நான் குடைமிளகாய் ஓட தீவிர ரசிகைனே சொல்லலாம். இதுக்கு முன்னாடி
குடைமிளகாய் வேர்க்கடலை சட்னி எப்படினு சொல்லிருந்தேன். இன்னைக்கு குடைமிளகாய் குருமா எப்படி செய்றதுன்னு பாக்கலாம்.
குடைமிளகாய், எள், வேர்க்கடலை, முந்திரி, கசகசா - னு நிறைய உடலுக்கு நன்மை தரக் கூடிய பொருட்கள் இந்த குருமாவில் இருக்கு .
குடைமிளகாய் குருமா
தயார்செய்யும் நேரம்:10 நிமிடம் | சமைக்கும் நேரம் : 20 நிமிடம் அளவு : 4 பேருக்கு | எந்தவகை சமையல்: இந்திய உணவு
தேவையான பொருட்கள்:
குடைமிளகாய் - 1 கப் (குட்டி சதுரங்களாய் நறுக்கியது)
ஏலக்காய் - 1
பிரியாணி இலை - 1
பெரிய வெங்காயம் - 1/2 (சதுரங்களாய் வெட்டியது)
ஜீரகம் - 1/2 தேக்கரண்டி
நெய் - 2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 1/4 தேக்கரண்டி கோபுரமாக
கரம் மசாலா தூள் - 1/8 தேக்கரண்டி கோபுரமாக
உப்பு - தேவையான அளவு
வதக்கி அரைப்பதற்கு :
கடலை எண்ணெய் - 2 தேக்கரண்டி
பெரிய வெங்காயம் - 1 பெரியது (பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் - 1
பூண்டு - 3 பல்
இஞ்சி - 1/2" அளவு
கசகசா - 1/2 தேக்கரண்டி
தக்காளி - 1
வறுத்து அரைப்பதற்கு :
வறுத்த வேர்க்கடலை - 1 மேஜைக்கரண்டி
வெள்ளை எள் - 2 தேக்கரண்டி
முந்திரி - 5
துருவிய தேங்காய் - 2 மேஜைக்கரண்டி
செய்முறை விளக்கம்:
- வாணலியில் வறுத்த வேர்க்கடலை, வெள்ளை எள் ,முந்திரி,தேங்காய் சேர்த்து தேங்காய் பொன்னிறமாகும் வரை வறுக்கவும்.
- அதே வாணலியில் கடலெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நறுக்கிய வெங்காயம், இஞ்சி, பூண்டு, பச்சைமிளகாய், கசகசா சேர்த்து வதக்கவும் .
- வெங்காயம் வதங்கிய பின் தக்காளி சேர்த்து தோல் சுருங்கும் வரை வதக்கவும். மிக்ஸி ஜாரில் வதக்கிய வெங்காய கலவை மற்றும் வருதுவைத்துள்ள வேர்க்கடலை கலவையை சிறிது தண்ணீர் விட்டு மையாக அரைக்கவும்.
- வாணலியில் நெய் ஊற்றி ஏலக்காய் , பிரியாணி இலை , சீரகம் சேர்த்து பொரிந்ததும் வெட்டி வைத்துள்ள வெங்காயம் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும். பின் குடைமிளகாய் துண்டுகளை சேர்த்து 3-5 நிமிடம் மிதமான தீயில் வதக்கவும்.
- அதில் அரைத்துவைத்துள்ள விழுதை சேர்த்து அதனுடன் மஞ்சள் தூள் , மிளகாய் தூள் , கரம் மசாலா தூள் மற்றும் தேவையான உப்பு சேர்த்து 1/2 கப் அளவு தண்ணீர் விட்டு 10 நிமிடம் கொதிக்க விடவும்.(வேண்டுமெனில் கொஞ்சம் சேர்த்து கூட தண்ணீர் ஊற்றலாம்)
சுவையான குடைமிளகாய் குருமா தயார் !!! சப்பாத்தி கூட சாப்பிட ரொம்ப நல்லா இருக்கும்.
என் குறிப்பு:
1. நான் மூன்று நிற குடைமிளகாயையும் சேர்த்துள்ளேன் . நீங்கள் உங்களிடம் உள்ள அல்லது விருப்பப் பட்ட நிறத்தினை சேர்த்துக் கொள்ளலாம்.
2. இது அளவான காரத்துடன் உள்ளது. வேண்டுமெனில் மிளகாய் தூள் சிறிது அதிகமாக சேர்த்துக் கொள்ளலாம்.
3. முந்திரிக்கு பதில் பாதாம் கூட சேர்த்துக் கொள்ளலாம்.
4. கடைசியாக
பிரெஷ் கிரீம் மற்றும் கஸ்தூரி மேத்தி செதுக்கி கொள்ளலாம்.
Comments
Post a Comment