வாழைப்பூ வடை செய்வது எப்படி?

Image
வாழைப்பூ வடை செய்வது எப்படி புகைப்படத்துடன் கூடிய செய்முறை விளக்கம். கொங்கு மாவட்டங்களில் வடை பருப்பு ரொம்ப பிரசித்தம் ஆனால் மற்ற இடங்களில் வடை பருப்பு கிடைக்குமா என்று எனக்கு தெரிய வில்லை. எனவே நான் இங்கு கடலை பருப்பு கொண்டு வடை செய்துள்ளேன். நீங்கள் இருக்கும் இடத்தில வடை பருப்பு கிடைக்குமெனில் அதையே உபயோகிக்கவும். வாழைப்பூவின் மகத்துவத்தை நான் சொல்லித்தான் உங்களுக்கு தெரிய வேண்டும் என்பது இல்லை.   எப்பொழுது இதனை செய்வது என்று பார்க்கலாம். வாழைப்பூ வடை தயார் செய்யும் நேரம்  : 2 மணி நேரம்  சமைக்கும் நேரம் :  15 நிமிடம்    அளவு  :  15 - 18 வடை   தேவையான பொருட்கள் : வாழைப்பூ - 1 கப்  (சுத்தம் செய்து நறுக்கியது)  கடலை பருப்பு / வடை பருப்பு  - 3/4 kap சின்ன வெங்காயம் - 1/4 கப் பொடியாய் நறுக்கியது சோம்பு - 3/4 கப்  பெருங்காயம் - 1/4 kap உப்பு - தேவைகேற்ப பச்சை மிளகாய் - 2 -3 பொடியாக நறுக்கியது கருவேப்பில்லை  - 1 கொத்து கொத்தமல்லி இலை - 2 மேஜைகரண்டி  பொடியாக நறுக்கியது செமுறை விளக்...

வெண்டைக்காய் பகோடா

வெண்டைக்காய் பகோடா செய்றது ரொம்ப சுலபம். வெண்டைக்காய் புளி குழம்பு, வெண்டைக்காய் பொரியல்-னு வீட்டுல வழக்கமா வெண்டைக்காயில செய்றத விட இந்த மாதிரி கொஞ்சம் வித்யாசமா செஞ்ச நம்ம மனசுக்கும் ஒரு சந்தோசம் கிடைக்கும் இல்லையா?

தேவையான பொருட்கள்:
வெண்டைக்காய் - 250 gm
கடலை மாவு - 1/4 கப்
மிளகாய்த் தூள் - 1 தேக்கரண்டி
அரிசி மாவு - 1 மேஜைக்கரண்டி
தயிர் - 2 மேஜைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
ஜீரக தூள் - 1/4 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/8 தேக்கரண்டி
எலுமிச்சம்பழ சாறு - 1 தேக்கரண்டி 




செய்முறை விளக்கம்:

  1. வெண்டைக்காயை தண்ணீரில் நன்கு அலசி காட்டன் துணி கொண்டு தண்ணீரை துடைத்து விடவும். வெண்டைக்காயின் தலை மற்றும் வாழ் பகுதியை அகற்றிவிட்டு இரண்டாக வெட்டவும்.



  2. ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், அரிசி மாவு, ஜீரகத் தூள் மற்றும் உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும். எலுமிச்சை சாறு சேர்க்கவும்.



  3. தயிர் சேர்த்து கலக்கி வெட்டி வைத்துள்ள வெண்டைக்காய் துண்டுகளை சேர்த்து மாவுக்கு கலவையுடன் கலக்கவும். மாவு வெண்டைக்காயில் ஓட்டும் அளவு சிறிது தண்ணீர் தெளித்து கலக்கினால் போதும். 



  4. பின் ஒவ்வொரு வெண்டைக்காயாய் எடுத்து காய்ந்த எண்ணையில் போட்டு எண்ணெய் கொதி அடங்கும் வரை வேகவிட்டு பொரித்தெடுத்தால் மொறுமொறுப்பான வெண்டைக்காய் பகோடா தயார்.



என் குறிப்பு :
1. வெண்டைக்காய் நன்றாய் மொறு மொறுவென வேகா வேண்டும் இல்லையெனில் சாப்பிடும் பொது சொத சொதவென இருக்கும்.
2. எண்ணெய் நன்றாக காய்ந்த பிறகு வெண்டைக்காய் துண்டுகளை போட்டு பொரித்தெடுக்கவும்.

Comments

Popular posts from this blog

எலுமிச்சை ஊறுகாய் - lemon pickle / traditional lemon pickle in tamil

அதிரசம் / இடி கச்சாயம் - Adhirasam / idi kachayam in tamil

புடலங்காய் கூட்டு | pudalangai kootu recipe in tamil | Snake gourd kootu in tamil