வாழைப்பூ வடை செய்வது எப்படி?

Image
வாழைப்பூ வடை செய்வது எப்படி புகைப்படத்துடன் கூடிய செய்முறை விளக்கம். கொங்கு மாவட்டங்களில் வடை பருப்பு ரொம்ப பிரசித்தம் ஆனால் மற்ற இடங்களில் வடை பருப்பு கிடைக்குமா என்று எனக்கு தெரிய வில்லை. எனவே நான் இங்கு கடலை பருப்பு கொண்டு வடை செய்துள்ளேன். நீங்கள் இருக்கும் இடத்தில வடை பருப்பு கிடைக்குமெனில் அதையே உபயோகிக்கவும். வாழைப்பூவின் மகத்துவத்தை நான் சொல்லித்தான் உங்களுக்கு தெரிய வேண்டும் என்பது இல்லை.   எப்பொழுது இதனை செய்வது என்று பார்க்கலாம். வாழைப்பூ வடை தயார் செய்யும் நேரம்  : 2 மணி நேரம்  சமைக்கும் நேரம் :  15 நிமிடம்    அளவு  :  15 - 18 வடை   தேவையான பொருட்கள் : வாழைப்பூ - 1 கப்  (சுத்தம் செய்து நறுக்கியது)  கடலை பருப்பு / வடை பருப்பு  - 3/4 kap சின்ன வெங்காயம் - 1/4 கப் பொடியாய் நறுக்கியது சோம்பு - 3/4 கப்  பெருங்காயம் - 1/4 kap உப்பு - தேவைகேற்ப பச்சை மிளகாய் - 2 -3 பொடியாக நறுக்கியது கருவேப்பில்லை  - 1 கொத்து கொத்தமல்லி இலை - 2 மேஜைகரண்டி  பொடியாக நறுக்கியது செமுறை விளக்...

என்னை பற்றி | About me page

நேயர்கள் அனைவருக்கும் எனது அன்பான வணக்கங்கள் :)

என் பெயர் அமுதா!

சின்ன வயசுல அம்மாவுக்கு சமையல்ல சின்ன சின்ன உதவிகள் செஞ்சிருக்கேன். சமைக்கிறதுல ஒரு ஆர்வம் எப்ப வந்துச்சுனா வீட்டை விட்டு வேலைக்காக சென்னை போய் தோழிகள் கூட வீட்டுல தங்கிருந்தப்ப ஏற்பட்டது. நாங்க நால்வர் இருந்தோம். எங்கள்ல ஒரு வட மாநில பொன்னும் இருந்தாங்க. ஒரு நாள் தென்மாநில சமையல் ஒரு நாள் வட மாநில சமையல் னு நேரம் கிடைக்கிற அப்ப எல்லாம் வித்யாசமா வித விதமா ஏதாச்சும் சமைச்சு சாப்பிடுறது எங்க வழக்கம். என் வட மாநில தோழி தன் எனக்கு சப்பாத்தி எப்படி உருண்டையா தேய்கிறது, மீது மெதுனு எப்படி சுடுறதுனு சொல்லிக் கொடுத்தாங்க.

நண்பர்களோட பிறந்தநாளுக்கு எப்பவும் ஏதாவது ஒரு ஸ்வீட் செய்றது வழக்கம் அப்ப. முக்கால் வாசி குலாப் ஜாமுன் தான் எல்லாரோட விருப்பமா இருக்கும்.

கல்யாணத்துக்கு அப்புறம் வாழ்க்கை மாற ஆரம்பிச்சது. அன்பு காதல் குழந்தைனு வாழ்க்கை பாதை வேற பக்கமா போக ஆரம்பிச்சது. கல்யாணத்துக்கப்புறம் வேலைக்கு முழுக்கு போட்டாச்சு. கோவை-ல நிரந்தரமா தாங்கியாச்சு. என் கணவர் பார்தி மிகவும் அன்பானவர். எங்களுக்கு 1 வயசுல ஒரு பையன் இருக்கான்.

ஏதாச்சும் வீட்டுல இருந்துட்டே உபயோகமா பண்ணனும்னு யோசிச்சு கடைசியில இந்த பிளாக்(blog) ஆரம்பிச்சேன். நமக்கு சாப்பாடு தான் முக்கியம்:P.

Comments

Popular posts from this blog

எலுமிச்சை ஊறுகாய் - lemon pickle / traditional lemon pickle in tamil

அதிரசம் / இடி கச்சாயம் - Adhirasam / idi kachayam in tamil

புடலங்காய் கூட்டு | pudalangai kootu recipe in tamil | Snake gourd kootu in tamil