வாழைப்பூ வடை செய்வது எப்படி?

Image
வாழைப்பூ வடை செய்வது எப்படி புகைப்படத்துடன் கூடிய செய்முறை விளக்கம். கொங்கு மாவட்டங்களில் வடை பருப்பு ரொம்ப பிரசித்தம் ஆனால் மற்ற இடங்களில் வடை பருப்பு கிடைக்குமா என்று எனக்கு தெரிய வில்லை. எனவே நான் இங்கு கடலை பருப்பு கொண்டு வடை செய்துள்ளேன். நீங்கள் இருக்கும் இடத்தில வடை பருப்பு கிடைக்குமெனில் அதையே உபயோகிக்கவும். வாழைப்பூவின் மகத்துவத்தை நான் சொல்லித்தான் உங்களுக்கு தெரிய வேண்டும் என்பது இல்லை.   எப்பொழுது இதனை செய்வது என்று பார்க்கலாம். வாழைப்பூ வடை தயார் செய்யும் நேரம்  : 2 மணி நேரம்  சமைக்கும் நேரம் :  15 நிமிடம்    அளவு  :  15 - 18 வடை   தேவையான பொருட்கள் : வாழைப்பூ - 1 கப்  (சுத்தம் செய்து நறுக்கியது)  கடலை பருப்பு / வடை பருப்பு  - 3/4 kap சின்ன வெங்காயம் - 1/4 கப் பொடியாய் நறுக்கியது சோம்பு - 3/4 கப்  பெருங்காயம் - 1/4 kap உப்பு - தேவைகேற்ப பச்சை மிளகாய் - 2 -3 பொடியாக நறுக்கியது கருவேப்பில்லை  - 1 கொத்து கொத்தமல்லி இலை - 2 மேஜைகரண்டி  பொடியாக நறுக்கியது செமுறை விளக்...

அதிரசம் / இடி கச்சாயம் - Adhirasam / idi kachayam in tamil

அதிரசம்ங்கிற வார்தையைக் கேட்டாலே என் நாக்குல எச்சில் ஊரும். அரிசிமாவு வெல்லமும் போதும் இந்த பலகாரம் செய்ய. ஆனா மொறு மொறுனு இல்லாம பஞ்சு மாதிரி வர்ரதுக்கு கொஞ்சம் கவனமா செஞ்சவே போதும் அதிரசம் நல்லா வரும். சின்ன வயசுல அம்மாவிற்கு  உருண்டையை தட்டிக் கொடுத்திருக்கேன் ஆனா தனியா செஞ்சது இல்ல இது தான் முதல்  முறையை நான் தனியா செஞ்சேன், ரொம்ப நல்லா வந்திருக்கு.

தேவையான பொருட்கள்:
 பச்சரிசி மாவு - 2 கப்
கட்டி வெல்லம் - 1 கப்
ஏலக்காய் தூள் - 1/4 - 1/2 தேக்கரண்டி
எண்ணெய் - 1/4 லிட்டர் (பொரித்து எடுப்பதற்கு)


முதல்ல இந்த இடி கச்சாயத்துக்கு தேவையான பச்சரிசி மாவு எப்படி செய்றதுன்னு பாக்கலாம்.
1. பச்சரிசி 1 அல்லது 2 கப் எடுத்து இரண்டு அல்லது மூன்று முறை அலசி 1-2 மணி நேரம் ஊற வைக்கவும். பின் அதனை வடித்து ஒரு காட்டன் துணியின் மேல் நன்கு பரப்பி விடவும். ஒரு 15 - 30 நிமிடத்தில் அரிசியில் உள்ள தண்ணீரை துணி உறிஞ்சிவிடும்.


2.  உலர்த்திய அரிசியை மிக்ஸியில் போட்டு வீட்டிலேயே அரைக்கலாம் அல்லது நிறைய செய்தால் மாவு மில்லில் கொடுத்து அரைக்கலாம். வீட்டில் அரைப்பதென்றால் அரிசியில் ஈரப் பதம் உள்ள போதே அரைக்கவும் அப்பொழுது தான் அதிரசம் பஞ்சு போல் வரும்.அரைத்த மாவை சல்லடையில் போட்டு நன்கு சலிக்கவும். அரிசிமாவு தயார்.



அதிரசம் செய்ய :
1. ஒரு பாத்திரத்தில் 2 கப் அளவு அரைத்த மாவை அளந்து எடுத்துக் கொண்டு அதனுடன் ஏலக்காய் தூள் சேர்த்து கலந்து வைக்கவும். கட்டி வெல்லத்தை 1 கப் அளவு துருவி எடுத்துவைக்கவும்.


2. ஒரு வாணலியில் 1 கப் துருவிய கட்டி வெல்லம் 1/2 கப் தண்ணீர் ஊற்றி வெல்லம் கரையும் வரை சூடாக்கி பின் அதனை தூசுகள் நீக்குவதற்காக வடித்து எடுக்கவும்.


3. வடித்த வெல்லப் பாகை மற்றொரு வாணலியில் ஊற்றி அவ்வப்போது அடிபிடிக்காதவாறு கிளறவும்.ஒரு சிறு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி தயாராக வைக்கவும். பாகு கெட்டியாக ஆரம்பிக்கும் போது மிகுந்த கவனம் தேவை, அடுப்பை சிறிதாக்கி கிளறவும்.


4. சிறிதளவு பாகை எடுத்து  தண்ணீரில் ஊற்றி பார்க்கவும் அது கரையாமல் இருந்தால் அதனை எடுத்து உருண்டை பிடித்துப் பார்த்தால் மெதுமெதுப்பான உருண்டையாய் வந்தால் பாகு தயார் என்று அர்த்தம் உடனே அடுப்பை அணைத்து பாகை மாவுடன் சேர்த்து கரண்டி கொண்டு கலக்கி பின் மிதமான சூட்டிற்கு வந்த பிறகு கைகளால் நன்கு பிசையவும். பாகு சூடாக இருக்கும் எனவே கவனமாக கையாளவும்.




5. இந்த மாவை ஒரு நாள் முழுவதும் நன்கு புளிக்க விடவும். அடுத்த நாள் எடுத்து மறுபடியும் நன்கு பிசையவும். மாவு மிகவும் கெட்டியாகவோ உதிரியாகவோ இருந்தால் கவலைப் படவேண்டாம் சிறிது வெதுவெதுப்பான பால் அல்லது மோர் சிறிது தெளித்து பிசைந்தால் சரியாகிவிடும். மாவு லூசாக இருந்தால் சிறிது அரிசிமாவு சேர்த்துப் பிசையவும்.

6. வாழை இழையில் நெய் அல்லது எண்ணெய் தடவி, மாவில்  இருந்து எலுமிச்சம்பழ அளவு உருண்டையை எடுத்து இழையில் வைத்து வட்டமாக வருமாறு கைகளால் அழுத்தவும். கொஞ்சம் மொந்தமாகவே(குண்டாகவே) இருக்கட்டும்.



7. வட்டமாக தட்டிய மாவை எடுத்து காய்ந்த எண்ணெயில் போட்டு 30 வினாடி கழித்து மறுபுறம் திருப்பி வேகவிட்டு எடுக்கவும். எண்ணெயில் போட்டதும் உப்பி வரும் உடனே திருப்பி விடவும். வெந்த கச்சாயத்தில் இருக்கும் அதிகப்படியான எண்ணையை கரண்டிக்கும் தோசை திருப்பிக்கும் நடுவில் வைத்து பிழிந்து எடுக்கவும். இதை கவனமாக செய்யவும்.


  சுவையான அதிரசம் தயார் :)

என் குறிப்பு:
1. வீட்டிலேயே மாவை அரைப்பதென்றால் ஈரப் பதம் இருக்கும் பொழுதே அரைத்து விடவும் அப்பொழுது தான் கசாயம் மெதுமெதுவென வரும்.
2. பாகை சரியான பதத்தில் நிறுத்தி சேர்க்க வேண்டும் இல்லையெனில் எண்ணையில் பொரித்தெடுக்கும் போது கெட்டியாகவோ அல்லது கரைந்தோ விடும்.
3. மறுநாள் மாவு கெட்டியாக இருந்தால் மோர் அல்லது மிதமான சூடான பாலை சிறிது ஊற்றி பிசைந்தாள் சரி ஆகிவிடும். சொத சொதவென இருந்தால் சிறிது அரிசிமாவு சேர்த்து பிசையலாம்.
4. தேவை போக மீதம் உள்ள அரிசிமாவை கடாயில் போட்டு நல்ல மணம் வரும்வரை வறுத்து சூடு ஆரிய பின் சேமித்து வைத்துக் கொள்ளலாம். இந்த மாவில் பாலக் முறுக்கு, முள்ளு முறுக்கு, காய் முறுக்கு போன்றவற்றை செய்யலாம்.






Comments

Popular posts from this blog

எலுமிச்சை ஊறுகாய் - lemon pickle / traditional lemon pickle in tamil

புடலங்காய் கூட்டு | pudalangai kootu recipe in tamil | Snake gourd kootu in tamil