வாழைப்பூ வடை செய்வது எப்படி?

Image
வாழைப்பூ வடை செய்வது எப்படி புகைப்படத்துடன் கூடிய செய்முறை விளக்கம். கொங்கு மாவட்டங்களில் வடை பருப்பு ரொம்ப பிரசித்தம் ஆனால் மற்ற இடங்களில் வடை பருப்பு கிடைக்குமா என்று எனக்கு தெரிய வில்லை. எனவே நான் இங்கு கடலை பருப்பு கொண்டு வடை செய்துள்ளேன். நீங்கள் இருக்கும் இடத்தில வடை பருப்பு கிடைக்குமெனில் அதையே உபயோகிக்கவும். வாழைப்பூவின் மகத்துவத்தை நான் சொல்லித்தான் உங்களுக்கு தெரிய வேண்டும் என்பது இல்லை.   எப்பொழுது இதனை செய்வது என்று பார்க்கலாம். வாழைப்பூ வடை தயார் செய்யும் நேரம்  : 2 மணி நேரம்  சமைக்கும் நேரம் :  15 நிமிடம்    அளவு  :  15 - 18 வடை   தேவையான பொருட்கள் : வாழைப்பூ - 1 கப்  (சுத்தம் செய்து நறுக்கியது)  கடலை பருப்பு / வடை பருப்பு  - 3/4 kap சின்ன வெங்காயம் - 1/4 கப் பொடியாய் நறுக்கியது சோம்பு - 3/4 கப்  பெருங்காயம் - 1/4 kap உப்பு - தேவைகேற்ப பச்சை மிளகாய் - 2 -3 பொடியாக நறுக்கியது கருவேப்பில்லை  - 1 கொத்து கொத்தமல்லி இலை - 2 மேஜைகரண்டி  பொடியாக நறுக்கியது செமுறை விளக்...

பாலக்கீரை முட்டை புர்ஜி/பாலக் முட்டை பொரியல் | palak egg bhurji/fry/poriyal recipe in tamil

கீரையில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் அடங்கி உள்ளன. வாரத்தில் இரண்டு முறையேனும் கீரை சேர்த்துக் கொள்வது நல்லது. வெறும் பாலக்கீரை செய்து கொடுத்தால் சிலருக்கு பிடிக்காது சாப்பிட சிரமப்படுவர் , அவர்களுக்கு இவ்வாறு செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். அதிலும் முட்டை சேர்த்துள்ளதால் இரட்டை  உற்சாகம் பொங்கும். இதனை சப்பாத்தியுடன் சாப்பிட அருமையாக இருக்கும்.


நீங்கள் பாலக்கீரை பிரியர் என்றால் எனது பாலக் முறுக்கை செய்து பாருங்கள்.

பாலக்கீரை முட்டை புர்ஜி

தயார்செய்யும் நேரம்:10 நிமிடம் | சமைக்கும் நேரம் : 10 நிமிடம் அளவு : 2 பேர் சாப்பிடலாம் | எந்தவகை சமையல்: இந்திய உணவு
தேவையான பொருட்கள்:  

பாலக்கீரை - 2 கப்
முட்டை -2-3
 பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கிக் கொள்ளவும்)
தக்காளி - 1 (பொடியாக நறுக்கிக்கொள்ளவும்)
கருவேப்பில்லை - 1 கொத்து
பச்சைமிளகாய் - 1 (பொடியாக நறுக்கிக்கொள்ளவும்)
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 1/2 - 3/4 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு 
எண்ணெய் - 2 தேக்கரண்டி

 செய்முறை விளக்கம்:
  1. பாலக்கீரையை நீரில் சுத்தமாக அலசி பொடியாக நறுக்கிக் கொள்ளவும் . அதே போல் வெங்காயம் , தக்காளி, கருவேப்பில்லை , பச்சை மிளகாய் அனைத்தையும் பொடியாக நறுக்கி வைக்கவும். ஒரு கிண்ணத்தில் முட்டையை உடைத்து ஊற்றி நன்றாக கலக்கி வைத்துக் கொள்ளவும்.
  2. ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி  காய்ந்ததும் கடுகு சேர்த்து பெரிய விடவும் பின் அதில் பச்சை மிளகாய் , கருவேப்பில்லை சேர்த்து வதக்கி , வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். வெங்காயம் வதங்கியவுடன் தக்காளி சேர்த்து வதக்கவும்.(வெங்காயம் சீக்கிரம் வதங்க சிறிது உப்பு சேர்த்து வதக்கவும்)
  3. தக்காளி தோல்சுருங்க வதங்கியவுடன் நறுக்கிய பாலக்கீரை, மஞ்சள் தூள், கீரைக்குத் தேவையான உப்பு சேர்த்து 5  நிமிடம் வரை மிதமான தீயில் வதக்கவும்.
  4. கீரை வதங்கியவுடன் கலக்கி வைத்துள்ள முட்டை சேர்த்து அதனுடன் மிளகாய் தூள் மற்றும் முட்டைக்குத் தேவையான உப்பு சேர்த்து வறுக்கவும்.(உப்பு சேர்க்கும் பொழுது கவனம் தேவை  ஏனெனில் ஏற்கனவே கீரைக்கு சேர்த்துள்ளோம் அதை நினைவில் கொள்ளவும்). முட்டை பச்சை வாசனை போய் வாணலியில் ஒட்டாமல் வரும் வரை வதக்கினால் பாலக் முட்டை  புர்ஜி தயார் .
சுவையான பாலக் முட்டை பொரியல் தயார் !!!!


என் குறிப்பு:
1. பாலக்கீரை நசநசவென்று வேகத் தேவையில்லை.
2. முட்டை உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப கூட்டியோ  அல்லது குறைத்தோ சேர்த்துக் கொள்ளவும்

Comments

Post a Comment

Popular posts from this blog

எலுமிச்சை ஊறுகாய் - lemon pickle / traditional lemon pickle in tamil

அதிரசம் / இடி கச்சாயம் - Adhirasam / idi kachayam in tamil

புடலங்காய் கூட்டு | pudalangai kootu recipe in tamil | Snake gourd kootu in tamil