வாழைப்பூ வடை செய்வது எப்படி?

Image
வாழைப்பூ வடை செய்வது எப்படி புகைப்படத்துடன் கூடிய செய்முறை விளக்கம். கொங்கு மாவட்டங்களில் வடை பருப்பு ரொம்ப பிரசித்தம் ஆனால் மற்ற இடங்களில் வடை பருப்பு கிடைக்குமா என்று எனக்கு தெரிய வில்லை. எனவே நான் இங்கு கடலை பருப்பு கொண்டு வடை செய்துள்ளேன். நீங்கள் இருக்கும் இடத்தில வடை பருப்பு கிடைக்குமெனில் அதையே உபயோகிக்கவும். வாழைப்பூவின் மகத்துவத்தை நான் சொல்லித்தான் உங்களுக்கு தெரிய வேண்டும் என்பது இல்லை.   எப்பொழுது இதனை செய்வது என்று பார்க்கலாம். வாழைப்பூ வடை தயார் செய்யும் நேரம்  : 2 மணி நேரம்  சமைக்கும் நேரம் :  15 நிமிடம்    அளவு  :  15 - 18 வடை   தேவையான பொருட்கள் : வாழைப்பூ - 1 கப்  (சுத்தம் செய்து நறுக்கியது)  கடலை பருப்பு / வடை பருப்பு  - 3/4 kap சின்ன வெங்காயம் - 1/4 கப் பொடியாய் நறுக்கியது சோம்பு - 3/4 கப்  பெருங்காயம் - 1/4 kap உப்பு - தேவைகேற்ப பச்சை மிளகாய் - 2 -3 பொடியாக நறுக்கியது கருவேப்பில்லை  - 1 கொத்து கொத்தமல்லி இலை - 2 மேஜைகரண்டி  பொடியாக நறுக்கியது செமுறை விளக்...

சாக்லேட் பர்பி - chocolate barfi/burfi/fudge recipe in tamil

சாக்லேட் னு சொன்னா யார்க்கு தான் பிடிக்காது . அதுலயும் குழந்தைங்கல  கேக்கவே வேண்டாம். வீட்டுலையே சாக்லேட் பர்பி செஞ்சு கொடுத்தா ரொம்ப ரொம்ப சந்தோசப் பாடுவாங்க. இப்ப இதை எப்படி செய்றதுன்னு பாக்கலாம். இதை கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் ஸ்வீட்டா இங்க போடலாம்னு தோணுச்சு . நேயர்கள் அனைவருக்கும் கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துக்கள் :)



சாக்லேட் பர்பி

தயார்செய்யும் நேரம்:2 நிமிடம்| சமைக்கும் நேரம் : 15 நிமிடம் அளவு : 25 பர்பி | எந்தவகை சமையல்: இந்திய உணவு
தேவையான பொருட்கள்:     
பால் பௌடர் - 1/4 கப் 
கோகோ பவுடர் - 1 தேக்கரண்டி 
சக்கரை - 1/3 கப் 
தண்ணீர் - 1/4 கப் 
நெய் - 2 தேக்கரண்டி 
முந்திரி - 3(பொடியாக நறுக்கியது) 

செய்முறை விளக்கம்:
  1. அச்சு தட்டில் நெய் தடவி தயாராக வைக்கவும். ஒரு பாத்திரத்தில் பால் பவுடர் , கோகோ பவுடர் சேர்த்து கலக்கிக் கொள்ளவும்.
  2. ஒரு வாணலியில்  சக்கரையுடன் 1/4 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும் .
  3. ஒரு நூல் பதம் வந்ததும் முன்பே கலக்கி வைத்துள்ள பால் பவுடர் கலவையை சேர்த்து கலக்கவும். இதனை மிதமான சூட்டில் இடைவிடாமல் கிளறிக்கொண்டே இருக்கவும் இல்லையேல் அடிபிடித்து விடும்
  4. இதனுடன் நெய் சேர்த்து கிளறி ஓரங்களில் ஒட்டாமல் ஒன்று திரண்டு வரும்பொழுதுமுன்பு  நெய் தடவி வைத்துள்ள தட்டில் ஊற்றி நறுக்கிய முந்திரியை மேலே தூவி அலங்கரிக்கவும் . முந்திரியை லேசாக தட்டி விடவும் அப்பொழுது தான் சாக்லேட் துண்டுகளில் நன்றாக ஒட்டிக் கொள்ளும். சிறிது ஆறியவுடன் கத்தி கொண்டு வில்லைகள் போடவும். 
வில்லைகளை தனியாக பிரித்தால் சுவையான  சாக்லேட் பர்பி தயார் !


என் குறிப்பு:
 1. இதற்கு நெய் அதிகம் சேர்க்கத் தேவையில்லை.
 2. கடைசியாக தட்டில்  பொழுது  அதுவாகவே ஏகமாய் படர்ந்துகொள்ளும் ,சமன் செய்யத் தேவையில்லை.
 3.  முந்திரிக்கு பதில் பாதாம் பிஸ்தா கூட  உபயோகிக்கலாம் .

Comments

  1. Caesars welcomes players into MGM Grand Detroit - KTM
    Caesars Entertainment and 경기도 출장샵 Caesars Entertainment 군산 출장안마 will host 의정부 출장안마 a ribbon cutting Wednesday for 안성 출장안마 a 평택 출장안마 ribbon-cutting of the Detroit Lions' team-

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

எலுமிச்சை ஊறுகாய் - lemon pickle / traditional lemon pickle in tamil

அதிரசம் / இடி கச்சாயம் - Adhirasam / idi kachayam in tamil

புடலங்காய் கூட்டு | pudalangai kootu recipe in tamil | Snake gourd kootu in tamil