சொரைக்காய் குருமா செய்வது எப்படி புகைப்படத்துடன் கூடிய செய்முறை விளக்கம்.
எங்கள் வீட்டில் விளைந்த சொரைக்காய் கொண்டு இந்த குருமாவை செய்தேன், அதில் எனக்கு அலாதி மகிழ்ச்சி. இந்த செடி இருப்பதையே நான் முதலில் கவனிக்க வில்லை,காவேபில்லை பறிக்க தோட்டத்திற்கு சென்ற போது திடீரென என் கண்ணில் பட்டது.
இதனை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
சொரைக்காய் குருமா
தயார் செய்யும் நேரம் : 10 நிமிடம்
சமைக்கும் நேரம் : 15 நிமிடம்
அளவு : 2- 3 பேர்
வகை : இந்திய உணவு
தேவையான பொருட்கள்:
சொரைக்காய் - 1 அல்லது 1 1/2கப் பொடியாய் நறுக்கியது / 1/2 கிலோ
வெங்காயம் - 1 பொடியாய் நறுக்கிக் கொள்ளவும்
தக்காளி - 1 பொடியாய் நறுக்கிக் கொள்ளவும்
பச்சை மிளகாய் - 1 பொடியாய் நறுக்கிக் கொள்ளவும்
கடுகு - 1/2 தேக்கரண்டி
எண்ணெய் - 2 தேக்கரண்டி
இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 3/4 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
கொத்தமல்லி பொடி - 1 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
தண்ணீர் - 1கப் அல்லது அதற்கும் மேல்
கொத்தமல்லி தலை - பொடியாய் நறுக்கியது
அரைப்பதற்கு:
துருவிய தேங்காய் - 1/4கப்
கசகசா - 1 தேக்கரண்டி
முந்திரி - 5 ( விரும்பினால் )
சீரகம் - 1/2 தேக்கரண்டி
செய்முறை விளக்கம் ::
- சொரைக்காயை தோல் சீவி சிறு சிறு துண்டுகளாய் நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
- சூடு நீரில் முந்திரியை 10 நிமிடம் ஊற வைக்கவும். அரைக்க கொடுத்துள்ள பொருட்கள் அனைத்தையும் மிக்ஸியில் போட்டு மைய அரைத்து வைத்துக் கொள்ளவும்.
- வாணலியில் என்னை ஊற்றி சூடானதும் கடுகு சேர்த்து பொரிந்தவுடன் வெங்காயம் , பச்சை மிளகாய், கருவேப்பில்லை சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கியவுடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
- இதனுடன் தக்காளி சேர்த்து வதங்கியவுடன், மஞ்சள் தூள் , மல்லி தூள் , மிளகாய் தூள் சேர்த்து 1 அல்லது 2 நிமிடம் வதக்கவும். தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் தெளித்துக் கொள்ளலாம், அடி பிடிக்காமல் இருக்கும்.
- இதனுடன் நறுக்கி வைத்துள்ள சொரைக்காயை சேர்த்து வதக்கவும். பின் 1 கப் அளவு தண்ணீர் ஊற்றி 7 - 10 நிமிடம் வரை வேகவைக்கவும்.
- சொரைக்காய் வெந்ததும் அரைத்துவைத்துள்ள விழுதை சேர்த்து கொதிக்க விடவும். கொதி வந்ததும் 3 நிமிடம் அடுப்பை சிம்மில் வைத்து பின் கொத்துமல்லி தூவி இறக்கினால் குருமா தயார் !
சுவையான சொரைக்காய் குருமா தயார் :)
என் குறிப்பு :
1. முந்திரி தேவைப்பட்டால் சேர்த்துக் கொள்ளலாம் இல்லையேல் தவித்துவிடலாம்.
2. கிரேவி நிறைய வேண்டுமெனில் தேங்காய் சிறிது கூடுதலாக சேர்த்து அரைத்து சேர்க்கவும் .
3. சிறிது கரம் மசாலா தூள் கூட சேர்த்துக் கொள்ளலாம்.
Super
ReplyDelete