வாழைப்பூ வடை செய்வது எப்படி?

Image
வாழைப்பூ வடை செய்வது எப்படி புகைப்படத்துடன் கூடிய செய்முறை விளக்கம். கொங்கு மாவட்டங்களில் வடை பருப்பு ரொம்ப பிரசித்தம் ஆனால் மற்ற இடங்களில் வடை பருப்பு கிடைக்குமா என்று எனக்கு தெரிய வில்லை. எனவே நான் இங்கு கடலை பருப்பு கொண்டு வடை செய்துள்ளேன். நீங்கள் இருக்கும் இடத்தில வடை பருப்பு கிடைக்குமெனில் அதையே உபயோகிக்கவும். வாழைப்பூவின் மகத்துவத்தை நான் சொல்லித்தான் உங்களுக்கு தெரிய வேண்டும் என்பது இல்லை.   எப்பொழுது இதனை செய்வது என்று பார்க்கலாம். வாழைப்பூ வடை தயார் செய்யும் நேரம்  : 2 மணி நேரம்  சமைக்கும் நேரம் :  15 நிமிடம்    அளவு  :  15 - 18 வடை   தேவையான பொருட்கள் : வாழைப்பூ - 1 கப்  (சுத்தம் செய்து நறுக்கியது)  கடலை பருப்பு / வடை பருப்பு  - 3/4 kap சின்ன வெங்காயம் - 1/4 கப் பொடியாய் நறுக்கியது சோம்பு - 3/4 கப்  பெருங்காயம் - 1/4 kap உப்பு - தேவைகேற்ப பச்சை மிளகாய் - 2 -3 பொடியாக நறுக்கியது கருவேப்பில்லை  - 1 கொத்து கொத்தமல்லி இலை - 2 மேஜைகரண்டி  பொடியாக நறுக்கியது செமுறை விளக்...

டுட்டி ப்ரூட்டி

சின்ன வயசுல தேங்காய் பன் ல இருக்க டுட்டி பிரூட்டி மட்டும் எடுத்து சாப்பிட்டிருக்கேன். இதை ரொம்ப நாளா வீட்டுல செஞ்சு பாக்கணும்னு ஆசை. சரி பண்ணி பாக்கலாம்னு ட்ரை பண்ணினேன் ரொம்ப நல்ல வந்துச்சு. நீங்களும் செஞ்சு பார்த்துட்டு எப்படி இருக்குனு சொல்லுங்க

டுட்டி ப்ரூட்டி

தேவையான பொருட்கள் :
பச்சை பப்பாளி - 2 கப்
சர்க்கரை - 2 கப்
தண்ணீர் - 2 கப்
வெண்ணிலா எசென்ஸ் - 1 துளி
கேசரி பௌடர் - 1 சிட்டிகை(நான் சிகப்பு மற்றும் மஞ்சள் உபயோகித்தேன்)
செய்முறை விளக்கம்:
எங்கள் வீட்டு மரத்தில் காய்த்த பப்பாளி



பப்பாளி காயில் கத்தியை வைத்து அங்கங்கு கீறி விடவும். இதனால் அதனுள் உள்ள பால் வெளியே வரத் தொடங்கும்.


பால் வெளியேறுவது நின்ற உடன் மேல் தோலை கத்தி கொண்டோ அல்லது பீலர் கொண்டோ நன்கு சீவி விடவும். காயை இரண்டாக வெட்டி அதனுள் உள்ள விதைகளை எல்லாம் நீக்கி விட்டு உள்ளே வெள்ளையாக இருக்கும் பகுதிகளை கத்தியால் அகற்றி விட்டு ஓடும் தண்ணீரில் துண்டுகளை நன்கு கழுவவும். கழுவிய துண்டுகளை சிறிது சிறிதாக வெட்டவும்(1/4").
மூன்று கப் தண்ணீரை ஒரு பாத்திரத்தில் எடுத்து சூடேற்றவும். சூடானதும் நறுக்கிய துண்டுகளை அதனுள் போட்டு மூன்று நிமிடம் வேக வைக்கவும். பின் அடுப்பை அனைத்து அதனை ஒரு மூடி போட்டு கொஞ்சம் திறந்தார் போல் ஐந்து நிமிடம் விடவும்.


பின் பப்பாளி துண்டுகளை வடிகட்டி ஒரு தட்டத்தில் வைக்கவும். அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து இரண்டு கப் தண்ணீர் இரண்டு கப் சர்க்கரை சேர்த்து சூடேற்றவும். சர்க்கரை நன்கு கரைந்ததும் வடிகட்டிய பப்பாளி துண்டுகளை பாகில் சேர்த்து மெதுமெதுப்பாகவும் இனிப்பாகவும் ஆகும் வரை வேக விடவும். அவ்வப்போது நீங்கள் ஒரு துண்டை எடுத்து அழுத்திப் பார்த்துக் கொள்ளலாம். முதலில் ஓரங்களில் கண்ணாடி போல மாறும் பின் முழுவதும் கண்ணாடி போல தோற்றமளிக்கும். எனக்கு முப்பது நிமிடங்கள் ஆனது.அடுப்பை அனைத்து விடவும்.





இது வண்ணம் தீட்டும் நேரம் மற்றும் சுவை சேர்க்கும் நேரம். ஒரு துளி வெண்ணிலா எஸ்சென்செய் வேகவைத்த பப்பாளி துண்டுகளுடன் சேர்த்து கிளறவும். பின் கேசரி பொடியை தனித் தனிக் கிண்ணங்களில் ஒவ்வொரு சிட்டிகை சேர்க்கவும். பப்பாளி துண்டுகளை சரிசமமாக பாகுடன் இரண்டு கிணங்களிலும் சேர்த்து நன்கு கலந்து விடவும். ஒவ்வொன்றுக்கும் தனி தனி ஸ்பூன் உபயோகிக்கவும். இவற்றை அப்படியே 12 - 24 மணிநேரம் ஊற விடவும்.




நன்கு ஊறிய பின்பு அதனை வடிகட்டி ஒரு துணியின் மேல் தனித் தனியாக பரப்பி உலர விடவும்.துணிக்கு அடியில் ஒரு நியூஸ்பேப்பர்  போடுவது நல்லது.காத்தாடிக்குஅடியில் வைத்தால் நன்கு உலர்ந்து விடும். ஒரு அளவு பிசு பிசுப்பு இல்லாமல் துண்டுகள் ஆன பின்பு தனி தட்டத்தில் போட்டு நீர்பதம் இல்லாமல் உலர வைக்கலாம். அழுத்திப் பார்த்தால் பாகு வராமல் இருந்தால் நம்முடைய டுட்டி ப்ரூட்டி தயார் என்று அர்த்தம்:) இதனை காற்று புகாத கண்ணாடி பாட்டிலில் போட்டு வைத்துக் கொண்டு தேவைப் படும் போது உபயோகிக்கலாம்.

Comments

Popular posts from this blog

எலுமிச்சை ஊறுகாய் - lemon pickle / traditional lemon pickle in tamil

அதிரசம் / இடி கச்சாயம் - Adhirasam / idi kachayam in tamil

புடலங்காய் கூட்டு | pudalangai kootu recipe in tamil | Snake gourd kootu in tamil