குழந்தைங்க சரியா சாப்பிடலைனு கவலைப்படும் போது இந்த உலர் கொட்டை உருண்டையை செஞ்சு கொடுங்க, அவங்களுக்கு தேவையான ஊட்டச்சத்து கிடைக்கலைங்கிற கவலை கொஞ்சம் கம்மி ஆகும் .
காலைல ஆபீஸ் போற அவசரத்துலையோ இல்ல வேற காரணமாகவோ சரியா சாப்பிடல. வயிறு நிரையிற மாதிரி அதே சமயம் ஆரோகியாமாவும் சாப்பிடணும்னு நினைச்சா இந்த உருண்ட/ பர்பி / பார்/ லட்டு செஞ்சு வெச்சுக்கங்க. எப்ப நேரம் கிடைச்சாலும் சாப்பிட்டுக்கலாம். உடலுக்கு தேவையான ஊட்டச்சத்தும் ஈஸியா கிடைச்சிரும். சரி இப்ப இதை எப்படி செய்றதுன்னு பாக்கலாம்.
உலர் கொட்டை உருண்டை
தயார்செய்யும் நேரம்:20 நிமிடம் அளவு : 20 பர்பி / 15 உருண்டை | எந்தவகை சமையல்: இந்திய உணவு
தேவையான பொருட்கள்:
பாதாம் - 1/4 கப்
முந்திரி - 1/4 கப்
பிஸ்தா - 1/4 கப்
வேர்க்கடலை - 1/2 கப்
பேரிச்சம்பழம் - 10(கோட்டை நீக்கியது )
வெல்லம் - 3 மேஜைக்கரண்டி
செய்முறை விளக்கம்:
- ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிவந்ததும் பாதாம் கொட்டைகளை அதில் போட்டு 1 நிமிடம் விடவும். 1 நிமிடம் கழித்து நீரை வடித்து ஓடும் குளிர்ந்த நீரில் அலசவும். மேல் தோல் சுருங்கி காணப்படும் , தோல் உரிப்பது இப்பொழுது சுலபம். எல்லா கோட்டைகளின் தோலையும் நீக்கி காட்டன் துணியில் போட்டு ஈர பதத்தை எடுத்து விடவும். ஒரு வடசட்டியில் லேசாக வறுத்து வைத்தால் நீண்டநாள் கெடாமல் இருக்கும்.
- வறுத்த வேர்க்கடலையில் தோல் நீக்கிக் கொள்ளவும். ஒரு மிக்ஸி ஜாரில் வேர்க்கடலை, பிஸ்தா, முந்திரி சேர்த்து பொடிசெய்து கொள்ளவும்.
- பொடித்தவற்றை ஒரு தட்டில் மாற்றிவைக்கவும். அதே ஜாரில் வருதுவைத்துள்ள பாதாம் பருப்பை போட்டு பொடிக்கவும் .
- பொடித்த பாதாம் பருப்புடன் ஏற்கனவே பொடித்துவைத்துள்ளதை சேர்த்து அதனுடன் பொடிப்பொடியாக நறுக்கிய பேரீச்சம்பழத்தைசேர்க்கவும். (பேரீச்சம்பழத்தை அப்படியே போட்டால் அரைபடாது எனவே சிறிதாக நறுக்கி போடவும்.)
- அதனுடன் வெல்லத்தையும் சேர்த்து விட்டு விட்டு அரைக்கவும். அனைத்தும் ஒன்று திரண்டு வரும். இதனை அச்சு பாத்திரத்தில் மாற்றவும்.
- ஒரு கரண்டி கொண்டு நன்றாக அழுத்தி சமன் செய்யவும். அடியில் நெய் தடவ தேவை இல்லை. அரைத்தபதார்த்தங்களே நெய் விடும். சமன் செய்த பின் கத்தி கொண்டு தேவையான வடிவத்தில் வெட்டவும்.இதனை லட்டு போன்றும் பிடிக்கலாம் .
என் பையன் சாப்பிட தயார்! நீங்களும் செய்து சுவைத்துப் பாருங்கள் அருமையாக இருக்கும்:)
என் குறிப்பு:
1. பாதாமை லேசாக வருபதினால் ஈரப்பதம் நீங்கி ரொம்ப நாள் கெடாமல் இருக்க உதவும்.
2. இதில் சேர்த்துள்ள உலர் பருப்புகள் என்னை விடும் அதனால் உருண்டை பாகு காய்ச்ச தேவை இல்லை.
3. இனிப்பு சுவைக்கு வெல்லத்திற்கு பதில் முழுமையாக பேரிச்சம் பழமே கூட உபயோகிக்கலாம் .
4. இதில் உலர் திராட்சை அல்லது வேறு உலர் பலம் மற்றும் கொட்டைகளை கூட சேர்த்துக் கொள்ளலாம்.
Comments
Post a Comment