கோடை காலம் வந்தாலே முதல்ல சாப்பிடணும்னு தோன்ற விஷயம் ஐஸ் கிரீம் அதுலயும் சாக்லேட் ஐஸ் கிரீம் பார்த்தா ஒரு டப்பாவையே காலி பன்னிரலாம்னு இருக்கும். வெயிலுக்கு ஜில்லுனு தொண்டைக்குள்ள ஐஸ் கிரீம் போகும் போது அடடா அந்த அனுபவமே தனி சொர்கம் :D. அதுவும் அதை நம்மளே சிரத்தை எடுத்து பண்ணி வீட்டுல இருக்கவங்களுக்கு குடுத்து அவங்க சாப்பிடுறத ரசிக்கிறது இன்னொரு ஆனந்த அனுபவம் தன். சரி வாங்க இப்ப இந்த ஐஸ்கிரீம் எப்படி செய்றதுன்னு பாக்கலாம்.
தேவையான பொருட்கள்:
பால் - 1/2 கப்(காய்ச்சி குளிர வைத்தது)
கோகோ பவுடர் - 1/4 கப்(கோபுரமாக) / 6 மேஜைக்கரண்டி
இன்ஸ்டன்ட் காபி தூள் - 1/2 தேக்கரண்டி
சக்கரை - 1/2 கப்
கரும்பு சக்கரை - 1/4 கப்
உப்பு - 1/4 தேக்கரண்டி
வெண்ணிலா எசென்ஸ் - 1/4 தேக்கரண்டி
சாக்லேட் சிப்ஸ் - 1 மேஜைக்கரண்டி (தேவைப்பட்டால்)
செய்முறை விளக்கம்:
- ஒரு அகன்ற பாத்திரத்தில் கோகோ பவுடர், சக்கரை, நாட்டு சக்கரை (கரும்பு சக்கரை), இன்ஸ்டன்ட் காபி தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலக்கவும்.
- பின் அதனுடன் காய்ச்சி 2 மணி நேரம் பிரிட்ஜ் - ல வைத்து குளிர வைத்த பால் சேர்த்து கலக்கவும்.
- இதனுடன் ஹெவி கிரீம் மற்றும் வெண்ணிலா எசென்ஸ்சேர்த்து நன்கு கலக்கவும்.
- இந்தக் கலவையை ஒரு காற்றுப் புகாத பிளாஸ்டிக் டப்பாவில் போட்டு ப்ரீசரில் 3 மணி நேரம் வைக்கவும். மூன்று மணி நேரம் கழித்து ஐஸ்கிரீம் கலவையை மிக்ஸி ஜாரில் எடுத்து ஒரு 15-30 நொடிகள் வரை குறைவான வேகத்தில் அடித்து மீண்டும் டப்பாவில் போட்டு ப்ரீசரில் வைக்கவும்.
- இதே போல் ஒவ்வொரு 3 மணி நேரத்திற்கு ஒரு முறை மிக்ஸியில் போட்டு நன்றாக கலக்கி ப்ரீசரில் வைக்கவும். இது போன்று 3 முறை செய்யவும்.இவ்வாறு செய்வதனால் கட்டி சேர்வது தவிர்க்கப்படும் மேலும் ஐஸ்கிரீம் சாப்பிடுவதற்கு மென்மையாக இருக்கும். பின் இதில் சாக்லேட் சிப்ஸ் சேர்த்து கலக்கி ஒரு இரவு முழுவதும் பிரீசரில் வைக்கவும்.
சுவையான சாக்லேட் ஐஸ்கிரீம் தயார்! ஒரு கரண்டி அல்லது ஐஸ் கிரீம் ஸ்கூப் கொண்டு எடுத்து பரிமாறவும்.
என் குறிப்பு:
1. பிரீசரை அதிகமான குளிர்ச்சியில் வைக்கவும்.
2. பாலை காய்ச்சி பின் பிரிட்ஜ் - ல 2 மணி நேரம் வைத்து குளிர்வித்து சேர்க்கவும்.
3. மிக்ஸியில் போட்டு 15 - 30 நொடி வரை சுற்றினால் போதுமானது. அதற்க்கு மேல் சுற்றினால் கிரீம் வெண்ணை ஆவதற்கு வாய்ப்புகள் அதிகம், எனவே கவனம் தேவை.
4. நான் இம்முறை வீட்டில் செய்த
ஹெவி கிரீம் கொண்டு செய்தேன். நீங்கள் அமுல் ஹெவி கிரீம் கொண்டு செய்து பாருங்கள். இல்லையெனில் 35% மேல் கொழுப்புள்ள எந்த கிரீம் வேண்டுமானாலும் உபயோகிக்கலாம்.
5. நன் ப்ரூ இன்ஸ்டன்ட் காபி தூள் பயன்படுத்தினேன். நீங்கள் எந்த ஒரு இன்ஸ்டன்ட் தூள் வேண்டுமென்றாலும் பயன்படுத்தலாம்.
Comments
Post a Comment