வாழைப்பூ வடை செய்வது எப்படி?

Image
வாழைப்பூ வடை செய்வது எப்படி புகைப்படத்துடன் கூடிய செய்முறை விளக்கம். கொங்கு மாவட்டங்களில் வடை பருப்பு ரொம்ப பிரசித்தம் ஆனால் மற்ற இடங்களில் வடை பருப்பு கிடைக்குமா என்று எனக்கு தெரிய வில்லை. எனவே நான் இங்கு கடலை பருப்பு கொண்டு வடை செய்துள்ளேன். நீங்கள் இருக்கும் இடத்தில வடை பருப்பு கிடைக்குமெனில் அதையே உபயோகிக்கவும். வாழைப்பூவின் மகத்துவத்தை நான் சொல்லித்தான் உங்களுக்கு தெரிய வேண்டும் என்பது இல்லை.   எப்பொழுது இதனை செய்வது என்று பார்க்கலாம். வாழைப்பூ வடை தயார் செய்யும் நேரம்  : 2 மணி நேரம்  சமைக்கும் நேரம் :  15 நிமிடம்    அளவு  :  15 - 18 வடை   தேவையான பொருட்கள் : வாழைப்பூ - 1 கப்  (சுத்தம் செய்து நறுக்கியது)  கடலை பருப்பு / வடை பருப்பு  - 3/4 kap சின்ன வெங்காயம் - 1/4 கப் பொடியாய் நறுக்கியது சோம்பு - 3/4 கப்  பெருங்காயம் - 1/4 kap உப்பு - தேவைகேற்ப பச்சை மிளகாய் - 2 -3 பொடியாக நறுக்கியது கருவேப்பில்லை  - 1 கொத்து கொத்தமல்லி இலை - 2 மேஜைகரண்டி  பொடியாக நறுக்கியது செமுறை விளக்...

குடைமிளகாய் வேர்க்கடலை சட்னி | Capsicum peanut chutney recipe in tamil

இட்லி தோசைக்கு சட்னி செய்யணும்னு நினைக்கிறப்ப முதல்ல நம்ம நியாபகத்துக்கு வர்ரது தேங்காய் சட்னி இல்லைனா தக்காளி சட்னி தான். அதுனாலயே வித விதமான சட்னி ட்ரை பண்ணி பாப்பேன். அப்படி ட்ரை பண்ணும் பொது தான் இந்த குடைமிளகாய் வேர்க்கடலை சட்னி இணையத்துல பார்த்து என்னோட ஸ்டைல்-ல செஞ்சு பார்த்தேன் ரொம்ப நல்ல இருந்துச்சு. நீங்களும் செஞ்சு பார்த்துட்டு எப்படி இருக்குனு சொல்லுங்க.

தேவையான பொருட்கள்:
வறுத்து அரைப்பதற்கு :
குடைமிளகாய் - 1 பெரியது / 1 கப் நறுக்கியது
வர மிளகாய் - 3
கருவேப்பில்லை - 1 கொத்து
வேர்க்கடலை -1/2 கப்
இஞ்சி - 1 தேக்கரண்டி அளவு
துருவிய தேங்காய் - 3 மேஜைக்கரண்டி
ஜீரகம் - 1/2 தேக்கரண்டி
புளி - 1 தேக்கரண்டி அளவு
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 2 தேக்கரண்டி
தாளிப்பதற்கு:
எண்ணெய் - 1 தேக்கரண்டி
கடுகு - 1/2 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
கருவேப்பில்லை - 1 கொத்து 
  1. குடைமிளகாயை சிறு சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். வர மிளகாயை விதைகள் நீக்கி வைக்கவும். தேங்காயை துருவிக் கொள்ளவும்.



  2. வறுத்த வேர்க்கடலையை வடசட்டியில் போட்டு லேசாக 1 நிமிடம் வறுத்து தோல் நீக்கி வைத்துக் கொள்ளவும்.



  3. அதே வடசட்டியில் விதைகள் நீக்கிய மிளகாயை வறுத்து எடுத்துக் கொள்ளவும். பின் வடசட்டியில் எண்ணெய் ஊற்றி குடைமிளகாய் மற்றும் கருவேப்பில்லை சேர்த்து 1 நிமிடம் வதக்கவும்.



  4. ஜீரகம் சேர்த்து 2-3 நிமிடம் வதக்கிய பின் துருவிய தேங்காய் சேர்த்து கிளறி அடுப்பை அணைக்கவும்.



  5. ஒரு மிக்ஸில் ஜாரில் முன்பு வறுத்து வைத்த வேர்க்கடலை, மிளகாய் , வதக்கிய குடைமிளகாய் கலவை சேர்த்து அதனுடன் இஞ்சி , புளி , உப்பு சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு அரைக்கவும்.



  6. ஒரு வடசட்டியில் எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்தவற்றை போட்டு தாளித்து அரைத்த சட்னியில் ஊற்றி பரிமாறவும். 



சுவையான குடைமிளகாய் வேர்க்கடலை சட்னி தயார் !:)



என் குறிப்பு:
1. வேர்க்கடலையை தோல் நீக்காமல் அப்படியே கூட சேர்க்கலாம்.
2.  பச்சைக்கு பதில் சிகப்பு அல்லது மஞ்சள் நிற குடை மிளகாய் கூட உபயோகிக்கலாம்.

Comments

Popular posts from this blog

எலுமிச்சை ஊறுகாய் - lemon pickle / traditional lemon pickle in tamil

அதிரசம் / இடி கச்சாயம் - Adhirasam / idi kachayam in tamil

புடலங்காய் கூட்டு | pudalangai kootu recipe in tamil | Snake gourd kootu in tamil