Posts

Showing posts from January, 2017

வாழைப்பூ வடை செய்வது எப்படி?

Image
வாழைப்பூ வடை செய்வது எப்படி புகைப்படத்துடன் கூடிய செய்முறை விளக்கம். கொங்கு மாவட்டங்களில் வடை பருப்பு ரொம்ப பிரசித்தம் ஆனால் மற்ற இடங்களில் வடை பருப்பு கிடைக்குமா என்று எனக்கு தெரிய வில்லை. எனவே நான் இங்கு கடலை பருப்பு கொண்டு வடை செய்துள்ளேன். நீங்கள் இருக்கும் இடத்தில வடை பருப்பு கிடைக்குமெனில் அதையே உபயோகிக்கவும். வாழைப்பூவின் மகத்துவத்தை நான் சொல்லித்தான் உங்களுக்கு தெரிய வேண்டும் என்பது இல்லை.   எப்பொழுது இதனை செய்வது என்று பார்க்கலாம். வாழைப்பூ வடை தயார் செய்யும் நேரம்  : 2 மணி நேரம்  சமைக்கும் நேரம் :  15 நிமிடம்    அளவு  :  15 - 18 வடை   தேவையான பொருட்கள் : வாழைப்பூ - 1 கப்  (சுத்தம் செய்து நறுக்கியது)  கடலை பருப்பு / வடை பருப்பு  - 3/4 kap சின்ன வெங்காயம் - 1/4 கப் பொடியாய் நறுக்கியது சோம்பு - 3/4 கப்  பெருங்காயம் - 1/4 kap உப்பு - தேவைகேற்ப பச்சை மிளகாய் - 2 -3 பொடியாக நறுக்கியது கருவேப்பில்லை  - 1 கொத்து கொத்தமல்லி இலை - 2 மேஜைகரண்டி  பொடியாக நறுக்கியது செமுறை விளக்...

பாலக்கீரை முட்டை புர்ஜி/பாலக் முட்டை பொரியல் | palak egg bhurji/fry/poriyal recipe in tamil

Image
கீரையில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் அடங்கி உள்ளன. வாரத்தில் இரண்டு முறையேனும் கீரை சேர்த்துக் கொள்வது நல்லது. வெறும் பாலக்கீரை செய்து கொடுத்தால் சிலருக்கு பிடிக்காது சாப்பிட சிரமப்படுவர் , அவர்களுக்கு இவ்வாறு செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். அதிலும் முட்டை சேர்த்துள்ளதால் இரட்டை  உற்சாகம் பொங்கும். இதனை சப்பாத்தியுடன் சாப்பிட அருமையாக இருக்கும். நீங்கள் பாலக்கீரை பிரியர் என்றால் எனது   பாலக் முறுக்கை   செய்து பாருங்கள். பாலக்கீரை முட்டை புர்ஜி தயார்செய்யும் நேரம் : 10   நிமிடம்   |   சமைக்கும் நேரம்   :   10 நிமிடம்   அளவு   :   2 பேர் சாப்பிடலாம்   | எந்தவகை சமையல் :   இந்திய உணவு தேவையான பொருட்கள்:     பாலக்கீரை - 2 கப் முட்டை -2-3  பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கிக் கொள்ளவும்) தக்காளி - 1 (பொடியாக நறுக்கிக்கொள்ளவும்) கருவேப்பில்லை - 1 கொத்து பச்சைமிளகாய் - 1 (பொடியாக நறுக்கிக்கொள்ளவும்) மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி மிளகாய் தூள் - 1/2 - 3/4 தேக்கரண்டி ...

சாக்லேட் பர்பி - chocolate barfi/burfi/fudge recipe in tamil

Image
சாக்லேட் னு சொன்னா யார்க்கு தான் பிடிக்காது . அதுலயும் குழந்தைங்கல  கேக்கவே வேண்டாம். வீட்டுலையே சாக்லேட் பர்பி செஞ்சு கொடுத்தா ரொம்ப ரொம்ப சந்தோசப் பாடுவாங்க. இப்ப இதை எப்படி செய்றதுன்னு பாக்கலாம். இதை கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் ஸ்வீட்டா இங்க போடலாம்னு தோணுச்சு . நேயர்கள் அனைவருக்கும் கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துக்கள் :) சாக்லேட் பர்பி தயார்செய்யும் நேரம் : 2   நிமிடம் |   சமைக்கும் நேரம்   :   15 நிமிடம்   அளவு   :   25   பர்பி | எந்தவகை சமையல் :   இந்திய உணவு தேவையான பொருட்கள்:           பால் பௌடர் - 1/4 கப்  கோகோ பவுடர் - 1 தேக்கரண்டி  சக்கரை - 1/3 கப்  தண்ணீர் - 1/4 கப்  நெய் - 2 தேக்கரண்டி  முந்திரி - 3(பொடியாக நறுக்கியது)  செய்முறை விளக்கம் : அச்சு தட்டில் நெய் தடவி தயாராக வைக்கவும். ஒரு பாத்திரத்தில் பால் பவுடர் , கோகோ பவுடர் சேர்த்து கலக்கிக் கொள்ளவும். ஒரு வாணலியில்  சக்கரையுடன் 1/4 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும் . ஒரு நூல...

குடைமிளகாய் குருமா - capsicum kurma/korma | bell peppers kurma recipe in tamil

Image
நான் குடைமிளகாய் ஓட தீவிர ரசிகைனே சொல்லலாம்.  இதுக்கு முன்னாடி   குடைமிளகாய் வேர்க்கடலை சட்னி    எப்படினு சொல்லிருந்தேன். இன்னைக்கு குடைமிளகாய் குருமா எப்படி செய்றதுன்னு பாக்கலாம். குடைமிளகாய், எள், வேர்க்கடலை, முந்திரி, கசகசா - னு நிறைய உடலுக்கு நன்மை தரக் கூடிய பொருட்கள் இந்த குருமாவில் இருக்கு . குடைமிளகாய் குருமா தயார்செய்யும் நேரம் : 10   நிமிடம்   |   சமைக்கும் நேரம்   :   20 நிமிடம்   அளவு   :   4 பேருக்கு    | எந்தவகை சமையல் :   இந்திய உணவு தேவையான பொருட்கள்:         குடைமிளகாய் - 1 கப் (குட்டி சதுரங்களாய் நறுக்கியது) ஏலக்காய் - 1 பிரியாணி இலை - 1 பெரிய வெங்காயம் -   1/2 (சதுரங்களாய் வெட்டியது) ஜீரகம் - 1/2 தேக்கரண்டி  நெய் - 2 தேக்கரண்டி   மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி  மிளகாய் தூள் - 1/4 தேக்கரண்டி கோபுரமாக  கரம் மசாலா தூள் - 1/8 தேக்கரண்டி   கோபுரமாக  உப்பு - தேவையான அளவு வதக்கி அரைப்பதற்கு : கடல...

எனர்ஜி பார்/ உருண்டை - Enery bar recipe in tamil | Dry nuts and fruits bar/barfi/ladoo recipe in tamil

Image
குழந்தைங்க சரியா சாப்பிடலைனு கவலைப்படும் போது இந்த உலர் கொட்டை உருண்டையை செஞ்சு கொடுங்க, அவங்களுக்கு தேவையான ஊட்டச்சத்து கிடைக்கலைங்கிற கவலை கொஞ்சம் கம்மி ஆகும் . காலைல ஆபீஸ் போற அவசரத்துலையோ இல்ல வேற காரணமாகவோ சரியா சாப்பிடல. வயிறு நிரையிற மாதிரி அதே சமயம் ஆரோகியாமாவும் சாப்பிடணும்னு நினைச்சா இந்த உருண்ட/ பர்பி / பார்/ லட்டு செஞ்சு வெச்சுக்கங்க. எப்ப நேரம் கிடைச்சாலும் சாப்பிட்டுக்கலாம். உடலுக்கு தேவையான ஊட்டச்சத்தும் ஈஸியா கிடைச்சிரும். சரி இப்ப இதை எப்படி செய்றதுன்னு பாக்கலாம். உலர் கொட்டை உருண்டை  தயார்செய்யும் நேரம் : 20   நிமிடம்   அளவு   :   20 பர்பி / 15 உருண்டை   | எந்தவகை சமையல் :   இந்திய உணவு தேவையான பொருட்கள்:         பாதாம் - 1/4 கப் முந்திரி - 1/4 கப் பிஸ்தா - 1/4 கப் வேர்க்கடலை - 1/2 கப் பேரிச்சம்பழம் - 10(கோட்டை நீக்கியது ) வெல்லம்  -     3 மேஜைக்கரண்டி  செய்முறை விளக்கம் : ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிவந்ததும் பாதாம் கொட்டைகளை அதில் போட...

வெண்டைக்காய் புளிக்குழம்பு | vendaikai puli kulambu recipe in tamil | bhindi tamarind gravy

Image
வெண்டைக்காய் புளிக்குழம்பு!!! புளி குழம்புன்னா  யார்க்கு தான் பிடிக்காது . அருளையும் வெண்டைக்காய் புளி குழம்பு நினைச்சாலே சாப்பிடணும் போல தோணும். என் அப்பாவுக்கு ரொம்ப பிடிச்ச குழம்பு. கடைசியா சட்டில மிச்சம் இருக்கிற கொஞ்சூண்டு குழம்பு வீணா போகக் கூடாதுனு அதுக்குள்ள சாப்பாட்ட போட்டு பிரட்டி சாப்பிடுவேன் :P. தமிழ் நாடு ஸ்டைல் வெண்டைக்காய் புளி குழம்பு செய்றது எப்படினு பாக்கலாம். வெண்டைக்காய் புளிக்குழம்பு தயார்செய்யும் நேரம் : 10  நிமிடம் |   சமைக்கும் நேரம்   : 4 5 நிமிடம்   அளவு   :   4 பேர் சாப்பிட   | எந்தவகை சமையல் :   இந்திய உணவு தேவையான பொருட்கள்:     வதக்குவதற்கு :       வெண்டைக்காய் - 250 கிராம் கடலை எண்ணெய் - 1 மேஜைக்கரண்டி தாளிப்பதற்கு : நல்லெண்ணெய் - 2 தேக்கரண்டி கடுகு - 1 தேக்கரண்டி வெந்தயம் / வெந்தய தூள் - 1/4 தேக்கரண்டி  கடலை பருப்பு - 2 தேக்கரண்டி உளுந்து பருப்பு - 1 தேக்கரண்டி மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி சாம்பார் தூள் - 1 தேக்கரண்டி வெல்லம் - 2...

புடலங்காய் கூட்டு | pudalangai kootu recipe in tamil | Snake gourd kootu in tamil

Image
வழக்கமா மதியத்துக்கு பருப்பு, ரசம், ஏதாச்சும் பொரியல் செய்றது வழக்கம். இவ்ளோ செய்ய நேரம் இல்லைனு தோணும் போது நான் இந்த புடலங்காய் கூட்டு செய்றது வழக்கம். பருப்பு பொரியல் எல்லாமே சேர்ந்து வந்திடுறதுனால உடல் ஆரோகியாமும் சீர்குலையாது. அங்க அங்க கடலை பருப்பு வாயில சிக்கும் போது சாப்பிட அருமையா இருக்கும். இந்தக் கூட்டு எனக்கு ரொம்பவும் பிடித்தமான ஒரு உணவு . இதை செய்றது எப்படினு இப்ப பாக்கலாம். புடலங்காய் கூட்டு தயார்செய்யும் நேரம் : 15 நாள் |   சமைக்கும் நேரம்   :   15 நிமிடம்   அளவு   :   3 பேர் சாப்பிடலாம்   | எந்தவகை சமையல் :   இந்திய உணவு தேவையான பொருட்கள்:     புடலங்காய் - 2 பாசி பருப்பு - 1/4 கப் கடலைப்பருப்பு - 1 மேஜைக்கரண்டி கடுகு - 1 தேக்கரண்டி கருவேப்பில்லை - 1 கொத்து உப்பு - தேவையான அளவு மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி தேங்காய் துருவல் - 3 - 4 மேஜைக்கரண்டி பச்சை மிளகாய் -2 வர மிளகாய் - 1 ஜீரகம் - 1/2 தேக்கரண்டி செய்முறை விளக்கம் : புடலங்காயை ஒரு ஸ்பூன் கொண்டு மேல் தோலை சொரண்டிவிடவும். ...

எள்ளு உருண்டை | sesame seeds ladoo | ellu urundai recipe in tamil

Image
நேயர்கள் அனைவருக்கும் கார்த்திகை தீபத் திருநாள் வாழ்த்துக்கள் :) "வான் நோக்கி நாம் கண்ட நட்சத்திரம் இன்று மண்ணோக்கி வான் காணும்" "உள்ளத்திலும் இல்லத்திலும் இருள் விலகி சந்தோசப் பேரொளி எங்கும் நிறைந்திட ஏற்றிடுவோம் கார்த்திகை தீபம் இந்நன்னாளிலே" பாரம்பரிய சமையல்ல எள்ளுக்கு ஒரு தனி இடம் உண்டு. அந்தக் காலத்துல எள்ளு உருண்டை பிடிச்சா கை புண்ணே ஆயிருமாம அவ்ளோ எள்ளு போட்டு உலக்கைல குத்தி உருண்டை செய்வாங்களாமா. ஆனா இப்ப நம்ம அவ்ளோ கஷ்டப் படவேண்டிய அவசியம் இல்ல. எள்ளு உருண்டை தயார்செய்யும் நேரம் : 1 நாள் |   சமைக்கும் நேரம்   :   15 நிமிடம்   அளவு   :   25 உருண்டை   | எந்தவகை சமையல் :   இந்திய உணவு தேவையான பொருட்கள்: கருப்பு எள் - 250 கிராம்/ 1 கப் பொட்டுக் கடலை  - 100   கிராம்/ 1/2   கப் வறுத்த வேர்க்கடலை -   100   கிராம்/ 1/2   கப் வெள்ளம்/கரும்பு சக்கரை - 350 - 400   கிராம் / 1 1/2   கப் செய்முறை விளக்கம் : எள்ளை நன்கு களைந்து வெயிலில் ஒரு நாள்...