வாழைப்பூ வடை செய்வது எப்படி?

Image
வாழைப்பூ வடை செய்வது எப்படி புகைப்படத்துடன் கூடிய செய்முறை விளக்கம். கொங்கு மாவட்டங்களில் வடை பருப்பு ரொம்ப பிரசித்தம் ஆனால் மற்ற இடங்களில் வடை பருப்பு கிடைக்குமா என்று எனக்கு தெரிய வில்லை. எனவே நான் இங்கு கடலை பருப்பு கொண்டு வடை செய்துள்ளேன். நீங்கள் இருக்கும் இடத்தில வடை பருப்பு கிடைக்குமெனில் அதையே உபயோகிக்கவும். வாழைப்பூவின் மகத்துவத்தை நான் சொல்லித்தான் உங்களுக்கு தெரிய வேண்டும் என்பது இல்லை.   எப்பொழுது இதனை செய்வது என்று பார்க்கலாம். வாழைப்பூ வடை தயார் செய்யும் நேரம்  : 2 மணி நேரம்  சமைக்கும் நேரம் :  15 நிமிடம்    அளவு  :  15 - 18 வடை   தேவையான பொருட்கள் : வாழைப்பூ - 1 கப்  (சுத்தம் செய்து நறுக்கியது)  கடலை பருப்பு / வடை பருப்பு  - 3/4 kap சின்ன வெங்காயம் - 1/4 கப் பொடியாய் நறுக்கியது சோம்பு - 3/4 கப்  பெருங்காயம் - 1/4 kap உப்பு - தேவைகேற்ப பச்சை மிளகாய் - 2 -3 பொடியாக நறுக்கியது கருவேப்பில்லை  - 1 கொத்து கொத்தமல்லி இலை - 2 மேஜைகரண்டி  பொடியாக நறுக்கியது செமுறை விளக்...

முருங்கைப் பூ பொரியல்

முருங்கைக் கீரையைப் போன்றே முருங்கைப் பூவும் எண்ணற்ற மருத்துவ குணங்கள் கொண்டது. இது இதயத்திற்கு மிகவும் நல்லது. முருங்கைக் கீரையைப் போல இதனை சுத்தம் செய்வது கஷ்டமானது அல்ல மிகவும் சுலபமாக இதனை சுத்தம் செய்து விடலாம்.
தேவையான பொருட்கள்
முருங்கைப் பூ -  1 கப் (இறுக்கமாக அழுத்தி சேர்த்து)
கடலை பருப்பு - 1/2 மேஜைக்கரண்டி
உளுந்துப் பருப்பு - 1 தேக்கரண்டி
கருவேப்பில்லை - 1 கொத்து
கடுகு - 1 தேக்கரண்டி
சின்ன வெங்காயம் - 8
முருங்கை கீரை - சிறிதளவு(தேவைப்பட்டால்)
வர மிளகாய் - 2
மஞ்சள் தூள் - 1/8 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு


1. முருங்கைப் பூ கொத்தை நீரில் அலசி தனித் தனியாக பூவை மட்டும் கிள்ளி வைத்துக் கொள்ளவும். வெங்காயத்தை பொடிப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
2. வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு சேர்த்து பொரிந்ததும் கடலைப் பருப்பு அதன் பின் உளுத்தம் பருப்பு சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.பின் வெங்காயம், கருவேப்பில்லை, வர மிளகாய் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.

3.வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் முருங்கைப் பூவுடன் சிறிது முருங்கைக் கீரையும் சேர்த்து, அதனுடன் மஞ்சள் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். தேவைப் பட்டால் சிறிதளவு மட்டும் தண்ணீர் தெளித்து 5 நிமிடம் வேக விடவும்.



4. தேங்காய்ப் பூ சேர்த்து கிளறி இறக்கினால் சுவையான சத்தான முருங்கைப் பூ பொரியல் தயார்.



என் குறிப்பு:
1. வர மிளகாய் உபயோகிக்கவும். பச்சை மிளகாய் சேர்த்தால் சுவை நன்றாக இருக்காது.
2. முருங்கைக் கீரை சேர்க்காமலும் செய்யலாம்.
3. வேக வைப்பதற்கு தண்ணீர் சிறிதளவு தெளித்தால் போதுமானது. நிறைய ஊற்றினால் சொத சொதவென்று ஆகி விடும்.

Comments

Popular posts from this blog

எலுமிச்சை ஊறுகாய் - lemon pickle / traditional lemon pickle in tamil

அதிரசம் / இடி கச்சாயம் - Adhirasam / idi kachayam in tamil

புடலங்காய் கூட்டு | pudalangai kootu recipe in tamil | Snake gourd kootu in tamil