வாழைப்பூ வடை செய்வது எப்படி?

Image
வாழைப்பூ வடை செய்வது எப்படி புகைப்படத்துடன் கூடிய செய்முறை விளக்கம். கொங்கு மாவட்டங்களில் வடை பருப்பு ரொம்ப பிரசித்தம் ஆனால் மற்ற இடங்களில் வடை பருப்பு கிடைக்குமா என்று எனக்கு தெரிய வில்லை. எனவே நான் இங்கு கடலை பருப்பு கொண்டு வடை செய்துள்ளேன். நீங்கள் இருக்கும் இடத்தில வடை பருப்பு கிடைக்குமெனில் அதையே உபயோகிக்கவும். வாழைப்பூவின் மகத்துவத்தை நான் சொல்லித்தான் உங்களுக்கு தெரிய வேண்டும் என்பது இல்லை.   எப்பொழுது இதனை செய்வது என்று பார்க்கலாம். வாழைப்பூ வடை தயார் செய்யும் நேரம்  : 2 மணி நேரம்  சமைக்கும் நேரம் :  15 நிமிடம்    அளவு  :  15 - 18 வடை   தேவையான பொருட்கள் : வாழைப்பூ - 1 கப்  (சுத்தம் செய்து நறுக்கியது)  கடலை பருப்பு / வடை பருப்பு  - 3/4 kap சின்ன வெங்காயம் - 1/4 கப் பொடியாய் நறுக்கியது சோம்பு - 3/4 கப்  பெருங்காயம் - 1/4 kap உப்பு - தேவைகேற்ப பச்சை மிளகாய் - 2 -3 பொடியாக நறுக்கியது கருவேப்பில்லை  - 1 கொத்து கொத்தமல்லி இலை - 2 மேஜைகரண்டி  பொடியாக நறுக்கியது செமுறை விளக்...

முருங்கைக் கீரை பொடி பொரியல் | Murunga keerai poriyal in tamil

முருங்கைக் கீரையில் எண்ணற்ற நன்மைகள் அடங்கி உள்ளது. வாரத்தில் ஒருதடவையேனும் முருங்கைக் கீரையை நமது உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. முருங்கைக் கீரை கசப்பு குணம் கொண்டது அதனாலேயே பெரும்பாலும் சிலர் இதனை உட்கொள்வதில்லை குறிப்பாக குழந்தைகள். அவர்களுக்கு இந்த முருங்கைக் கீரை பொடிப் பொரியலை செய்து கொடுத்துப்  பாருங்கள் விரும்பி உண்பார்கள்.

தேவையான பொருட்கள்:
முருங்கைக் கீரை - 1.5 கப்
சின்ன வெங்காயம் - 8
உளுத்தம் பருப்பு - 1/4 தேக்கரண்டி 
கருவேப்பில்லை - 1 கொத்து
கடலைப் பருப்பு - 1 மேஜைக்கரண்டி
ஜீரகம் - 1/2 தேக்கரண்டி
மல்லி - 1 தேக்கரண்டி
வர மிளகாய் - 2

 செய்முறை விளக்கம்:

1. முருங்கைக் கீரைக் கொத்தில் இலைகளை மட்டும் தனியே கில்லி ஒரு கப் அளவிற்கு எடுத்துக் கொள்ளவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். தேங்காயை துருவி வைக்கவும்.
2. ஒரு கடாயில் கடலைப் பருப்பை போட்டு லேசாக வறுத்த பின் மல்லி, சீரகம், வர மிளகாய் போட்டு கடலை பருப்பு பொன்னிறமாகும் வரை மிதமான தீயில் வறுக்கவும். வறுத்தவற்றை குளிரவைத்து மிக்ஸி ஜாரில் போட்டு கொஞ்சம் கொர கொரப்பாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.


3. கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு சேர்க்கவும்.கடுகு சேர்த்து பொரிந்ததும் உளுத்தம் பருப்பு சேர்த்து பொன்னிறமாக மாறிய பின் கருவேப்பில்லை பொடியாய் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கிய பின் முருங்கைக் கீரை மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும். தேவைப் பட்டால் சிறிது தண்ணீர் தெளித்து வதக்கலாம்.


4. கீரை நன்கு வதங்கிய பின் அரைத்து வைத்துள்ள பொடியாய் சேர்த்து 1 நிமிடம் கிளறி பின் தேங்காய்ப் பூ தூவி கிளறி இறக்கினால் சுவையான முருங்கைக் கீரை பொடி பொரியல் தயார்.



Comments

Popular posts from this blog

எலுமிச்சை ஊறுகாய் - lemon pickle / traditional lemon pickle in tamil

அதிரசம் / இடி கச்சாயம் - Adhirasam / idi kachayam in tamil

புடலங்காய் கூட்டு | pudalangai kootu recipe in tamil | Snake gourd kootu in tamil