வாழைப்பூ வடை செய்வது எப்படி?

Image
வாழைப்பூ வடை செய்வது எப்படி புகைப்படத்துடன் கூடிய செய்முறை விளக்கம். கொங்கு மாவட்டங்களில் வடை பருப்பு ரொம்ப பிரசித்தம் ஆனால் மற்ற இடங்களில் வடை பருப்பு கிடைக்குமா என்று எனக்கு தெரிய வில்லை. எனவே நான் இங்கு கடலை பருப்பு கொண்டு வடை செய்துள்ளேன். நீங்கள் இருக்கும் இடத்தில வடை பருப்பு கிடைக்குமெனில் அதையே உபயோகிக்கவும். வாழைப்பூவின் மகத்துவத்தை நான் சொல்லித்தான் உங்களுக்கு தெரிய வேண்டும் என்பது இல்லை.   எப்பொழுது இதனை செய்வது என்று பார்க்கலாம். வாழைப்பூ வடை தயார் செய்யும் நேரம்  : 2 மணி நேரம்  சமைக்கும் நேரம் :  15 நிமிடம்    அளவு  :  15 - 18 வடை   தேவையான பொருட்கள் : வாழைப்பூ - 1 கப்  (சுத்தம் செய்து நறுக்கியது)  கடலை பருப்பு / வடை பருப்பு  - 3/4 kap சின்ன வெங்காயம் - 1/4 கப் பொடியாய் நறுக்கியது சோம்பு - 3/4 கப்  பெருங்காயம் - 1/4 kap உப்பு - தேவைகேற்ப பச்சை மிளகாய் - 2 -3 பொடியாக நறுக்கியது கருவேப்பில்லை  - 1 கொத்து கொத்தமல்லி இலை - 2 மேஜைகரண்டி  பொடியாக நறுக்கியது செமுறை விளக்...

சுலபமான வேர்க்கடலை லட்டு / Easy peanut ladoo in tamil

இந்த வேர்க்கடலை லட்டை அடிக்கடி வீட்டுல செஞ்சு வெச்சுக்கிறது உண்டு. பாகு காய்ச்சணும் பதம் பாக்கணும்ங்கிற டென்ஷன் எல்லாம் இல்லாம ரொம்ப ரொம்ப சுலபமா இதை செஞ்சிரலாம். ஒரு 10 நிமிசத்துல  லட்டு தயார் பண்ணிரலாம் . வேர்க்கடலையில் எண்ணற்ற சத்துக்கள் நிறைந்து இருக்கு. நம்ம முன்னோர்கள் எல்லாம் கடலை எண்ணெய் தான் நிறைய உபயோகிச்சாங்க. இப்ப மறுபடியும் எல்லாரும் ஆரோக்கிய உணவுப் பழக்கத்துக்கு மாறிட்டு வரதுனால கடலை எண்ணையின் உபயோகம் அதிகமாயிருக்குனு சொல்லலாம். வேர்கடலையில் உடலுக்கு தேவையான நல்ல கொழுப்பு சத்தும் அதனுடன் அதிகமான புரத சத்தும் இருக்கின்றது.

தேவையான பொருட்கள்:
வறுத்த வேர்க்கடலை - 1 கப்
வெல்லம்/கரும்பு சக்கரை - 3/4 கப்

1. முதலில் வறுத்த வேர்க்கடலையை எடுத்து ஒரு வாணலியில் போட்டு லேசாக வறுக்கவும். இவ்வாறு செய்வதனால் வேர்க்கடலையின் மேல் உள்ள தோலை நீக்குவது எளிதாக இருக்கும். வறுத்த கடலையை கைகளால் கசக்கினால் ஊதினால் மேல் தோல் எளிதாக வந்துவிடும்.


2. தோல் நீக்கிய கடலையை மிக்ஸியில் போட்டு கொரகொரப்பாக அரைக்கவும்(நைசாக வேண்டுமானாலும் அரைத்துக் கொள்ளலாம்).

3. அரைத்த கடலையுடன் வெல்லம் சேர்த்து படத்தில் உள்ளது போல் இரண்டும் சேர்ந்து திரண்டு வரும் வரை  மிக்ஸியை மெதுவான வேகத்தில் வைத்து அரைக்கவும்.
4.அரைத்த கலவையை ஒரு தட்டில் போட்டு சிறு சிறு உருண்டைகளாய் பிடித்தால் சத்தான சுவையான வேர்க்கடலை லட்டு தயார்! வேர்க்கடலை எண்ணெய் விடும் அதனால் உருண்டைகளாய் உருட்ட வேறு பொருட்கள் தேவை இல்லை.
லட்டை ஒரு சம்படத்தில்(டப்பாவில்) போட்டு சேமித்து வைக்கவும். ஆனால் அதற்கெல்லாம் அவசியம் இருக்காது என்று நினைக்கிறேன் ஏன் என்றால் ஒரே நாளில் இவை தீர்ந்துவிடும். குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.

என் குறிப்பு:
1. எனக்கு கொரகொரப்பாக இருப்பது பிடிக்கும் என்பதனால் கொரகொரப்பாக அரைத்துள்ளேன் நீங்கள் உங்களுக்கு பிடித்தால் மையாக அரைத்துக் கொள்ளலாம்.
2. இதனுடன் தேவைப்பட்டால் ஏலக்காய் பொடி மற்றும் நெய் கொஞ்சம் சேர்த்தும் அரைத்துக் கொள்ளலாம்.
3.வெல்லத்திற்கு பதிலாக கரும்பு சக்கரையும் உபயோகிக்கலாம்.

Comments

Popular posts from this blog

எலுமிச்சை ஊறுகாய் - lemon pickle / traditional lemon pickle in tamil

அதிரசம் / இடி கச்சாயம் - Adhirasam / idi kachayam in tamil

புடலங்காய் கூட்டு | pudalangai kootu recipe in tamil | Snake gourd kootu in tamil