வாழைப்பூ வடை செய்வது எப்படி?

Image
வாழைப்பூ வடை செய்வது எப்படி புகைப்படத்துடன் கூடிய செய்முறை விளக்கம். கொங்கு மாவட்டங்களில் வடை பருப்பு ரொம்ப பிரசித்தம் ஆனால் மற்ற இடங்களில் வடை பருப்பு கிடைக்குமா என்று எனக்கு தெரிய வில்லை. எனவே நான் இங்கு கடலை பருப்பு கொண்டு வடை செய்துள்ளேன். நீங்கள் இருக்கும் இடத்தில வடை பருப்பு கிடைக்குமெனில் அதையே உபயோகிக்கவும். வாழைப்பூவின் மகத்துவத்தை நான் சொல்லித்தான் உங்களுக்கு தெரிய வேண்டும் என்பது இல்லை.   எப்பொழுது இதனை செய்வது என்று பார்க்கலாம். வாழைப்பூ வடை தயார் செய்யும் நேரம்  : 2 மணி நேரம்  சமைக்கும் நேரம் :  15 நிமிடம்    அளவு  :  15 - 18 வடை   தேவையான பொருட்கள் : வாழைப்பூ - 1 கப்  (சுத்தம் செய்து நறுக்கியது)  கடலை பருப்பு / வடை பருப்பு  - 3/4 kap சின்ன வெங்காயம் - 1/4 கப் பொடியாய் நறுக்கியது சோம்பு - 3/4 கப்  பெருங்காயம் - 1/4 kap உப்பு - தேவைகேற்ப பச்சை மிளகாய் - 2 -3 பொடியாக நறுக்கியது கருவேப்பில்லை  - 1 கொத்து கொத்தமல்லி இலை - 2 மேஜைகரண்டி  பொடியாக நறுக்கியது செமுறை விளக்...

மேங்கோ பிஸ்தா குல்பி | Mango pista kulfi recipe in tamil

மேங்கோ பிஸ்தா குல்பி செய்வது எப்படி புகைப்படத்துடன் கூடிய செய்முறை விளக்கம் தமிழில். வெயிலின் தாக்கத்தை குறைக்க அவ்வப்போது இந்த மாதிரி ஜில்லுனு குல்பி சாப்பிட்டா எப்படி இருக்கும். நினைக்கும் போதே குளு குளுனு இருக்குதா ? வீட்டுல செஞ்சு சாப்பிட்டு பாருங்க அதோட ருசியே தனி தான்.

Mango Kulfi recipe

அருமை அருமை !

Mango Kulfi recipe

இதை எப்படி செய்றதுன்னு பாக்கலாம்.

மேங்கோ பிஸ்தா குல்பி

தயார் செய்யும் நேரம் : 5 - 12 மணி நேரம் 
சமைக்கும் நேரம் 15 நிமிடம் 
அளவு  : 4 குல்பி 

தேவையான பொருட்கள் :
மாம்பழம் விழுது  - 1/2 கப் (நான் 2 மாம்பழம் உபயோகித்து 1/2 கப் அளவு விழுது தயாரித்தேன்)
பால் - 1 கப் + 3 தேக்கரண்டி
 கன்டென்ஸ்ட் மில்க்(Milk maid/Condensed milk)  - 6 மேஜைக்கரண்டி
சோள மாவு  - 1.5 தேக்கரண்டி
பிஸ்தா - 10 பொடியாய் நறுக்கிக் கொள்ளவும்.


செய்முறை விளக்கம் :
  1. பால் மற்றும்  கன்டென்ஸ்ட் மில்க் இரண்டையும் ஒரு பாத்திரத்தில் ஊற்றிக் கொல்லவம். பின் பாத்திரத்தை அடுப்பில் வைத்து காய்ச்சவும்.
    Mango Kulfi recipe step1
  2. பால் காய்ந்துகொண்டிருக்கும் சமயத்தில் ஒரு பௌலில் சோள மாவு எடுத்து 3 தேக்கரண்டி பால் ஊற்றி கரைத்து வைத்துக்கொள்ளவும். இப்பொழுது காய்ந்துகொண்டிருக்கும் பாலில்  நறுக்கிய பிஸ்தா துண்டுகளை சேர்த்து கலக்கவும்.
    Mango Kulfi recipe step2
  3. அடுப்பை சிம்மில் வைத்து 10 - 15 நிமிடம் வரை பாலை சுண்டக் காய்ச்சவும். அவ்வப்போது அடிபிடிக்காமல் இருக்க கிளறி விடவும். 10 நிமிடம் கழித்து கரைத்து வைத்துள்ள சோளமாவு கலவையை ஊற்றவும்.
    Mango Kulfi recipe step3
  4. மேலும் 4 நிமிடம் பாலை காய்ச்சவும். பின் அடுப்பை அணைத்து கலவையை நன்கு குளிர விடவும். மாம்பழத்தை மைய அரைத்து வைத்துக் கொள்ளவும். 
    Mango Kulfi recipe step4
  5. நன்கு ஆரிய பால் கலவையில் இந்த மாம்பழ விழுதை சேர்த்து கலக்கவும்.
    Mango Kulfi recipe step5
  6. இதனை குல்பி அச்சு அல்லது வீட்டில் இருக்கும் டம்ளரில் ஊற்றி ஐஸ் கிரீம் குச்சியை  நடுவில் சொருகி ப்ரீசரில்() ஒரு இரவு முழுவதும் வைக்கவும். மறுநாள் குல்பியை சுலபமாக டம்ளரில் இருந்து விடுவிக்க  டம்ளரின் மேல் நீர் விட்டு எடுக்கவும்.
    Mango Kulfi recipe step6
சுவையான மேங்கோ குல்பி தயார் !
Mango Kulfi recipe

My Notes:
1. தேவைப்பட்டால் பிரெஷ் கிரீம் சிறிதளவு சேர்த்துக் கொள்ளலாம்.
2. நான் வீட்டில் செய்த கன்டென்ஸ்ட் மில்க் உபயோகித்தேன். கடையில் வாங்கியது என்றால் சிறிது குறைவாக உபயோகிக்கவும்.
3.இனிப்பு வகை மாம்பழம் உபயோகிக்கவும்.

Comments

Popular posts from this blog

எலுமிச்சை ஊறுகாய் - lemon pickle / traditional lemon pickle in tamil

அதிரசம் / இடி கச்சாயம் - Adhirasam / idi kachayam in tamil

புடலங்காய் கூட்டு | pudalangai kootu recipe in tamil | Snake gourd kootu in tamil