வாழைப்பூ வடை செய்வது எப்படி?

Image
வாழைப்பூ வடை செய்வது எப்படி புகைப்படத்துடன் கூடிய செய்முறை விளக்கம். கொங்கு மாவட்டங்களில் வடை பருப்பு ரொம்ப பிரசித்தம் ஆனால் மற்ற இடங்களில் வடை பருப்பு கிடைக்குமா என்று எனக்கு தெரிய வில்லை. எனவே நான் இங்கு கடலை பருப்பு கொண்டு வடை செய்துள்ளேன். நீங்கள் இருக்கும் இடத்தில வடை பருப்பு கிடைக்குமெனில் அதையே உபயோகிக்கவும். வாழைப்பூவின் மகத்துவத்தை நான் சொல்லித்தான் உங்களுக்கு தெரிய வேண்டும் என்பது இல்லை.   எப்பொழுது இதனை செய்வது என்று பார்க்கலாம். வாழைப்பூ வடை தயார் செய்யும் நேரம்  : 2 மணி நேரம்  சமைக்கும் நேரம் :  15 நிமிடம்    அளவு  :  15 - 18 வடை   தேவையான பொருட்கள் : வாழைப்பூ - 1 கப்  (சுத்தம் செய்து நறுக்கியது)  கடலை பருப்பு / வடை பருப்பு  - 3/4 kap சின்ன வெங்காயம் - 1/4 கப் பொடியாய் நறுக்கியது சோம்பு - 3/4 கப்  பெருங்காயம் - 1/4 kap உப்பு - தேவைகேற்ப பச்சை மிளகாய் - 2 -3 பொடியாக நறுக்கியது கருவேப்பில்லை  - 1 கொத்து கொத்தமல்லி இலை - 2 மேஜைகரண்டி  பொடியாக நறுக்கியது செமுறை விளக்...

ஈஸி பூண்டு சாதம் | Easy Poondu milagu sadam | Garlic pepper rice recipe in tamil

பூண்டில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் அடங்கி உள்ளது. பூண்டை தினமும் உணவில் சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது. இது கொழுப்பை குறைக்க வல்லது. பால் கொடுக்கும் தாய்மார்கள் உட்கொண்டால் பால் அதிகம் சுரக்கும். இந்த பூண்டு சாதம் வழக்கமா அரைச்சு செய்ற மாதிரி செய்யாம பொடிப் பொடியா அரிஞ்சு சேர்த்திருக்கேன். ரொம்ப சுலபமா செய்யலாம். இதை எப்படி செய்றதுன்னு பாக்கலாம்.


பூண்டு சாதம்

தயார்செய்யும் நேரம்:10 நிமிடம் | சமைக்கும் நேரம் : 10 நிமிடம் அளவு : 2 பேர் சாப்பிடலாம்  | எந்தவகை சமையல்: இந்திய உணவு

தேவையான பொருட்கள்:

பூண்டு - 12 - 15 பல் (பொடியாய் நறுக்கியது)

வேகவைத்த சாதம் - 1 கப் 

சின்ன வெங்காயம்- 10(பொடியாய் நறுக்கியது)

கடுகு - 1/2 தேக்கரண்டி

கருவேப்பில்லை - 1 கொத்து

கடலை பருப்பு - 1 தேக்கரண்டி 

உளுத்தம் பருப்பு - 1/2 தேக்கரண்டி

வர மிளகாய் - 2

மிளகு தூள் - 1/2 தேக்கரண்டி

எண்ணெய் -  3 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை விளக்கம்:
  1. சாதம் வடித்து வைத்துக் கொள்ளவும். பூண்டு மற்றும் வெங்காயத்தை பொடி பொடியாக நறுக்கிக் கொள்ளவும். ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு சேர்த்து பொரிந்தவுடன் கடலைப் பருப்பு பின் உளுத்தம் பருப்பு சேர்த்து வதக்கவும்

  2. கடலைப் பருப்பு மற்றும் உளுத்தம் பருப்பு  லேசாக நிறம் மாறியதும் நறுக்கிய பூண்டு சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்கு வதக்கவும். பின் நறுக்கிய சின்ன வெங்காயம், கருவேப்பில்லை  சேர்த்து வதக்கவும்.

  3. வெங்காயம் வதங்கியதும் சாதம் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறவும்.

  4. கடைசியாக மிளகு தூள் சேர்த்துக் கிளறி இறக்கவும்..

சுவையான பூண்டு சாதம் சுட சுட பரிமாறவும்:)


என் குறிப்பு:
1. பூண்டை முடிந்த வரை மெல்லிசாக நறுக்கிக் கொள்ளவும்.
2. கடலை பருப்பு மற்றும் உளுத்தம் பருப்பை வறுத்து அரைத்தும் சேர்க்கலாம்.

Comments

Post a Comment

Popular posts from this blog

எலுமிச்சை ஊறுகாய் - lemon pickle / traditional lemon pickle in tamil

அதிரசம் / இடி கச்சாயம் - Adhirasam / idi kachayam in tamil

புடலங்காய் கூட்டு | pudalangai kootu recipe in tamil | Snake gourd kootu in tamil