வாழைப்பூ வடை செய்வது எப்படி?

Image
வாழைப்பூ வடை செய்வது எப்படி புகைப்படத்துடன் கூடிய செய்முறை விளக்கம். கொங்கு மாவட்டங்களில் வடை பருப்பு ரொம்ப பிரசித்தம் ஆனால் மற்ற இடங்களில் வடை பருப்பு கிடைக்குமா என்று எனக்கு தெரிய வில்லை. எனவே நான் இங்கு கடலை பருப்பு கொண்டு வடை செய்துள்ளேன். நீங்கள் இருக்கும் இடத்தில வடை பருப்பு கிடைக்குமெனில் அதையே உபயோகிக்கவும். வாழைப்பூவின் மகத்துவத்தை நான் சொல்லித்தான் உங்களுக்கு தெரிய வேண்டும் என்பது இல்லை.   எப்பொழுது இதனை செய்வது என்று பார்க்கலாம். வாழைப்பூ வடை தயார் செய்யும் நேரம்  : 2 மணி நேரம்  சமைக்கும் நேரம் :  15 நிமிடம்    அளவு  :  15 - 18 வடை   தேவையான பொருட்கள் : வாழைப்பூ - 1 கப்  (சுத்தம் செய்து நறுக்கியது)  கடலை பருப்பு / வடை பருப்பு  - 3/4 kap சின்ன வெங்காயம் - 1/4 கப் பொடியாய் நறுக்கியது சோம்பு - 3/4 கப்  பெருங்காயம் - 1/4 kap உப்பு - தேவைகேற்ப பச்சை மிளகாய் - 2 -3 பொடியாக நறுக்கியது கருவேப்பில்லை  - 1 கொத்து கொத்தமல்லி இலை - 2 மேஜைகரண்டி  பொடியாக நறுக்கியது செமுறை விளக்...

சௌசௌ / பெங்களூர் கத்தரிக்காய் / மேராக்காய் / சீமை கத்தரிக்காய் சட்னி - chow chow chutney / bangalore katharikkaai / merakaai / seemai katharikaai chutney in tamil

எப்பவுமே இந்த சீமை கத்தரிக்காய் / மேரக்காய் / பெங்களூர் கத்தரிக்காய்ய வெச்சு குழம்பு தான் நான் செஞ்சிருக்கேன். இந்த சட்னி எங்க அண்ணி எனக்கு எப்படி செய்றதுன்னு சொன்னாங்க. நான் செஞ்சு பார்த்தேன் ரொம்ப வித்யாசமா ரொம்ப சுவையாவும் இருந்துச்சு. வழக்கமா நம்ம செய்ற தேங்காய் சட்னி இல்ல தக்காளி சட்னிக்கு கொஞ்சம் விடுமுறை விடலாமே!. இப்ப இந்த சட்னி எப்படி செய்றதுன்னு பாக்கலாம்.


சௌசௌ சட்னி

தயார்செய்யும் நேரம்:5 நாள் | சமைக்கும் நேரம் : 15 நிமிடம் அளவு :400-500gm | எந்தவகை சமையல்: இந்திய உணவு

தேவையான பொருட்கள்:

மேராக்காய் -1 / 1 கப் பொடியாக நறுக்கியது

சின்ன வெங்காயம்- 15 - 20

பொட்டு கடலை- 1/4 கப்

கருவேப்பில்லை - 1 கொத்து

வர மிளகாய் - 2- 3

துருவிய தேங்காய் - 3 மேஜைக்கரண்டி

புளி - 1 தேக்கரண்டி

எண்ணெய் -  2 மேஜைக்கரண்டி

செய்முறை விளக்கம்:
  1. பெங்களூர் கத்தரிக்காயை கழுவி தோல்சீவி இரண்டாய் வெட்டிக் கொள்ளவும்.

  2. காயின் நடுவில் உள்ள கோட்டையை அகற்றி விட்டு சிறு சிறு துண்டுகளாக வெட்டிவைக்கவும்.

  3. வடசட்டியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சின்ன வெங்காயம், வெட்டி வைத்துள்ள பெங்களூர் கத்தரிக்காய், காய்ந்த மிளகாய், கருவேப்பில்லை அனைத்தும் சேர்த்து நன்றாக வதக்கவும்.

  4. காய் நன்றாக வதங்கியதும் பொட்டுக்கடலை சேர்த்து ஒரு கிளறு கிளறிவிடவும்.

  5. இதனுடன் துருவிய தேங்காய் மற்றும் புளி சேர்த்து கிளறி அடுப்பை அணைக்கவும்.
  6. வதக்கியவற்றை மிக்ஸியில் போட்டு, வடசட்டியில் சிறிது தண்ணீர் ஊற்றி அலசி அதனை மிக்ஸியில் ஊற்றி அரைத்து எடுத்தால் சுவையான சௌசௌ சட்னி தயார்.

இதனை தோசை இட்லியுடன் பரிமாறவும்:)


என் குறிப்பு:
1. மேரக்காயை மிதமான தீயில் பச்சை வாசனை போகும்வரை வதக்குவதில் தான் சட்னியின் சுவை இருக்கு.
2. பொட்டுக் கடலைக்கு பதில் கடலைப் பருப்பு மற்றும் உளுந்து பருப்பை வறுத்தும் சேர்க்கலாம்.

Comments

Popular posts from this blog

எலுமிச்சை ஊறுகாய் - lemon pickle / traditional lemon pickle in tamil

அதிரசம் / இடி கச்சாயம் - Adhirasam / idi kachayam in tamil

புடலங்காய் கூட்டு | pudalangai kootu recipe in tamil | Snake gourd kootu in tamil