கடாய் காளான் பட்டாணி வறுவல் - செய்வது எப்படி புகைப்படத்துடன் கூடிய செய்முறை விளக்கம் தமிழில். காளானில் வைட்டமின் டி நிறைந்து உள்ளது. இதனை நமது சமையலில் உட்கொள்வது சிறந்தது.
இதனை எப்படி செய்வது என்று இப்பொழுது காணலாம்.
கடாய் காளான் பட்டாணி வறுவல்
தயார் செய்யும் நேரம் :10 நிமிடம்
சமைக்கும் நேரம் : 20 நிமிடம்
அளவு : 25
உணவு வகை : Indian
தேவையான பொருட்கள் :
பட்டன் காளான் - 200 கிராம் (3 துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும் )
பச்சை பட்டாணி - 100 கிராம் / 1/2 - 3/4 கப் அளவு (வேகவைத்துக்கொள்ளவும்)
பெரிய வெங்காயம் - 1 நறுக்கியது
தக்காளி விழுது - 2 தக்காளி வைக்கவும்
பச்சை மிளகாய் - 1
கருவேப்பில்லை - 1 கொத்து
இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 3/4 - 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
மல்லி தூள் - 1/2 தேக்கரண்டி (optional)
கரம் மசாலா தூள் - 1/4 தேக்கரண்டி
கெட்டி தேங்காய் பால் - 1/2கப்
கொத்தமல்லியிலை - 2 தேக்கரண்டி
எண்ணெய் - 2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை விளக்கம் :
- காலனை சுத்தம் செய்து அதன் அளவிற்கேற்ப 2 அல்லது 3 துண்டுகளாய் நறுக்கி வைக்கவும். பச்சை பட்டாணியை வேகவைத்து வைத்து நீரை வடிகட்டி வைக்கவும் .
- வடசட்டியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு சேர்த்து தாளிக்கவும். கடுகு பொரிந்ததும் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கருவேப்பில்லை சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
- பின் அதனுடன் தக்காளி விழுது சேர்த்து 2 நிமிடம் வதக்கவும். இதனுடன் மிளகாய் தூள், மஞ்சள் தூள், மல்லி தூள் மற்றும் கரம் மசாலா சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.
- இதனுடன் நறுக்கிவைத்துள்ள காளானுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கவும். ஒரு மூடி போட்டு மூடி மிதமான சூட்டில் 5 நிமிடம் வேகவிடவும்.தண்ணீர் சேர்க்க தேவையில்லை காளான் தண்ணீர் விடும். காளான் வெந்துவிட்டதா என பார்க்கவும். தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் தெளித்து வேகவிடவும்.
- இதனுடன் வேகவைத்துள்ள பச்சை பட்டாணியை சேர்த்து நன்கு கிளறவும். உப்பு சரி பார்த்து கெட்டி தேங்காய் பாலை ஊற்றவும்.
- தேங்காய் பால் ஊற்றி ஒரு கொதி வந்ததும் இறக்கி விடலாம் அல்லது நான் செய்தது போல் அணைத்து தண்ணீரும் வற்றும் வரை விட்டு வறுவல் போல் செய்தும் கொள்ளலாம் அது உங்கள் விருப்பம்.
இதனை சாதத்துடன் சேர்த்து சாப்பிட அருமையாக இருக்கும்.
என் குறிப்பு:
1. இது கிரேவி பதத்தில் வேண்டுமெனில் நிறைய தேங்காய் பால் அல்லது தேங்காய் விழுது சேர்த்து செய்தால் தயார்.
2. இதனுடன் சிறிது பிரெஷ் கிரீம் சேர்த்தால் சுவை இன்னும் கூடும்.
Comments
Post a Comment