தயார் செய்யும் நேரம்  : 2 மணி நேரம்  சமைக்கும் நேரம் :  15 நிமிடம்    அளவு  :  15 - 18 வடை   தேவையான பொருட்கள் : வாழைப்பூ - 1 கப்  (சுத்தம் செய்து நறுக்கியது)  கடலை பருப்பு / வடை பருப்பு  - 3/4 kap சின்ன வெங்காயம் - 1/4 கப் பொடியாய் நறுக்கியது சோம்பு - 3/4 கப்  பெருங்காயம் - 1/4 kap உப்பு - தேவைகேற்ப பச்சை மிளகாய் - 2 -3 பொடியாக நறுக்கியது கருவேப்பில்லை  - 1 கொத்து கொத்தமல்லி இலை - 2 மேஜைகரண்டி  பொடியாக நறுக்கியது செமுறை விளக்...

வெண்டைக்காய் பொடி பொரியல் | vendaikai podi poriyal recipe in tamil | bhindi podi fry in tamil

வெண்டைக்காய் எனக்கு ரொம்ப பிடிச்ச ஒரு காய். அதை வெச்சு புதுசா ஏதாச்சும் செஞ்சு பார்த்துட்டே இருப்பேன். அப்படி பண்ணினது தான் இந்த வெண்டைக்காய் பொடி பொரியல். கடலை பருப்பு , உளுத்தம் பருப்பு , வேர்க்கடலை எல்லாம் சேர்த்து வறுத்து அரைச்சு வதங்கிய வெண்டைக்காய் கூட சேர்த்து செய்யணும். ரொம்ப நல்லா இருக்கும் நீங்களும் செஞ்சு பாருங்க.

தேவையான பொருட்கள்:
வெண்டைக்காய் - 1/4 கிலோ
ஜீரகம் - 1 தேக்கரண்டி
எண்ணெய் - 1 மேஜைக்கரண்டி
வறுத்து அரைப்பதற்கு:
கடலை பருப்பு - 1/2 மேஜைக்கரண்டி
உளுத்தம் பருப்பு - 1 மேஜைக்கரண்டி
வேர்க்கடலை - 1 மேஜைக்கரண்டி
வர மிளகாய் - 2
கருவேப்பில்லை - 1 கொத்து
தேங்காய் துருவல் - 2 - 3 மேஜைக்கரண்டி


செய்முறை விளக்கம் :
  1. வெண்டைக்காயை கழுவி ஒரு காட்டன் துணி கொண்டு தண்ணீரை சுத்தமாக துடைத்துக் கொள்ளவும்.பின் வெண்டைக்காயை சிறு சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.



  2. ஒரு வாணலியில் கடலைப் பருப்பு உளுத்தம் பருப்பு வர மிளகாய் கருவேப்பில்லை அனைத்தும் சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும். இவற்றை ஒரு தட்டத்திற்கு மாற்றவும்.



  3. பின் வேர்க்கடலையை 1 நிமிடம் வறுத்துக் எடுத்துக் கொள்ளவும். பின் தேங்காய் துருவலை 2 நிமிடம் வறுக்கவும். 



  4. வறுத்த பொருட்கள் அனைத்தையும் மிக்ஸியில் போட்டு கொரகொரப்பாக அல்லது நைசாக அரைத்துக் கொள்ளவும். அரைக்கும் பொழுது சிறிது இடைவெளி விட்டு விட்டு அரைக்கவும் இல்லையேல் கட்டி சேர்ந்துவிடும். நான் கொரகொரப்பாக அரைத்துள்ளேன். 



  5. ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி ஜீரகம் போட்டு பொரிந்ததும் வெண்டைக்காய் மற்றும் உப்பு சேர்த்து 10 நிமிடம் வரை மிதமான தீயில் வதக்கவும்/ வெண்டைக்காயின் மேல்தோல் மொறுமொறுவென ஆகும் வரை வதக்கவும்.



  6. வெண்டைக்காய் நன்கு வதங்கிய பின் அரைத்துவைத்துள்ள பொடியை சேர்த்து கிளறி இறக்கினால் சுவையான வெண்டைக்காய் பொடி பொரியல் தயார்.



ரசம் மற்றும் தயிர் சாதத்தோட ரொம்ப நல்லா இருக்கும்:)


என் குறிப்பு :
1. வேர்க்கடலை சேர்ப்பதனால் அரைக்கும் பொழுது சிறிது இடைவெளி விட்டு விட்டு அரைக்கவும் இல்லையேல் கட்டி சேர்ந்துவிடும்.

Comments

Popular posts from this blog

எலுமிச்சை ஊறுகாய் - lemon pickle / traditional lemon pickle in tamil

அதிரசம் / இடி கச்சாயம் - Adhirasam / idi kachayam in tamil

புடலங்காய் கூட்டு | pudalangai kootu recipe in tamil | Snake gourd kootu in tamil