வாழைப்பூ வடை செய்வது எப்படி?

Image
வாழைப்பூ வடை செய்வது எப்படி புகைப்படத்துடன் கூடிய செய்முறை விளக்கம். கொங்கு மாவட்டங்களில் வடை பருப்பு ரொம்ப பிரசித்தம் ஆனால் மற்ற இடங்களில் வடை பருப்பு கிடைக்குமா என்று எனக்கு தெரிய வில்லை. எனவே நான் இங்கு கடலை பருப்பு கொண்டு வடை செய்துள்ளேன். நீங்கள் இருக்கும் இடத்தில வடை பருப்பு கிடைக்குமெனில் அதையே உபயோகிக்கவும். வாழைப்பூவின் மகத்துவத்தை நான் சொல்லித்தான் உங்களுக்கு தெரிய வேண்டும் என்பது இல்லை.   எப்பொழுது இதனை செய்வது என்று பார்க்கலாம். வாழைப்பூ வடை தயார் செய்யும் நேரம்  : 2 மணி நேரம்  சமைக்கும் நேரம் :  15 நிமிடம்    அளவு  :  15 - 18 வடை   தேவையான பொருட்கள் : வாழைப்பூ - 1 கப்  (சுத்தம் செய்து நறுக்கியது)  கடலை பருப்பு / வடை பருப்பு  - 3/4 kap சின்ன வெங்காயம் - 1/4 கப் பொடியாய் நறுக்கியது சோம்பு - 3/4 கப்  பெருங்காயம் - 1/4 kap உப்பு - தேவைகேற்ப பச்சை மிளகாய் - 2 -3 பொடியாக நறுக்கியது கருவேப்பில்லை  - 1 கொத்து கொத்தமல்லி இலை - 2 மேஜைகரண்டி  பொடியாக நறுக்கியது செமுறை விளக்...

செட்டிநாடு காளான் குருமா - chettinadu mushroom gravy in tamil

செட்டிநாடு காளான் குருமா செய்வது எப்படி புகைப்படத்துடன் கூடிய செய்முறை விளக்கம். செட்டிநாடு வகை உணவு சைவப் பிரியர்களுக்கு ஏற்ற உணவு.



இதை எப்படி செய்வது என்று இப்பொழுது காணலாம்.

செட்டிநாடு காளான் குருமா 

தயார்செய்யும் நேரம் :10 நிமிடம் 
சமைக்கும் நேரம் 20 நிமிடம் 
அளவு : 4 பேர் 
வகை :இந்திய உணவு 

தேவையான பொருட்கள் : 
பட்டன் முஷ்ரூம்  - 200கிராம்
சின்ன வெங்காயம் - 10 - 12 (பொடியாக நறுக்கிக் கொள்ளவும் )
தக்காளி - 2 (பொடியாக நறுக்கிக் கொள்ளவும் )
இஞ்சி பூண்டு விழுது  - 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள்  - 1/4 தேக்கரண்டி
கொத்தமல்லி தலை - 1 மேஜைக்கரண்டி (பொடியாய் நறுக்கியது )
உப்பு - தேவையான அளவு

வறுத்து அரைப்பதற்கு :(செட்டிநாடு மசாலா)
வர மிளகாய் - 4
கொத்துமல்லி  - 1 தேக்கரண்டி
மிளகு  - 1/2 தேக்கரண்டி
ஜீரகம் - 1/2 தேக்கரண்டி
பொட்டுக்கடலை  - 1/2 மேஜைக்கரண்டி
துருவிய தேங்காய்  - 3 மேஜைக்கரண்டி
கசகசா  - 1/2 தேக்கரண்டி(விருப்பத்திற்கேற்ப )

தாளிப்பதற்க்கு :
எண்ணெய் - 1 மேஜைக்கரண்டி
பிரியாணி இலை  - 1
பட்டை - 1/2" அளவு
கிராம்பு - 2
ஏலக்காய் - 1
சோம்பு  - 1/2 தேக்கரண்டி
கருவேப்பில்லை  - 2 கொத்து 

செய்முறை விளக்கம் ::
  1. பட்டன் காளானை கழுவி சுத்தம் செய்து 2 அல்லது 3 துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
  2. வறுத்து அரைக்க கொடுத்துள்ள பொருட்கள் அனைத்தையும் ஒன்றின் பின் ஒன்றாக சேர்த்து வறுக்கவும். கடைசியாக தேங்காய் சேர்த்து வறுக்கவும்.
  3. சுமார் 1 அல்லது 2 நிமிடம் வறுத்த பின்பு ஆறவிடவும். ஆரிய கலவையை மிக்ஸியில் போட்டு சிறிது தண்ணீர் விட்டு மைய அரைத்து வைக்கவும்.  இது தான் செட்டிநாடு மசாலா.
  4. ஒரு வாணலியில் என்னை ஊற்றி காய்ந்ததும் பட்டை, லவங்கம், பிரியாணி இலை, ஏலக்காய் சேர்த்து வதக்கி பின் வெங்காயம் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை வதக்கவும்.   பின் தக்காளி சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.
  5. இதனுடன் அரைத்துவைத்துள்ள கலவையை மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து 5 நிமிடம் வதக்கவும். இதனுடன் வெட்டி வைத்துள்ள காளான் சேர்த்து கிளறவும். காளான் வதங்கும் பொழுது தண்ணீர் விடும்.
  6.  காளான் தண்ணீர் விட ஆரம்பித்ததும் 1/2 - 1 கப் அளவு தண்ணீர் விட்டு மிதமான தீயில் கலவையை வேகவைக்கவும். குருமா சிறிது நேரத்தில் எண்ணெய் விட ஆரம்பிக்கும் அப்பொழுது காளான் வெந்துவிட்டதெனில் கொத்துமல்லி இலை தூவி இறக்கவும்.
காரசாரமான செட்டிநாடு குருமா தயார் !

என் குறிப்பு:

1. இந்த குருமா செய்வதற்கு சின்ன வெங்காயம் உபயோகிக்கவும், பெரிய வெங்காயம் தவிர்க்கவும்.
2. வறுக்க கொடுத்துள்ள பொருட்களை மிதமான தீயில் வறுக்கவும்.

Comments

Popular posts from this blog

எலுமிச்சை ஊறுகாய் - lemon pickle / traditional lemon pickle in tamil

அதிரசம் / இடி கச்சாயம் - Adhirasam / idi kachayam in tamil

புடலங்காய் கூட்டு | pudalangai kootu recipe in tamil | Snake gourd kootu in tamil