வாழைப்பூ வடை செய்வது எப்படி?

Image
வாழைப்பூ வடை செய்வது எப்படி புகைப்படத்துடன் கூடிய செய்முறை விளக்கம். கொங்கு மாவட்டங்களில் வடை பருப்பு ரொம்ப பிரசித்தம் ஆனால் மற்ற இடங்களில் வடை பருப்பு கிடைக்குமா என்று எனக்கு தெரிய வில்லை. எனவே நான் இங்கு கடலை பருப்பு கொண்டு வடை செய்துள்ளேன். நீங்கள் இருக்கும் இடத்தில வடை பருப்பு கிடைக்குமெனில் அதையே உபயோகிக்கவும். வாழைப்பூவின் மகத்துவத்தை நான் சொல்லித்தான் உங்களுக்கு தெரிய வேண்டும் என்பது இல்லை.   எப்பொழுது இதனை செய்வது என்று பார்க்கலாம். வாழைப்பூ வடை தயார் செய்யும் நேரம்  : 2 மணி நேரம்  சமைக்கும் நேரம் :  15 நிமிடம்    அளவு  :  15 - 18 வடை   தேவையான பொருட்கள் : வாழைப்பூ - 1 கப்  (சுத்தம் செய்து நறுக்கியது)  கடலை பருப்பு / வடை பருப்பு  - 3/4 kap சின்ன வெங்காயம் - 1/4 கப் பொடியாய் நறுக்கியது சோம்பு - 3/4 கப்  பெருங்காயம் - 1/4 kap உப்பு - தேவைகேற்ப பச்சை மிளகாய் - 2 -3 பொடியாக நறுக்கியது கருவேப்பில்லை  - 1 கொத்து கொத்தமல்லி இலை - 2 மேஜைகரண்டி  பொடியாக நறுக்கியது செமுறை விளக்...

முளைகட்டிய ராகி பொடி

முளைகட்டிய ராகி பொடி குழந்தைகளுக்கு மருத்துவரின் ஆலோசனைப் படி 6 மாதத்தில் இருந்து கொடுக்கலாம். வேலைக்கு செல்லும் தாய்மார்கள் என்றால் வாரம் ஒரு முறை இந்தப் பொடியை செய்து காற்று புகாத டப்பாவில் போட்டுவைத்துக் கொண்டு தேவைப்படும் போது கூல் செய்து கொடுக்க வசதியாக இருக்கும். பெரும்பான்மையோர் தங்கள் குழந்தைக்கு 6 மாதத்திற்குப் பின் முதல் உணவாக ராகிப் பாலில் கூல் செய்து கொடுப்பார்கள். இன்னொரு நாள் ராகிப் பாலில் கூழ் செய்வதை உங்களுடன் இங்கே பகிர்ந்து கொள்கிறேன். இப்பொழுது முளைகட்டிய ராகி பொடி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.



தேவையான பொருட்கள்:
ராகி - 1 கப் 

செய்முறை விளக்கம்: 

  1. ராகியை நீரில் 5 முறைக்கும் மேல் நன்கு களைந்து அலசிக் கொள்ளவும். ராகியின் மேல் உள்ள பொட்டு(மேல் தோல்) அனைத்தும் போகும் வரை நன்றாக அலச வேண்டும். பின் 3 கப் தண்ணீர் ஊற்றி 5 இருந்து 8 மணி நேரம் வரை ஊற விடவும்(காலையில் 10 மணிக்கு ஊறவைத்தால் இரவு 7 மணிவரை ஊறவிடலாம்). அதற்க்கு மேல் ஊற விட்டால் துர்நாற்றம் வீச ஆரம்பிக்கும், அப்படி அடித்தால் அந்த ராகியை அப்புறப் படுத்திவிடுவது நல்லது. 



  2. ஊறிய ராகியை மேலும் ஒருமுறை களைந்து நீரில் அலசி நீரை நன்கு வடித்து அதனை ஒரு சுத்தமான காட்டன் துணியில் போட்டு துணியின் ஓரங்களை எடுத்து முடிச்சுப் போட்டு ஜன்னல் கம்பியில் கட்டலாம் அல்லது ஒரு பாத்திரத்தில் மூட்டையை வைத்து விடலாம்.



  3. மறுநாள் காலையில் மூட்டையை திறந்து பார்த்தால் ராகி முளைக்கட்டியிருக்கும்.(வெள்ளையாய் முளைக்கட்டியிருப்பதை நீங்கள் படத்தில் காணலாம்). முளைகட்டிய பயிரை ஒரு தட்டத்தில் போட்டு வெயிலில் காய வைக்கவும். 



  4. மதியம் 2 அல்லது 3 மணிவாக்கில் அதனை எடுத்து ஒரு கடாயில் போட்டு ராகியை நல்ல வாசனை வரும் வரை மிதமான சூட்டில் வறுத்து அடுப்பை அணைக்கவும். நன்றாக ராகி ஆரிய பிறகு மிக்ஸியில் போட்டு நைசாக அரைக்கவும். அரைத்த மாவை ஒரு 15 நிமிடம் கழித்து காற்று புகாத டப்பாவில் சேமித்து வைத்துக் கொள்ளவும். இது ஒரு வாரம் வரை நன்றாக இருக்கும். 



தேவைப்படும் பொழுது 1 மேஜைக்கரண்டி தயார் செய்த பொடியை  எடுத்து நீரில் கரைத்து அடுப்பில் வைத்து தேவைப்படும் பதத்திற்கு(கூல் அல்லது கழி) செய்து குழந்தைக்கு கொடுக்கவும். சில குழந்தைகள் கூல் போன்ற பதத்தை விரும்பும் சில குழந்தைகள் கழி பதத்தை
 விரும்பும்.
குழந்தைக்கு எந்த ஒரு உணவை முதலில் கொடுக்க ஆரம்பிக்கும் பொழுதும் மருத்துவரின் ஆலோசனையின் பேரில் கொடுக்கவும். முதல் 6 மாதத்திற்கு தாய் பாலே சிறந்தது.  

 என் குறிப்பு:
1. ராகி வெயிலில் காயவைப்பது முக்கியம்.
2. வறுப்பதனால் சீக்கிரம் கெட்டுப்போகாமல் நல்ல மனமாக இருக்கும்.
3. பெரியவர்களும் இதனை உட்கொள்ளலாம்.
4. உங்களின் விருப்பத்திற்கேற்ப கூல் அல்லது கழி பதத்திற்கு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி செய்து கொள்ளவும்.
5. முதல் நாள் காலை ஊற வைத்து மாலையில் முளைக்கட்ட முடிந்து வைத்தால் மறுநாள் காலையில் முளையிட்டுவிடும் பின் அதனை மதியம் வரை வெயிலில் காய வைத்து வறுத்து அரைக்க ஏதுவாக இருக்கும்.

Comments

Popular posts from this blog

எலுமிச்சை ஊறுகாய் - lemon pickle / traditional lemon pickle in tamil

அதிரசம் / இடி கச்சாயம் - Adhirasam / idi kachayam in tamil

புடலங்காய் கூட்டு | pudalangai kootu recipe in tamil | Snake gourd kootu in tamil