வாழைப்பூ வடை செய்வது எப்படி?

Image
வாழைப்பூ வடை செய்வது எப்படி புகைப்படத்துடன் கூடிய செய்முறை விளக்கம். கொங்கு மாவட்டங்களில் வடை பருப்பு ரொம்ப பிரசித்தம் ஆனால் மற்ற இடங்களில் வடை பருப்பு கிடைக்குமா என்று எனக்கு தெரிய வில்லை. எனவே நான் இங்கு கடலை பருப்பு கொண்டு வடை செய்துள்ளேன். நீங்கள் இருக்கும் இடத்தில வடை பருப்பு கிடைக்குமெனில் அதையே உபயோகிக்கவும். வாழைப்பூவின் மகத்துவத்தை நான் சொல்லித்தான் உங்களுக்கு தெரிய வேண்டும் என்பது இல்லை.   எப்பொழுது இதனை செய்வது என்று பார்க்கலாம். வாழைப்பூ வடை தயார் செய்யும் நேரம்  : 2 மணி நேரம்  சமைக்கும் நேரம் :  15 நிமிடம்    அளவு  :  15 - 18 வடை   தேவையான பொருட்கள் : வாழைப்பூ - 1 கப்  (சுத்தம் செய்து நறுக்கியது)  கடலை பருப்பு / வடை பருப்பு  - 3/4 kap சின்ன வெங்காயம் - 1/4 கப் பொடியாய் நறுக்கியது சோம்பு - 3/4 கப்  பெருங்காயம் - 1/4 kap உப்பு - தேவைகேற்ப பச்சை மிளகாய் - 2 -3 பொடியாக நறுக்கியது கருவேப்பில்லை  - 1 கொத்து கொத்தமல்லி இலை - 2 மேஜைகரண்டி  பொடியாக நறுக்கியது செமுறை விளக்...

கேரட் சட்னி

தேவையான பொருட்கள்:


வறுத்து அரைப்பதற்கு:
கேரட்– 2 கப்(துருவியது)
வர மிளகாய் – 2 - 3
கடலை பருப்பு – 1.5 மேஜைக்கரண்டி
உளுத்தம் பருப்பு – 1 தேக்கரண்டி
சின்ன வெங்காயம் – 10-12
பூண்டு – 3 பல்
இஞ்சி – 1 தேக்கரண்டி
புளி - 1 தேக்கரண்டி
தேங்காய் - 1 மேஜைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் – 2 தேக்கரண்டி
தாளிப்பதற்கு:
எண்ணெய் - 1 தேக்கரண்டி
கடுகு – 1/2 தேக்கரண்டி
கருவேப்பில்லை – 1 கொத்து
உளுத்தம் பருப்பு – 1/4 தேக்கரண்டி
பெருங்காய தூள் - ஒரு சிட்டிகை


தேவையான பொருட்களை எடுத்து வைக்கவும்

செய்முறை விளக்கம்:
1.   கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடலை பருப்பு பின் உளுத்தம் பருப்பு,வர மிளகாய், பூண்டு சேர்த்து வதக்கவும். கடலை பருப்பு கருகாமல் பொன்னிறமாக வறுக்கவும். பின் சின்ன வெங்காயம் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.

2.   வெங்காயம் வதங்கியதும் துருவிய கேரட், உப்பு சேர்த்து மிதமான சூட்டில் 5 நிமிடம் அல்லது கேரட்டுடைய பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். வதக்கும் போது கேரட் அளவில் சுருங்குவதை நீங்கள் பார்க்கலாம். பின் தேங்காய் புளி சேர்த்து ஒரு கிளறு கிளறி அடுப்பை அணைக்கவும். தேங்காய் வேண்டாமென்றால் சேர்க்காமல் அப்படியே அரைக்கலாம்.


 3.       பின்பு அனைத்தையும் மிக்ஸியில் போட்டு சிறிது தண்ணீர் ஊற்றி அரைத்துக் கொள்ளவும்.



4.       கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு சேர்த்து பொரிந்ததும் உளுத்தம் பருப்பு, கருவேப்பில்லை, பெருங்காய தூள் சேர்த்து அதனை அரைத்து வைத்துள்ள சட்னியில் சேர்த்து கலந்தால் சுவையான கேரட் சட்னி ரெடி  !

கேரட் சட்னி

Comments

Popular posts from this blog

எலுமிச்சை ஊறுகாய் - lemon pickle / traditional lemon pickle in tamil

அதிரசம் / இடி கச்சாயம் - Adhirasam / idi kachayam in tamil

புடலங்காய் கூட்டு | pudalangai kootu recipe in tamil | Snake gourd kootu in tamil