வாழைப்பூ வடை செய்வது எப்படி?

Image
வாழைப்பூ வடை செய்வது எப்படி புகைப்படத்துடன் கூடிய செய்முறை விளக்கம். கொங்கு மாவட்டங்களில் வடை பருப்பு ரொம்ப பிரசித்தம் ஆனால் மற்ற இடங்களில் வடை பருப்பு கிடைக்குமா என்று எனக்கு தெரிய வில்லை. எனவே நான் இங்கு கடலை பருப்பு கொண்டு வடை செய்துள்ளேன். நீங்கள் இருக்கும் இடத்தில வடை பருப்பு கிடைக்குமெனில் அதையே உபயோகிக்கவும். வாழைப்பூவின் மகத்துவத்தை நான் சொல்லித்தான் உங்களுக்கு தெரிய வேண்டும் என்பது இல்லை.   எப்பொழுது இதனை செய்வது என்று பார்க்கலாம். வாழைப்பூ வடை தயார் செய்யும் நேரம்  : 2 மணி நேரம்  சமைக்கும் நேரம் :  15 நிமிடம்    அளவு  :  15 - 18 வடை   தேவையான பொருட்கள் : வாழைப்பூ - 1 கப்  (சுத்தம் செய்து நறுக்கியது)  கடலை பருப்பு / வடை பருப்பு  - 3/4 kap சின்ன வெங்காயம் - 1/4 கப் பொடியாய் நறுக்கியது சோம்பு - 3/4 கப்  பெருங்காயம் - 1/4 kap உப்பு - தேவைகேற்ப பச்சை மிளகாய் - 2 -3 பொடியாக நறுக்கியது கருவேப்பில்லை  - 1 கொத்து கொத்தமல்லி இலை - 2 மேஜைகரண்டி  பொடியாக நறுக்கியது செமுறை விளக்...

பாலக் கீரை முறுக்கு

கைவசம் அரிசி மாவும் உளுந்து மாவும் கூடவே பாலக் கீரையும் இருந்தா இதை சுலபமாக செய்திடலாம். பச்சை கலர்-ல முறுக்கு இருந்தா எந்தக் குழந்தைக்கு தான் பிடிக்காது.


தேவையான பொருட்கள்:
பாலக் கீரை - 15 - 20 (1/2 கப் அரைத்த விழுது)
அரிசி மாவு - 1 கப்
உளுந்து மாவு - 2 மேஜைக்கரண்டி
எள்ளு - 1/4 தேக்கரண்டி
மிளகாய்த் தூள் - 1/4 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
வெண்ணெய் - 1 மேஜைக்கரண்டி

செய்முறை விளக்கம்:
1. பாலக் கீரையை தண்ணீரில் அலசி தண்டை நீக்கிட்டு இலையை மட்டும் வெட்டி எடுத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி சூடானதும் அதில் பாலக் இலைகளை போட்டு 2 நிமிடம் விடவும்.

2. பின் பாலக் கீரையை வடிகட்டி, அதனை பச்சைத் தண்ணீரில் முக்கி எடுத்து அல்லது ஓடும் தண்ணீரில் அலசி எடுத்து வைக்கவும்.



3. பின் கீரையை தனியே எடுத்து மிக்ஸியில் போட்டு மையாக அரைத்துக் கொள்ளவும். தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் தெளித்து அரைத்துக் கொள்ளலாம்.


4. ஒரு பாத்திரத்தில் அரிசிமாவு,உளுந்து மாவு,எள்ளு,உப்பு,மிளகாய்த் தூள் அனைத்தும் சேர்த்து நன்கு கலக்கிக் கொள்ளவும். பின் அதனுடன் வெண்ணெய் சேர்த்து, தேவையான அளவு அரைத்த பாலக் விழுதுகளை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து மாவை நன்கு பிசைந்து கொள்ளவும். கெட்டியாக இல்லாமல் தளர்வாக கைகளில் மாவு ஒட்டாமல் வருமாறு பிசையவும். பாலக் விழுதுகள் போதவில்லையெனில் சிறிது தண்ணீர் சேர்த்து பிசையவும்.


5. நான் நட்சத்திர வடிவ அச்சை உபயோகித்தேன். பிசைந்த மாவை எடுத்து முறுக்கு அச்சில் போடவும்.


6. முறுக்கை தேவையான வடிவத்தில் சுற்றி எண்ணெயில் போட்டு உஷ் சத்தம் சற்று அடங்கும் வரை பொரித்து எடுத்தால் சுவையான பாலக் கீரை முறுக்கு தயார்! :)



என் குறிப்பு:
1. பாலக் கீரையின் தண்டில் நார் இருக்கும் அவை அரைபடாது எனவே இலைகளை மட்டும் சேர்க்கவும்.
2. இதில் சீடையும் செய்யலாம், உருண்டை பிடித்த பின் பல் குத்தும் குச்சியில் ஓட்டை போட்டு விடவும் இல்லையெனில் வேகும்போது உருண்டை வெடித்து எண்ணெய் தெறிக்கும்.கவனம் தேவை.

Comments

Popular posts from this blog

எலுமிச்சை ஊறுகாய் - lemon pickle / traditional lemon pickle in tamil

அதிரசம் / இடி கச்சாயம் - Adhirasam / idi kachayam in tamil

புடலங்காய் கூட்டு | pudalangai kootu recipe in tamil | Snake gourd kootu in tamil