வாழைப்பூ வடை செய்வது எப்படி?

Image
வாழைப்பூ வடை செய்வது எப்படி புகைப்படத்துடன் கூடிய செய்முறை விளக்கம். கொங்கு மாவட்டங்களில் வடை பருப்பு ரொம்ப பிரசித்தம் ஆனால் மற்ற இடங்களில் வடை பருப்பு கிடைக்குமா என்று எனக்கு தெரிய வில்லை. எனவே நான் இங்கு கடலை பருப்பு கொண்டு வடை செய்துள்ளேன். நீங்கள் இருக்கும் இடத்தில வடை பருப்பு கிடைக்குமெனில் அதையே உபயோகிக்கவும். வாழைப்பூவின் மகத்துவத்தை நான் சொல்லித்தான் உங்களுக்கு தெரிய வேண்டும் என்பது இல்லை.   எப்பொழுது இதனை செய்வது என்று பார்க்கலாம். வாழைப்பூ வடை தயார் செய்யும் நேரம்  : 2 மணி நேரம்  சமைக்கும் நேரம் :  15 நிமிடம்    அளவு  :  15 - 18 வடை   தேவையான பொருட்கள் : வாழைப்பூ - 1 கப்  (சுத்தம் செய்து நறுக்கியது)  கடலை பருப்பு / வடை பருப்பு  - 3/4 kap சின்ன வெங்காயம் - 1/4 கப் பொடியாய் நறுக்கியது சோம்பு - 3/4 கப்  பெருங்காயம் - 1/4 kap உப்பு - தேவைகேற்ப பச்சை மிளகாய் - 2 -3 பொடியாக நறுக்கியது கருவேப்பில்லை  - 1 கொத்து கொத்தமல்லி இலை - 2 மேஜைகரண்டி  பொடியாக நறுக்கியது செமுறை விளக்...

வீட்டில் பன்னீர் செய்வது எப்படி? | How to make paneer in tamil

தேவையான பொருட்கள்:

1. பால் - 1 லிட்டர்
2. எலுமிச்சம்பழ சாறு - 2-3 தேக்கரண்டி



செய்முறை விளக்கம்:

1. பாலை ஒரு பாத்திரத்தில் ஊற்றி சூடேற்றவும்.


2. பால் ஆடை கட்டாமல் அவ்வப்போது ஒரு கரண்டியால் கிளறி விடவும்.

3. பால் காய்ந்து பொங்கி வரும்போது 2 தேக்கரண்டி எலுமிச்சம்பழ சாற்றை அதில் விடவும்.


4. அதன் பின் படத்தில் காண்பது போல பால் திரிந்து வரும். திரியவில்லையெனில் இன்னும் ஒரு தேக்கரண்டி சாறை ஊற்றினால் நன்கு திரிந்துவிடும்.


 5. ஒரு பாத்திரத்தின் மேல் ஒரு காட்டன் துணியை விரித்து திரிந்த பாலை ஊற்றி வடிகட்டவும்.

6. வடிகட்டிய பின்பு அதனை துணியோடு சேர்த்து மீதமுள்ள தண்ணியையும் பிழிந்து விடவும்.
7. பின்னர் அந்த குட்டி துணிமூட்டையின் மேல் ஒரு கனமான பாத்திரத்தை வைத்து அழுத்தி ஒரு 30 நிமிடம் கழித்து எடுத்தால் பன்னீர் தயார்.

8. பின் நமக்கு தேவையான வடிவத்தில் வெட்டிக் கொள்ளலாம்.

இந்த பன்னீரைக் கொண்டு நான் செய்த பன்னீர் அவல் செய்து பாருங்கள்.

Comments

Popular posts from this blog

அதிரசம் / இடி கச்சாயம் - Adhirasam / idi kachayam in tamil

எலுமிச்சை ஊறுகாய் - lemon pickle / traditional lemon pickle in tamil

புடலங்காய் கூட்டு | pudalangai kootu recipe in tamil | Snake gourd kootu in tamil