வாழைப்பூ வடை செய்வது எப்படி?
வாழைப்பூ வடை செய்வது எப்படி புகைப்படத்துடன் கூடிய செய்முறை விளக்கம். கொங்கு மாவட்டங்களில் வடை பருப்பு ரொம்ப பிரசித்தம் ஆனால் மற்ற இடங்களில் வடை பருப்பு கிடைக்குமா என்று எனக்கு தெரிய வில்லை. எனவே நான் இங்கு கடலை பருப்பு கொண்டு வடை செய்துள்ளேன். நீங்கள் இருக்கும் இடத்தில வடை பருப்பு கிடைக்குமெனில் அதையே உபயோகிக்கவும்.
வாழைப்பூவின் மகத்துவத்தை நான் சொல்லித்தான் உங்களுக்கு தெரிய வேண்டும் என்பது இல்லை.
எப்பொழுது இதனை செய்வது என்று பார்க்கலாம்.
வாழைப்பூ - 1 கப் (சுத்தம் செய்து நறுக்கியது)
கடலை பருப்பு / வடை பருப்பு - 3/4 kap
சின்ன வெங்காயம் - 1/4 கப் பொடியாய் நறுக்கியது
சோம்பு - 3/4 கப்
பெருங்காயம் - 1/4 kap
உப்பு - தேவைகேற்ப
பச்சை மிளகாய் - 2 -3 பொடியாக நறுக்கியது
கருவேப்பில்லை - 1 கொத்து
கொத்தமல்லி இலை - 2 மேஜைகரண்டி பொடியாக நறுக்கியது
செமுறை விளக்கம்:
மொரு மொரு வடை....
என் குறிப்பு:
1. சின்ன வெங்காயத்திற்கு பதில் பெரிய வெங்காயம் உபயோகிக்கலாம்.
வாழைப்பூவின் மகத்துவத்தை நான் சொல்லித்தான் உங்களுக்கு தெரிய வேண்டும் என்பது இல்லை.
எப்பொழுது இதனை செய்வது என்று பார்க்கலாம்.
வாழைப்பூ வடை
தயார் செய்யும் நேரம் :2 மணி நேரம்
சமைக்கும் நேரம் : 15 நிமிடம்
அளவு : 15 - 18 வடை
தேவையான பொருட்கள் :சமைக்கும் நேரம் : 15 நிமிடம்
அளவு : 15 - 18 வடை
வாழைப்பூ - 1 கப் (சுத்தம் செய்து நறுக்கியது)
கடலை பருப்பு / வடை பருப்பு - 3/4 kap
சின்ன வெங்காயம் - 1/4 கப் பொடியாய் நறுக்கியது
சோம்பு - 3/4 கப்
பெருங்காயம் - 1/4 kap
உப்பு - தேவைகேற்ப
பச்சை மிளகாய் - 2 -3 பொடியாக நறுக்கியது
கருவேப்பில்லை - 1 கொத்து
கொத்தமல்லி இலை - 2 மேஜைகரண்டி பொடியாக நறுக்கியது
செமுறை விளக்கம்:
- கடலை பருப்பை நன்கு களைந்து, 2 மணி நேரம் தண்ணீர் ஊற்றி ஊற வெய்க்கவும். பின் அதனில் உள்ள தண்ணீரை வடித்து மிக்ஸ்சி ஜாரில் எடுத்து தேவையான அளவு உப்பு சேர்த்து அரைக்கவும்.
- பல்ஸ் அல்லது ரிவெர்ஸ் மோடில் அரைக்கவும்(தண்ணீர் சேர்க்கவேண்டாம்), கொரகொரப்பாக அரைக்கவும். அதனுடன் நறுக்கிய வாழைப்பூ மற்றும் சோம்பு சேர்க்கவும்.
- இதனை மறுபடியும் லேசாக அரைக்கவும். அரைத்த விழுதை ஒரு பத்திரத்தில் போட்டு அதனுடன் நறுக்கிய வெங்காயம் , பச்சை மிளகாய் , பெருங்காயம் , கொத்தமல்லி இலை மற்றும் கருவேப்பில்லை சேர்த்து நன்கு கலக்கவும்.
- நன்கு கலந்த பின்பு ஒரு எலுமிச்சை அளவு உருண்டை எடுத்து வடை போல் தட்டவும், வடை போல் வரவில்லையெனில், சிறிதளவு தண்ணி தெளித்து மாவை பிசைந்து பின்வ வடை போல் தட்டவும்.
- அதனை சூடான எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும். எண்ணெய் சூடாகிவிட்டதா என்று தெரிந்து கொள்ள ஒரு சின்ன உருண்டையை எண்ணெயில் போட்டு பார்க்கவும் அது உடனே மேலே வந்தால் எண்ணெய் சூடாகி விட்டதென்று அர்த்தம். மீதமுள்ள மாவு அனைத்திலும் இவ்வாறு ஒரு தடவையில் 4-5 வடைகளை எண்ணெயில் போட்டு பொரிக்கவும். உஸ்ஸ்ஸ் சத்தம் எண்ணெயில் அடங்கியதும் வடையை எண்ணெயில் இருந்து எடுத்து பரிமாறவும்.
மொரு மொரு வடை....
என் குறிப்பு:
1. சின்ன வெங்காயத்திற்கு பதில் பெரிய வெங்காயம் உபயோகிக்கலாம்.
Comments
Post a Comment