வாழைப்பூ வடை செய்வது எப்படி?

Image
வாழைப்பூ வடை செய்வது எப்படி புகைப்படத்துடன் கூடிய செய்முறை விளக்கம். கொங்கு மாவட்டங்களில் வடை பருப்பு ரொம்ப பிரசித்தம் ஆனால் மற்ற இடங்களில் வடை பருப்பு கிடைக்குமா என்று எனக்கு தெரிய வில்லை. எனவே நான் இங்கு கடலை பருப்பு கொண்டு வடை செய்துள்ளேன். நீங்கள் இருக்கும் இடத்தில வடை பருப்பு கிடைக்குமெனில் அதையே உபயோகிக்கவும். வாழைப்பூவின் மகத்துவத்தை நான் சொல்லித்தான் உங்களுக்கு தெரிய வேண்டும் என்பது இல்லை.   எப்பொழுது இதனை செய்வது என்று பார்க்கலாம். வாழைப்பூ வடை தயார் செய்யும் நேரம்  : 2 மணி நேரம்  சமைக்கும் நேரம் :  15 நிமிடம்    அளவு  :  15 - 18 வடை   தேவையான பொருட்கள் : வாழைப்பூ - 1 கப்  (சுத்தம் செய்து நறுக்கியது)  கடலை பருப்பு / வடை பருப்பு  - 3/4 kap சின்ன வெங்காயம் - 1/4 கப் பொடியாய் நறுக்கியது சோம்பு - 3/4 கப்  பெருங்காயம் - 1/4 kap உப்பு - தேவைகேற்ப பச்சை மிளகாய் - 2 -3 பொடியாக நறுக்கியது கருவேப்பில்லை  - 1 கொத்து கொத்தமல்லி இலை - 2 மேஜைகரண்டி  பொடியாக நறுக்கியது செமுறை விளக்...

தக்காளி தொக்கு | Thakkali thokku in tamil

தக்காளி விலை குறைஞ்சதுமே தக்காளி தொக்கு செய்யணும்னு முடிவு பண்ணிட்டேன். இது தோசை, இட்லி, சப்பாத்தி, தாலிச்ச சாப்பாடு எல்லாத்துக்குமே நல்லா இருக்கும். ஊறுகாய் மாதிரி இருக்கும்.

தேவையான பொருட்கள்:
தக்காளி - 1
கடுகு - 1 தேக்கரண்டி
கருவேப்பில்லை - 1 கொத்து
மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 1 மேஜைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
புளி - எலுமிச்சம் பழம் அளவு / 1-2 மேஜைக்கரண்டி (தேவைப்பட்டால்)
நல்லெண்ணெய் - 1 மேஜைக்கரண்டி
வெல்லம் - 1 மேஜைக்கரண்டி
வெந்தய தூள்  - 1/2 தேக்கரண்டி

1. ஒரு கிலோ தக்காளியை நன்கு தண்ணீரில் அலசி நடுவில் உள்ள கெட்டியான பகுதியை கத்தியால் எடுத்துவிடவும். இதை எடுப்பதும் எடுக்காததும் அவரவர் விருப்பம்.தண்டுப் பகுதி நீக்கியபின் சிறு சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.புளியை தண்ணீரில் ஊற வைத்து கெட்டியாக கரைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.


2. ஒரு கனமான கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு சேர்த்து பொரிந்த பிறகு கருவேப்பில்லை சேர்த்து பின் நறுக்கிய தக்காளி துண்டுகளை சேர்க்கவும்.

3. அதனுடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு சேர்த்து வதக்கவும். இப்பொழுது தக்காளி நன்கு தண்ணீர் விடும். தக்காளி வெந்து தொக்கு பதத்திற்கு வரும் பொழுது புளி கரைசலை அதனுடன் ஊற்றவும்.


4. தக்காளியில் உள்ள தண்ணீர் அனைத்தும் ஆவியாகி, எண்ணெய் திரிந்து மேலே மிதக்கும் வரை நன்கு வதக்கவும். அவ்வப்போது கிளறி விட்டுக் கொண்டே இருக்கவும் இல்லையெனில் அடிபிடித்து விடும்.

5. தக்காளியின் தண்ணீர் வற்றி எண்ணெய் மேலே மிதக்கும் பொழுது அடுப்பை அணைத்து வெல்லம் மற்றும் வெந்தயம் சேர்த்து கிளறினால் சுவையான தக்காளி தொக்கு தயார்.

இதனை தண்ணி இல்லாமல் நன்கு சுத்தம் செய்த கண்ணாடி பாட்டிலில் அல்லது ஒரு டப்பாவில் போட்டு வைத்துக் கொண்டு தேவைப்படும் போது உபயோகிக்கலாம்.

என் குறிப்பு:
1. ஒவ்வொரு முறை உபயோகிக்கும் போதும் சுத்தமான கரண்டி போட்டு உபயோகிக்கவும். இல்லையெனில் சீக்கிரம் கெட்டு விடும்
2. தக்காளியின் தண்ணீர் அனைத்தும் சுண்டும் வரை வதக்க வேண்டும்.
3. புலி சேர்ப்பது அவரவர் விருப்பம்.
4. நன்றாக தண்ணி சுண்டி சரியான முறையில் உபயோகித்தால் 7 முதல் 10 நாட்கள் வரை நன்றாக இருக்கும்.

Comments

Popular posts from this blog

எலுமிச்சை ஊறுகாய் - lemon pickle / traditional lemon pickle in tamil

அதிரசம் / இடி கச்சாயம் - Adhirasam / idi kachayam in tamil

புடலங்காய் கூட்டு | pudalangai kootu recipe in tamil | Snake gourd kootu in tamil