வாழைப்பூ வடை செய்வது எப்படி?

Image
வாழைப்பூ வடை செய்வது எப்படி புகைப்படத்துடன் கூடிய செய்முறை விளக்கம். கொங்கு மாவட்டங்களில் வடை பருப்பு ரொம்ப பிரசித்தம் ஆனால் மற்ற இடங்களில் வடை பருப்பு கிடைக்குமா என்று எனக்கு தெரிய வில்லை. எனவே நான் இங்கு கடலை பருப்பு கொண்டு வடை செய்துள்ளேன். நீங்கள் இருக்கும் இடத்தில வடை பருப்பு கிடைக்குமெனில் அதையே உபயோகிக்கவும். வாழைப்பூவின் மகத்துவத்தை நான் சொல்லித்தான் உங்களுக்கு தெரிய வேண்டும் என்பது இல்லை.   எப்பொழுது இதனை செய்வது என்று பார்க்கலாம். வாழைப்பூ வடை தயார் செய்யும் நேரம்  : 2 மணி நேரம்  சமைக்கும் நேரம் :  15 நிமிடம்    அளவு  :  15 - 18 வடை   தேவையான பொருட்கள் : வாழைப்பூ - 1 கப்  (சுத்தம் செய்து நறுக்கியது)  கடலை பருப்பு / வடை பருப்பு  - 3/4 kap சின்ன வெங்காயம் - 1/4 கப் பொடியாய் நறுக்கியது சோம்பு - 3/4 கப்  பெருங்காயம் - 1/4 kap உப்பு - தேவைகேற்ப பச்சை மிளகாய் - 2 -3 பொடியாக நறுக்கியது கருவேப்பில்லை  - 1 கொத்து கொத்தமல்லி இலை - 2 மேஜைகரண்டி  பொடியாக நறுக்கியது செமுறை விளக்...

வீட்டில் ஹெவி கிரீம் மற்றும் ப்ரெஷ் கிரீம் செய்வது எப்படி ? | How to make fresh cream at home in tamil


வீட்டுல
 ஐஸ்கிரீம் செய்யணும்னு நினைக்கும் போதெல்லாம் பிரெஷ் கிரீம் / ஹெவி கிரீம் தேவைப்படும். நான் இருக்க இடத்துல அவ்ளோ சீக்கிரம் கிடைக்கிறது இல்ல. சரி வீட்டுலயே எப்படி கிரீம் செய்யலாம்னு இணையத்துல தேடித் தேடி ஒரு வழியே பிரெஷ் கிரீம் அப்புறம் ஹெவி கிரீம் வீட்டுல எப்படி செய்றதுன்னு ஒரு அளவுக்கு கண்டு புடிச்சிட்டேன்.இதை செய்றதுக்கு ஹோல் மில்க் னு மார்க்கெட்  சொல்லப்படுற பசும் பால் வேணும்,இதுல 3.5 % மாட்டுப் பாலோட கொழுப்பு சத்து இருக்கும். பெரும்பாலும் கடைகள்ல விக்கிற பால் எல்லாமே பாக்டீரியா வளராம இருக்கணும்னு காயவெச்ச உடனே குளிர வெச்ச பால், இதை வீட்டுல உபயோகப் படுத்தும் போது கிரீம்(பால் ஆடை) தனியா மேல மிதந்து வராது.

அதுனால வீட்டுல கிரீம் செய்யணும்னு நினைச்சா சுத்தமான பசும்பால் வாங்கி செஞ்சு பாருங்க. எங்க வீட்டுல மாடு இருக்கிறதுனால ஹெவி கிரீம் பண்ணனும்னா அப்பா கிட்ட சொல்லி நல்லா கொழுப்புள்ள பாலும், பிரெஷ் கிரீம் வேணும்னா ஒரு அளவுக்கு கொழுப்பு இருக்க பாலையும் கொண்டு வர சொல்லுவேன்

கிரீம் வகைகள் மார்க்கெட்- நிறைய இருக்கு அது என்ன என்னனு முதல்ல பாக்கலாம்.
1. 
ஹால்ப் அண்ட் ஹால்ப்  ஒரு பாதி பாலும் இன்னொரு பாதி கிரீமும் சேர்ந்தது. இதுல 10 - 12 % கொழுப்பு இருக்கும். இது பெரும்பாலும் காபி- உபயோகிப்பாங்க.
2. 
விப்பிங் கிரீம்: இதுல இருக்க 30 % வெண்ணெய்க்கொழுப்புப்பிரமாணம் கிரீம்- கலக்கும் போது கெட்டியா ஆக்கும். ஆனா இது ஹெவி கிரீம் அளவுக்கு கெட்டி ஆகாது.
3. 
பிரெஷ் கிரீம்(லைட் கிரீம்): இதுல 18 - 30 % கொழுப்பு இருக்கு. சூப், சாஸ் அப்புறம் நிறைய க்ரேவில கூட உபயோகிப்போம். 
4. 
ஹெவி கிரீம்(டபுள் கிரீம்): 36-40% கொழுப்பு இருக்கும். இதை நல்லா கலக்கலாம். கேக்- அலங்கரிக்க, ஐஸ்கிரீம் செய்றதுக்குனு நிறைய பதார்தங்கள்ல உபயோகப்படும்.

சரி இப்ப ஹெவி கிரீம் எப்படி செய்றதுன்னு பாக்கலாம்.

1. தினமும் பால் காயவைக்கும் போது, காய்ந்து பொங்கி வரும் பாலை மேலும் 5 நிமிடம் அடுப்பை சிம்மில் வைத்துக் காய்ச்சவும். இவ்வாறு செய்வதனால் கெட்டியான பால் ஆடை நமக்கு கிடைக்கும்.ஒரு அரைமணி நேரம் கழிச்சு பாலை எடுத்து பிரிட்ஜ்-இல் வைக்கவும்

2. பால் குளுமையானதும் ஆடை மேலே நன்றாக கட்டியிருக்கும் அதனை ஒரு காற்று புகாத டப்பாவில் போட்டு சேகரித்து வைக்கவும் தினமும் காலைல ராத்திரில ரெண்டு நேரமும் நான் சேகரிச்சு வைப்பேன்.
 3. தேவைப்படும் போது சேகரித்து வைத்துள்ள பால் ஆடையை விஷ்க் அல்லது கரண்டி கொண்டு 1-2 நிமிடம் கடைந்தால் ஹெவி கிரீம் தயார்:)கடையும் பொழுது கவனமாக இருக்கவும் ரொம்ப கடைந்தால் வெண்ணையாகிவிடும்.

வீட்டில் செய்த ஹெவி கிரீம்/ பிரெஷ் கிரீம் தயார்:)



படத்தில் இருப்பது ஹெவி கிரீம்.

என் குறிப்பு:
1. ஐஸ்கிரீம் செய்யும் போதோ இல்ல வேற ஏதாச்சும் பதார்த்தம் கிரீம் வெச்சு செய்யும் போதோ அதை ஹெவி கிரீம் வெச்சு செய்யணும்னு சொல்லிருந்தாங்கன்னா பயப்படாதீங்க இந்த கிரீமைவே நீங்க உபயோகிக்கலாம். சுவை-  பெருசா ஒரு வித்தியாசமும் வராது.
2. 
இதை செய்றதுக்கு கொழுப்புள்ள பால் தேவை. அதிக கொழுப்புள்ள பாலில் செஞ்சா அது ஹெவி கிரீம், ஒரு அளவுக்கு கொழுப்புள்ள பாலில் செஞ்சா பிரெஷ் கிரீம்.
3. ரொம்ப ஜாக்கிரதையா சேமிச்சு வைங்க இல்லைனா வாசம் அடிக்க ஆரம்பிச்சுரும் அப்புறம் அதை உபயோகிக்க முடியாது. வாசம் அடிச்சா அதை நல்லா கிடைஞ்சு வெண்ணை எடுதிறலாம்:D 
 4. 5-7 நாள் வரைக்கும் சேகரிக்க ஆடையை உபயோகித்தால் நன்றாக இருக்கும்.

Comments

Popular posts from this blog

எலுமிச்சை ஊறுகாய் - lemon pickle / traditional lemon pickle in tamil

அதிரசம் / இடி கச்சாயம் - Adhirasam / idi kachayam in tamil

புடலங்காய் கூட்டு | pudalangai kootu recipe in tamil | Snake gourd kootu in tamil