வாழைப்பூ வடை செய்வது எப்படி?

Image
வாழைப்பூ வடை செய்வது எப்படி புகைப்படத்துடன் கூடிய செய்முறை விளக்கம். கொங்கு மாவட்டங்களில் வடை பருப்பு ரொம்ப பிரசித்தம் ஆனால் மற்ற இடங்களில் வடை பருப்பு கிடைக்குமா என்று எனக்கு தெரிய வில்லை. எனவே நான் இங்கு கடலை பருப்பு கொண்டு வடை செய்துள்ளேன். நீங்கள் இருக்கும் இடத்தில வடை பருப்பு கிடைக்குமெனில் அதையே உபயோகிக்கவும். வாழைப்பூவின் மகத்துவத்தை நான் சொல்லித்தான் உங்களுக்கு தெரிய வேண்டும் என்பது இல்லை.   எப்பொழுது இதனை செய்வது என்று பார்க்கலாம். வாழைப்பூ வடை தயார் செய்யும் நேரம்  : 2 மணி நேரம்  சமைக்கும் நேரம் :  15 நிமிடம்    அளவு  :  15 - 18 வடை   தேவையான பொருட்கள் : வாழைப்பூ - 1 கப்  (சுத்தம் செய்து நறுக்கியது)  கடலை பருப்பு / வடை பருப்பு  - 3/4 kap சின்ன வெங்காயம் - 1/4 கப் பொடியாய் நறுக்கியது சோம்பு - 3/4 கப்  பெருங்காயம் - 1/4 kap உப்பு - தேவைகேற்ப பச்சை மிளகாய் - 2 -3 பொடியாக நறுக்கியது கருவேப்பில்லை  - 1 கொத்து கொத்தமல்லி இலை - 2 மேஜைகரண்டி  பொடியாக நறுக்கியது செமுறை விளக்...

பன்னீர் புர்ஜி | Paneer bhurji recipe in tamil

பன்னீர் புர்ஜி செய்வது எப்படி புகைப்படத்துடன் கூடிய செய்முறை விளக்கம். பன்னீர் எனக்கு மிகவும் பிடித்தமான உணவு. வீட்டில் பன்னீர் செய்ய விரும்புவோர் இங்கே கிளிக் செய்யவும்.

இதனை சப்பாத்தியுடன் அல்லது தோசைக்கு நடுவில் வைத்து பன்னீர் தோசை செய்தும் சாப்பிடலாம்.


இதனை செய்வது எப்படி என்று இப்பொழுது காணலாம்.

பன்னீர் புர்ஜி 

தயார் செய்யும் நேரம் : 3நிமிடம் 
 சமைக்கும் நேரம் : 10 நிமிடம் 
அளவு  : 2-3 பேர் 

தேவையான பொருட்கள் :
பன்னீர் - 200 கிராம்
பெரிய வெங்காயம் - 1 பொடியாய் நறுக்கிவைக்கவும்
தக்காளி - 1 பொடியாய் நறுக்கிவைக்கவும்
பச்சை - 1 பொடியாய் நறுக்கிவைக்கவும்

இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி 
ஜீரகம் - 1/2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 3/4 தேக்கரண்டி
மல்லி தூள் - 1 தேக்கரண்டி
கரம் மசாலா - 1/4 தேக்கரண்டி
உப்பு- தேவையான அளவு
எண்ணெய் - 1 தேக்கரண்டி
கொத்துமல்லி இலை - சிறிதளவு


செய்முறை விளக்கம் :
  1. முதலில் வெங்காயம் தக்காளி பச்சைமிளகாயை நறுக்கி  வைத்துக்கொள்ளவும். பன்னீரை  கைகளால் சிறிது சிறிதாக உதிர்த்து வைக்கவும்.    வாணலியில் எண்ணெய் ஊற்றி ஜீரகம் சேர்த்து தாளிக்கவும். இதனுடன் நறுக்கிய வெங்காயம் பச்சைமிளகாய் சேர்த்து கிளறவும்.
  2. வெங்காயம் வதங்கியவுடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். பின் தக்காளி சேர்த்து வதங்கியவுடன்  மஞ்சள் தூள், மிளகாய் தூள்,மல்லி தூள் மற்றும் கரம் மசாலா சேர்த்து கிளறவும்.
  3. 2 நிமிடம் கழித்து பிசறி வைத்துள்ள பன்னீர் மற்றும் உப்பு சேர்த்து மசாலா கலவை பன்னீரில் கலக்கும் வரை கிளறவும். 3 நிமிடத்திற்கு மேல் கிளற தேவையில்லை.  இறுதியாக கொத்தமல்லியிலை தூவி இறக்கினால் தயார்.
 சுவையான பன்னீர் புர்ஜி தயார் !

என் குறிப்பு :
1. பன்னீரை அதிகநேரம் சமைத்தால் ரப்பர் போல ஆகிவிடும் எனவே கவனம் தேவை.

Comments

Popular posts from this blog

எலுமிச்சை ஊறுகாய் - lemon pickle / traditional lemon pickle in tamil

அதிரசம் / இடி கச்சாயம் - Adhirasam / idi kachayam in tamil

புடலங்காய் கூட்டு | pudalangai kootu recipe in tamil | Snake gourd kootu in tamil