வாழைப்பூ வடை செய்வது எப்படி?

Image
வாழைப்பூ வடை செய்வது எப்படி புகைப்படத்துடன் கூடிய செய்முறை விளக்கம். கொங்கு மாவட்டங்களில் வடை பருப்பு ரொம்ப பிரசித்தம் ஆனால் மற்ற இடங்களில் வடை பருப்பு கிடைக்குமா என்று எனக்கு தெரிய வில்லை. எனவே நான் இங்கு கடலை பருப்பு கொண்டு வடை செய்துள்ளேன். நீங்கள் இருக்கும் இடத்தில வடை பருப்பு கிடைக்குமெனில் அதையே உபயோகிக்கவும். வாழைப்பூவின் மகத்துவத்தை நான் சொல்லித்தான் உங்களுக்கு தெரிய வேண்டும் என்பது இல்லை.   எப்பொழுது இதனை செய்வது என்று பார்க்கலாம். வாழைப்பூ வடை தயார் செய்யும் நேரம்  : 2 மணி நேரம்  சமைக்கும் நேரம் :  15 நிமிடம்    அளவு  :  15 - 18 வடை   தேவையான பொருட்கள் : வாழைப்பூ - 1 கப்  (சுத்தம் செய்து நறுக்கியது)  கடலை பருப்பு / வடை பருப்பு  - 3/4 kap சின்ன வெங்காயம் - 1/4 கப் பொடியாய் நறுக்கியது சோம்பு - 3/4 கப்  பெருங்காயம் - 1/4 kap உப்பு - தேவைகேற்ப பச்சை மிளகாய் - 2 -3 பொடியாக நறுக்கியது கருவேப்பில்லை  - 1 கொத்து கொத்தமல்லி இலை - 2 மேஜைகரண்டி  பொடியாக நறுக்கியது செமுறை விளக்...

பன்னீர் தோசை | Paneer dosa in tamil

இப்ப எல்லாருமே பன்னீர் உபயோகிக்க ஆரம்பிச்சுட்டோம். கால்சியம் பன்னீர்-ல நிறைஞ்சு இருக்கு. குழந்தைகளுக்கு பன்னீர் ரொம்பவே பிடிச்சமான உணவாயிடுச்சு, இந்த மாதிரி செஞ்சு கொடுத்தா குஷியா சாப்பிடுவாங்க. என் அக்கா பையனுக்கு ரொம்ப பிடிக்கும்.வாரத்துல ஒரு தடவையாச்சும் இந்த தோசை செய்றது வழக்கம். அதுமட்டும் இல்லாம வீட்டுல பன்னீர் செய்றது ரொம்பவும் சுலபம், கடைக்கு போய் பன்னீர் வாங்கணும்ங்கிற அலைச்சல் இல்ல.


பன்னீர் தோசை


தயார்செய்யும் நேரம்
 : 10 நிமிடம் | சமைக்கும் நேரம் : 10 நிமிடம்

அளவு 
:3-4 தோசை | உணவு வகை : இந்திய உணவு

தேவையான பொருட்கள்:
பன்னீர் - 100 - 150 கிராம்
ஜீரகம் - 1/2 தேக்கரண்டி
பெரிய வெங்காயம் - 1
தக்காளி - 1
கருவேப்பில்லை - ஒரு கொத்து
உப்பு - தேவையான அளவு
மிளகாய் தூள் - 1/4 - 1/2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/8 தேக்கரண்டி
பச்சை மிளகாய் -1





செய்முறை விளக்கம்:

  1. பன்னீரை துருவிக் கொள்ளவும். வெங்காயம்,பச்சை மிளகாய், கருவேப்பில்லை மற்றும் தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சீரகம் போட்டு பொரிந்தவுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், கருவேப்பில்லை சேர்த்து வதக்கவும்.



  2. வெங்காயம் வதங்கிய பின்பு தக்காளி சேர்த்து குலையும் வரை வதக்கி அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து 1 நிமிடம் வதக்கவும். பின் கடைசியாக துருவிய பன்னீர் சேர்த்து கிளறவும்.



  3. பன்னீர் பூரணம் தயார். தோசைக் கல்லில் தோசை ஊற்றி சுற்றிலும் என்னை விடவும்..ஒரு புறம் தான் வேகவைக்கப் போகிறோம் எனவே சட்டுகம்/தோசைதிருப்பி கொண்டு தோசை மேலே சமன் செய்து விடவும்.



  4. தோசை வெந்த பிறகு பன்னீர் பூரணத்தை தோசைக்கு நடுவில் வைத்து இரண்டாக மடக்கி எடுத்தால் பன்னீர் தோசை தயார்.



சுவையான பன்னீர் தோசை தயார்:)

என் குறிப்பு:
1. சிறிதளவு கரம் மசாலா தூள் கூட சேர்த்துக் கொள்ளலாம்.

Comments

Popular posts from this blog

எலுமிச்சை ஊறுகாய் - lemon pickle / traditional lemon pickle in tamil

அதிரசம் / இடி கச்சாயம் - Adhirasam / idi kachayam in tamil

புடலங்காய் கூட்டு | pudalangai kootu recipe in tamil | Snake gourd kootu in tamil