வாழைப்பூ வடை செய்வது எப்படி?

Image
வாழைப்பூ வடை செய்வது எப்படி புகைப்படத்துடன் கூடிய செய்முறை விளக்கம். கொங்கு மாவட்டங்களில் வடை பருப்பு ரொம்ப பிரசித்தம் ஆனால் மற்ற இடங்களில் வடை பருப்பு கிடைக்குமா என்று எனக்கு தெரிய வில்லை. எனவே நான் இங்கு கடலை பருப்பு கொண்டு வடை செய்துள்ளேன். நீங்கள் இருக்கும் இடத்தில வடை பருப்பு கிடைக்குமெனில் அதையே உபயோகிக்கவும். வாழைப்பூவின் மகத்துவத்தை நான் சொல்லித்தான் உங்களுக்கு தெரிய வேண்டும் என்பது இல்லை.   எப்பொழுது இதனை செய்வது என்று பார்க்கலாம். வாழைப்பூ வடை தயார் செய்யும் நேரம்  : 2 மணி நேரம்  சமைக்கும் நேரம் :  15 நிமிடம்    அளவு  :  15 - 18 வடை   தேவையான பொருட்கள் : வாழைப்பூ - 1 கப்  (சுத்தம் செய்து நறுக்கியது)  கடலை பருப்பு / வடை பருப்பு  - 3/4 kap சின்ன வெங்காயம் - 1/4 கப் பொடியாய் நறுக்கியது சோம்பு - 3/4 கப்  பெருங்காயம் - 1/4 kap உப்பு - தேவைகேற்ப பச்சை மிளகாய் - 2 -3 பொடியாக நறுக்கியது கருவேப்பில்லை  - 1 கொத்து கொத்தமல்லி இலை - 2 மேஜைகரண்டி  பொடியாக நறுக்கியது செமுறை விளக்...

பொரி உருண்டை | pori urundai / Puffed rice ball recipe in tamil

சின்ன வயசுல நம்மளோட நொறுக்குத் தீனி பெரும்பாலும் பொரி தான். பொரி உருண்டை ஒன்னு ரெண்டு மூணுன்னு கணக்கே இல்லாம சாப்பிட்ட நாட்கள் உண்டு. என்னோட பையனுக்கு பொரி பிடிக்கும் ஆனா அவன் ஒரு கை எடுத்து சாப்ட்டா ஒரே ஒரு பொரி மட்டும் தான் வாய்க்குள்ள போகும் மத்தது எல்லாம் தரையில தான் கிடைக்கும். அதான் அவன் பிடிச்சு சாப்பிடுற மாதிரி இருக்குமேன்னு இந்த பொரி உருண்டை செஞ்சேன். கார்த்திகை தீபம் ஸ்பெஷல்-அ அப்படியே இந்த பொரி உருண்டையா இங்க போடவும் செஞ்சுட்டேன்.


என் குட்டி பையனோட கை பொரி உருண்டையை எடுக்க தயாரா இருக்கு :D

பொரி  உருண்டை

தயார்செய்யும் நேரம்:5 நிமிடம்| சமைக்கும் நேரம் : 15 நிமிடம் அளவு :5 உருண்டை  | எந்தவகை சமையல்: இந்திய உணவு

தேவையான பொருட்கள்:

பொரி  -1.5 கப்

கட்டி வெல்லம் துருவியது  - 1/4 கப் (கோபுரமாக )

ஏலக்காய் தூள் - 1/4 தேக்கரண்டி

தண்ணீர்   - 2 மேஜைக்கரண்டி


செய்முறை விளக்கம்:
  1. ஒரு வடசட்டியில் துருவிய வெல்லம் மற்றும் தண்ணீர் சேர்த்து மிதமான சூட்டில் வைத்து கரையும் வரை விடவும். கரைந்தவுடன் அதில் உள்ள தூசிகள் நீக்குவதற்கு வடிகட்டிக் கொள்ளவும். பின் மறுபடியும் வடிகட்டிய வெல்ல பாகை வடசட்டியில் வைத்து மிதமான சூட்டில் நன்றாக காய்ச்சவும்.

  2. உருண்டைப் பதம் வரும் வரை இடை விடாமல் கிளரிக் கொண்டே இருக்கவும். சில நிமிடங்களில் சற்று கெட்டியாக ஆரம்பிக்கும். ஒரு கிண்ணத்தில் சிறிதளவு தண்ணீர் வைத்துக் கொள்ளவும். தண்ணீரில் சிறிதளவு பாகை ஊற்றினால் கரையாமல் இருந்து அதை ஒன்று திரட்டி சிறு உருண்டை செய்ய முடிந்தால் அது தான் உருண்டை பதம் .

  3. உருண்டை பதம் வந்ததும் உடனே தாமதிக்காமல் அடுப்பை அணைத்து அதில் பொரி மற்றும் ஏலக்காய் தூள் சேர்த்து நன்கு கிளறி சூடு சற்று ஆறியதும் ஒரு கைப்பிடி அளவு எடுத்து நன்றாக கைகளை அழுத்தி உருண்டைகள் பிடிக்கவும்.

சுவையான குழந்தைகளுக்கான மாலை நேர நொறுக்குத் தீனி தயார்:)


என் குறிப்பு:
1. பொரி உருண்டை பிடிக்கும் பொழுது நன்றாக அழுத்திப் பிடிக்கவும்.
2. மொறு மொறுவென்று இருக்கும் பொறியை உபயோகிக்கவும் அப்பொழுது தான் சுவை நன்றாக இருக்கும்.

Comments

Popular posts from this blog

எலுமிச்சை ஊறுகாய் - lemon pickle / traditional lemon pickle in tamil

அதிரசம் / இடி கச்சாயம் - Adhirasam / idi kachayam in tamil

புடலங்காய் கூட்டு | pudalangai kootu recipe in tamil | Snake gourd kootu in tamil