அரைச்சுவிட்ட சாம்பார் செய்வது எப்படி புகைப்படத்துடன் கூடிய செய்முறை விளக்கம். வழக்கமா சாதத்துக்கு இட்லி தோசைக்கும் ஆகுற மாதிரி குழம்போ இல்ல சட்னியோ செய்றது வழக்கம். அதே மாதிரி தான் இந்த சாம்பார் சாதம் இட்லி அல்லது தோசை எல்லாத்துக்கும் நல்லா இருக்கும்.
இப்ப இதை எப்படி செய்றதுன்னு பாக்கலாம்.
அரைச்சுவிட்ட சாம்பார்
தயார் செய்யும் நேரம் :10 நிமிடம்
சமைக்கும் நேரம் : 15 நிமிடம்
அளவு : 4 பேர் சாப்பிட
தேவையான பொருட்கள் :
துவரம் பருப்பு - 1/2 கப் கோபுரமாக
புலி - 1 எலுமிச்சை அளவு
சின்ன வெங்காயம் - 1
0
தக்காளி - 1
நறுக்கிக்கொள்ளவும்
பூண்டு - 4-5
கொத்தமல்லி இலை - 1-2 மேஜைக்கரண்டி நறுக்கிக்கொள்ளவும்
உருளை கிழங்கு - 1 நறுக்கிக்கொள்ளவும்
கேரட் - 1 நறுக்கிக்கொள்ளவும்
வறுத்து அரைப்பதற்கு :
மல்லி - 1 தேக்கரண்டி
கடலை பருப்பு - 1 தேக்கரண்டி
வர மிளகாய் - 1
பச்சரிசி - 1 தேக்கரண்டி
துருவிய தேங்காய் - 1மேஜைக்கரண்டி
வெந்தயம் - 1/4 தேக்கரண்டி
தாளிப்பதற்கு :
எண்ணெய் - 2 தேக்கரண்டி
கடுகு - 1/2 தேக்கரண்டி
கருவேப்பில்லை - 1 கொத்து
வர மிளகாய் - 1
உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
பெருங்காய தூள் - 1/8 + 1/8 தேக்கரண்டி
செய்வது எப்படி:
- துவரம்பருப்பை அலசி குக்கரில் எடுத்துக் கொள்ளவும். இதனுடன் பூண்டு, 1/8 தேக்கரண்டி பெருங்காய தூள் மற்றும் 1 கப் தண்ணீர் ஊற்றி 1 விசில் விட்டு வேகவைக்கவும். ஆவி போனவுடன் பருப்பை மசித்து வைத்துக்கொள்ளவும். புளியை 1/2 கப் நீரில் ஊற வைத்து கரைத்து புலி சாரை எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- வறுத்து அரைக்க கொடுத்துள்ள பொருட்களை மிதமான சூட்டில் பக்குவமாய் வருது மிக்ஸியில் போட்டு சிறிது நீர் விட்டு மைய அரைத்து வைத்துக் கொள்ளவும்.
- வட சட்டியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு சேர்த்து பொரிந்தவுடன் பெருங்காய தூள், வர மிளகாய், சின்ன வெங்காயம் மற்றும் கருவேப்பில்லை சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும். பின் வெட்டி வைத்துள்ள காய்கறிகளை சேர்த்து அதனுடன் 1/2 கப் தண்ணீர் சேர்த்து வேகா வைக்கவும். காய்க்கு தேவையான உப்பு சேர்க்கவும்.
- காய் வெந்ததும் மசித்து வைத்துள்ள பருப்பு, அரைத்த விழுது சேர்த்து கலக்கவும்.
- இதனுடன் 1 கப் தண்ணீர் மற்றும் புளி கரைசலை சேர்த்து தேவையான உப்பு சேர்த்து 10 நிமிடம் கொதிக்க விடவும். இறுதியாக கொத்தமல்லியிலை தூவி இறக்கவும்.
அரைச்சுவிட்ட சாம்பார் தயார் !
My Notes:
1. காய்கறிகளை குலைய வேகவிட வேண்டாம்.
2. தேவைக்கேற்ப தண்ணீரை கூட்டியோ குறைத்து சேர்த்துக் கொள்ளலாம்.
3. உங்களுக்கு பிடித்த காய்கறிகளை சேர்த்துக் கொள்ளவும்.
Comments
Post a Comment