Posts

Showing posts from April, 2017

வாழைப்பூ வடை செய்வது எப்படி?

Image
வாழைப்பூ வடை செய்வது எப்படி புகைப்படத்துடன் கூடிய செய்முறை விளக்கம். கொங்கு மாவட்டங்களில் வடை பருப்பு ரொம்ப பிரசித்தம் ஆனால் மற்ற இடங்களில் வடை பருப்பு கிடைக்குமா என்று எனக்கு தெரிய வில்லை. எனவே நான் இங்கு கடலை பருப்பு கொண்டு வடை செய்துள்ளேன். நீங்கள் இருக்கும் இடத்தில வடை பருப்பு கிடைக்குமெனில் அதையே உபயோகிக்கவும். வாழைப்பூவின் மகத்துவத்தை நான் சொல்லித்தான் உங்களுக்கு தெரிய வேண்டும் என்பது இல்லை.   எப்பொழுது இதனை செய்வது என்று பார்க்கலாம். வாழைப்பூ வடை தயார் செய்யும் நேரம்  : 2 மணி நேரம்  சமைக்கும் நேரம் :  15 நிமிடம்    அளவு  :  15 - 18 வடை   தேவையான பொருட்கள் : வாழைப்பூ - 1 கப்  (சுத்தம் செய்து நறுக்கியது)  கடலை பருப்பு / வடை பருப்பு  - 3/4 kap சின்ன வெங்காயம் - 1/4 கப் பொடியாய் நறுக்கியது சோம்பு - 3/4 கப்  பெருங்காயம் - 1/4 kap உப்பு - தேவைகேற்ப பச்சை மிளகாய் - 2 -3 பொடியாக நறுக்கியது கருவேப்பில்லை  - 1 கொத்து கொத்தமல்லி இலை - 2 மேஜைகரண்டி  பொடியாக நறுக்கியது செமுறை விளக்...

மேங்கோ பிஸ்தா குல்பி | Mango pista kulfi recipe in tamil

Image
மேங்கோ பிஸ்தா குல்பி செய்வது எப்படி புகைப்படத்துடன் கூடிய செய்முறை விளக்கம் தமிழில்.   வெயிலின் தாக்கத்தை குறைக்க அவ்வப்போது இந்த மாதிரி ஜில்லுனு குல்பி சாப்பிட்டா எப்படி இருக்கும். நினைக்கும் போதே குளு குளுனு இருக்குதா ? வீட்டுல செஞ்சு சாப்பிட்டு பாருங்க அதோட ருசியே தனி தான். அருமை அருமை ! இதை எப்படி செய்றதுன்னு பாக்கலாம். மேங்கோ பிஸ்தா குல்பி தயார் செய்யும் நேரம்  : 5 - 12 மணி நேரம்  சமைக்கும் நேரம்  :  15 நிமிடம்  அளவு   :  4 குல்பி  தேவையான பொருட்கள் : மாம்பழம் விழுது  - 1/2 கப் (நான் 2 மாம்பழம் உபயோகித்து 1/2 கப் அளவு விழுது தயாரித்தேன்) பால் - 1 கப் + 3 தேக்கரண்டி  கன்டென்ஸ்ட் மில்க்(Milk maid/Condensed milk)  - 6 மேஜைக்கரண்டி சோள மாவு  - 1.5 தேக்கரண்டி பிஸ்தா - 10 பொடியாய் நறுக்கிக் கொள்ளவும். செய்முறை விளக்கம் : பால் மற்றும்  கன்டென்ஸ்ட் மில்க் இரண்டையும் ஒரு பாத்திரத்தில் ஊற்றிக் கொல்லவம். பின் பாத்திரத்தை அடுப்பில் வைத்து காய்ச்சவும். பால் காய்ந்துகொண்டிருக்கும் சமயத்தில் ஒரு...

அரைச்சுவிட்ட சாம்பார் | araichuvitta sambhar recipe in tamil

Image
அரைச்சுவிட்ட சாம்பார் செய்வது எப்படி புகைப்படத்துடன் கூடிய செய்முறை விளக்கம். வழக்கமா சாதத்துக்கு இட்லி தோசைக்கும் ஆகுற மாதிரி குழம்போ இல்ல சட்னியோ செய்றது வழக்கம். அதே மாதிரி தான் இந்த சாம்பார் சாதம் இட்லி அல்லது தோசை எல்லாத்துக்கும் நல்லா இருக்கும். இப்ப இதை எப்படி செய்றதுன்னு பாக்கலாம். அரைச்சுவிட்ட சாம்பார் தயார் செய்யும் நேரம்  : 10 நிமிடம்  சமைக்கும் நேரம்  :  15  நிமிடம் அளவு  :  4 பேர் சாப்பிட     தேவையான பொருட்கள் :  துவரம் பருப்பு  - 1/2 கப் கோபுரமாக புலி - 1 எலுமிச்சை அளவு சின்ன வெங்காயம்  - 1 0 தக்காளி - 1  நறுக்கிக்கொள்ளவும் பூண்டு - 4-5 கொத்தமல்லி இலை  - 1-2 மேஜைக்கரண்டி நறுக்கிக்கொள்ளவும் உருளை கிழங்கு - 1 நறுக்கிக்கொள்ளவும் கேரட் - 1 நறுக்கிக்கொள்ளவும் வறுத்து அரைப்பதற்கு : மல்லி  - 1 தேக்கரண்டி கடலை பருப்பு  - 1 தேக்கரண்டி வர மிளகாய்  - 1 பச்சரிசி   - 1 தேக்கரண்டி துருவிய தேங்காய்  - 1மேஜைக்கரண்டி வெந்தயம்  - 1/4 தேக்கர...

கடாய் காளான் பட்டாணி வறுவல் | Kadai kaalan pachai patani varuval in tamil

Image
 கடாய் காளான் பட்டாணி வறுவல் - செய்வது எப்படி புகைப்படத்துடன் கூடிய செய்முறை விளக்கம்  தமிழில். காளானில் வைட்டமின் டி நிறைந்து உள்ளது. இதனை நமது சமையலில் உட்கொள்வது சிறந்தது. இதனை எப்படி செய்வது என்று இப்பொழுது காணலாம்.  கடாய் காளான் பட்டாணி வறுவல்  தயார் செய்யும் நேரம்  : 10 நிமிடம்  சமைக்கும் நேரம்  :  20 நிமிடம்  அளவு  :  25  உணவு வகை  :  Indian தேவையான பொருட்கள் :  பட்டன் காளான் - 200 கிராம் (3 துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும் ) பச்சை பட்டாணி - 100 கிராம் / 1/2 - 3/4 கப் அளவு (வேகவைத்துக்கொள்ளவும்) பெரிய வெங்காயம் - 1 நறுக்கியது தக்காளி விழுது  - 2 தக்காளி  வைக்கவும் பச்சை மிளகாய் - 1 கருவேப்பில்லை - 1 கொத்து இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி மிளகாய்  தூள்  - 3/4 - 1 தேக்கரண்டி மஞ்சள் தூள்  - 1/4 தேக்கரண்டி மல்லி தூள்  - 1/2 தேக்கரண்டி (optional) கரம் மசாலா தூள்  - 1/4 தேக்கரண்டி கெட்டி தேங்காய் பால்  - 1/2கப் கொத்தம...

பன்னீர் புர்ஜி | Paneer bhurji recipe in tamil

Image
பன்னீர் புர்ஜி செய்வது எப்படி புகைப்படத்துடன் கூடிய செய்முறை விளக்கம். பன்னீர் எனக்கு மிகவும் பிடித்தமான உணவு. வீட்டில் பன்னீர் செய்ய விரும்புவோர் இங்கே கிளிக் செய்யவும். இதனை சப்பாத்தியுடன் அல்லது தோசைக்கு நடுவில் வைத்து பன்னீர் தோசை செய்தும் சாப்பிடலாம். இதனை செய்வது எப்படி என்று இப்பொழுது காணலாம். பன்னீர் புர்ஜி  தயார் செய்யும் நேரம்  :  3நிமிடம்   சமைக்கும் நேரம்  :  10 நிமிடம்  அளவு   :  2-3 பேர்  தேவையான பொருட்கள் : பன்னீர் - 200 கிராம் பெரிய வெங்காயம் - 1 பொடியாய் நறுக்கிவைக்கவும் தக்காளி - 1 பொடியாய் நறுக்கிவைக்கவும் பச்சை - 1 பொடியாய் நறுக்கிவைக்கவும் இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி  ஜீரகம் - 1/2  தேக்கரண்டி மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி மிளகாய் தூள் - 3/4 தேக்கரண்டி மல்லி தூள் - 1 தேக்கரண்டி கரம் மசாலா - 1/4 தேக்கரண்டி உப்பு- தேவையான அளவு எண்ணெய் - 1 தேக்கரண்டி கொத்துமல்லி இலை - சிறிதளவு செய்முறை விளக்கம் : முதலில் வெங்காயம் தக்காளி பச்சைமிளகாயை நறுக்கி  வைத்துக்கொ...

செட்டிநாடு காளான் குருமா - chettinadu mushroom gravy in tamil

Image
செட்டிநாடு காளான் குருமா செய்வது எப்படி புகைப்படத்துடன் கூடிய செய்முறை விளக்கம். செட்டிநாடு வகை உணவு சைவப் பிரியர்களுக்கு ஏற்ற உணவு. இதை எப்படி செய்வது என்று இப்பொழுது காணலாம். செட்டிநாடு காளான் குருமா  தயார்செய்யும் நேரம்  : 10 நிமிடம்  சமைக்கும் நேரம்  :  20 நிமிடம்  அளவு : 4 பேர்  வகை  :இந்திய உணவு  தேவையான பொருட்கள் :  பட்டன் முஷ்ரூம்  - 200கிராம் சின்ன வெங்காயம் - 10 - 12 (பொடியாக நறுக்கிக் கொள்ளவும் ) தக்காளி - 2 (பொடியாக நறுக்கிக் கொள்ளவும் ) இஞ்சி பூண்டு விழுது  - 1 தேக்கரண்டி மஞ்சள் தூள்  - 1/4 தேக்கரண்டி கொத்தமல்லி தலை - 1 மேஜைக்கரண்டி (பொடியாய் நறுக்கியது ) உப்பு - தேவையான அளவு வறுத்து அரைப்பதற்கு :(செட்டிநாடு மசாலா) வர மிளகாய் - 4 கொத்துமல்லி  - 1 தேக்கரண்டி மிளகு  - 1/2 தேக்கரண்டி ஜீரகம் - 1/2 தேக்கரண்டி பொட்டுக்கடலை  - 1/2 மேஜைக்கரண்டி துருவிய தேங்காய்  - 3 மேஜைக்கரண்டி கசகசா  - 1/2 தேக்கரண்டி(விருப்பத்திற்கேற்ப ) தாளிப்பதற்க்கு ...

சொரைக்காய் குருமா - Bottle gourd kurma | Sorakkai kurma recipe in tamil

Image
சொரைக்காய் குருமா  செய்வது எப்படி புகைப்படத்துடன் கூடிய செய்முறை விளக்கம்.  எங்கள் வீட்டில் விளைந்த சொரைக்காய் கொண்டு இந்த குருமாவை செய்தேன், அதில் எனக்கு அலாதி மகிழ்ச்சி. இந்த செடி இருப்பதையே நான் முதலில் கவனிக்க வில்லை,காவேபில்லை பறிக்க தோட்டத்திற்கு சென்ற போது  திடீரென என் கண்ணில் பட்டது. இதனை எப்படி செய்வது என்று பார்க்கலாம். சொரைக்காய் குருமா தயார் செய்யும் நேரம் : 10 நிமிடம்   சமைக்கும் நேரம் : 15 நிமிடம் அளவு : 2- 3 பேர் வகை : இந்திய உணவு தேவையான பொருட்கள்: சொரைக்காய் - 1 அல்லது 1 1/2கப் பொடியாய் நறுக்கியது / 1/2 கிலோ  வெங்காயம் - 1  பொடியாய் நறுக்கிக் கொள்ளவும் தக்காளி - 1 பொடியாய் நறுக்கிக் கொள்ளவும்  பச்சை மிளகாய்  - 1   பொடியாய் நறுக்கிக் கொள்ளவும் கடுகு - 1/2 தேக்கரண்டி  எண்ணெய் - 2  தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது  - 1  தேக்கரண்டி மிளகாய் தூள்  - 3/4  தேக்கரண்டி மஞ்சள் தூள் - 1/4  தேக்கரண்டி கொத்தமல்லி பொடி  - 1  தேக்கரண்டி உப்பு - தேவையான ...