Posts

வாழைப்பூ வடை செய்வது எப்படி?

Image
வாழைப்பூ வடை செய்வது எப்படி புகைப்படத்துடன் கூடிய செய்முறை விளக்கம். கொங்கு மாவட்டங்களில் வடை பருப்பு ரொம்ப பிரசித்தம் ஆனால் மற்ற இடங்களில் வடை பருப்பு கிடைக்குமா என்று எனக்கு தெரிய வில்லை. எனவே நான் இங்கு கடலை பருப்பு கொண்டு வடை செய்துள்ளேன். நீங்கள் இருக்கும் இடத்தில வடை பருப்பு கிடைக்குமெனில் அதையே உபயோகிக்கவும். வாழைப்பூவின் மகத்துவத்தை நான் சொல்லித்தான் உங்களுக்கு தெரிய வேண்டும் என்பது இல்லை.   எப்பொழுது இதனை செய்வது என்று பார்க்கலாம். வாழைப்பூ வடை தயார் செய்யும் நேரம்  : 2 மணி நேரம்  சமைக்கும் நேரம் :  15 நிமிடம்    அளவு  :  15 - 18 வடை   தேவையான பொருட்கள் : வாழைப்பூ - 1 கப்  (சுத்தம் செய்து நறுக்கியது)  கடலை பருப்பு / வடை பருப்பு  - 3/4 kap சின்ன வெங்காயம் - 1/4 கப் பொடியாய் நறுக்கியது சோம்பு - 3/4 கப்  பெருங்காயம் - 1/4 kap உப்பு - தேவைகேற்ப பச்சை மிளகாய் - 2 -3 பொடியாக நறுக்கியது கருவேப்பில்லை  - 1 கொத்து கொத்தமல்லி இலை - 2 மேஜைகரண்டி  பொடியாக நறுக்கியது செமுறை விளக்...

வெந்தய கீரை கூட்டு | Vendhaya keerai kootu in tamil

Image
வெந்தய கீரை கூட்டு புகைப்படங்களுடன் கூடிய செய்முறை விளக்கம் தமிழில். வெந்தயக் கீரை உடலிற்கு மிகவும் நல்லது. அதுவும் சர்க்கரை நோய் உள்ளவர்கள் இதனை அவர்களது உணவில் சேர்த்துக் கொள்வது மிகவும் அவசியம். வெந்தய கீரை கூட்டு மிகவும் சுவையாக இருக்கும். நான் அடிகடி சிறிதளவு வெந்தயக் கீரையை எனது தோட்டத்தில் வளர்ப்பது உண்டு. எனவே வாரம் ஒரு முறையேனும் வெந்தயக் கீரையை எதாவது வகையில் உணவில் சேர்த்து விடுவேன்.   இதனை எவ்வாறு செய்வது என்று பார்க்கலாம். வெந்தய கீரை கூட்டு தேவையான பொருட்கள்: வெந்தய கீரை - 1 கப் இறுக்கமாக அடைத்து பாசி பருப்பு - 1/4 கப் ஆயில்/நெய் - 2 தேகரண்டி உளுத்தம் பருப்பு - 1 தேகரண்டி கடுகு - 1/2 தேகரண்டி பூண்டு - 2 பல் (நசுக்கிக் கொள்ளவும் ) சின்ன வெங்காயம் - 3 (நசுக்கிக் கொள்ளவும் ) பெரிய வெங்காயம் - 1/2 காய் பொடியாக நறுக்கவும் தக்காளி - 1 சிறியது பொடியாக நறுக்கவும் மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி உப்பு - தேவைகேற்ப அரைப்பதற்கு : தேங்காய் - 2 -3 மேஜைகரண்டி ஜீரகம் - 1 தேக்கரண்டி செய்முறை விளக்கம்: முதலில் வெந்தய கீரையை நன்கு அலசி வேர் மற்றும் தண்...

பேபி கார்ன் மிளகு பிரட்டல் | Baby corn pepper fry in tamil

Image
பேபி கார்ன் மிளகு பிரட்டல்  புகைப்படத்துடன் கூடிய செயல் முறை விளக்கம் தமிழில். சின்ன வயசுல வீட்டுல விலையிற மக்காச்சோள கருத பிஞ்சுலையே பொரிச்சு பேபி கார்ன் சில்லி செஞ்சு சாப்பிடுவோம், அப்ப தெரியாது பேபி கார்ன் வேற வீட்டுல விலையிற மக்காச்சோளம் வேறைங்கிறது . இதில் நான் சிறிது குடைமிளகாயும் சேர்த்துள்ளேன், அதை சேர்ப்பதால் சுவை சற்று கூடுதலாக இருக்கும். சரி  வாங்க இந்த பேபி கார்ன் எப்படி செய்றதுன்னு பார்க்கலாம். பேபி கார்ன் பெப்பர் ப்ரை தேவியான பொருட்கள் :  பேபி கார்ன்  - 200 கிராம் (1" நீளவாக்கில் வெட்டிக் கொள்ளவும் ) குடை மிளகாய் - 1 சிறியது (1" துண்டுகளாக நீளவாக்கில் வெட்டிக் கொள்ளவும் ) பெரிய வெங்காயம் - 1 சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும் தக்காளி சாஸ்  - 1 மேஜைக்கரண்டி (விருப்பப்பட்டால் ) பூண்டு - 4 பல் சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும் இஞ்சி - 1/2" துண்டு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும் எண்ணெய் - 1 தேக்கரண்டி ஜீரகம்  - 1/2 தேக்கரண்டி கரம் மசாலா  - 1/2 தேக்கரண்டி மஞ்சள் தூள்  - 1/8 தேக்கரண்டி (விருப்பப்ப...

பன்னீர் பால்ஸ் | Paneer balls recipe in tamil

Image
பன்னீர் பால்ஸ் | பன்னீர் உருண்டை செய்வது எப்படி? புகைப்படத்துடன் கூடிய செய்முறை விளக்கம்.     குழந்தைகள் பள்ளி முடித்து வீட்டிற்கு வந்தவுடன் அவர்களுக்கு பிடித்தமாதிரி இந்த பன்னீர் பைல்ஸை செய்து கொடுத்து அசத்துங்கள். மிகவும் வித்யாசமான மற்றும் சுவையான பன்னீர் பால்ஸ். மேலும் பல பன்னீர் பதார்த்தங்கள்  பன்னீர் புர்ஜி , பன்னீர் தோசை  ,  வீட்டில் பன்னீர் செய்வது எப்படி ? . இப்பொழுது பன்னீர் பால்ஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம். பன்னீர் பால்ஸ் ரெசிபி  தயாரிக்கும் நேரம்  : 15 நிமிடம் சமைக்கும் நேரம்  :  15 - 20  நிமிடம் அளவு   :  20உருண்டை  எழுத்து : அமுதா  தேவையான பொருட்கள் : பன்னீர் - 1கப் துருவியது   பிரட் துண்டுகள்  - 2 (அல்லது ) பிரட்தூள் - 1/2கப்  உருளைக்கிழங்கு - 1 சிறியது  பெரிய வெங்காயம்  - 1 சிறியது  புதினா இலை  - 1மேஜைக்கரண்டி நறுக்கியது  கொத்தமல்லித்தழை - 2மேஜைக்கரண்டி  பச்சை மிளகாய் - 1 பொடியாக நறுக்கியது  மிளகாய் தூ...

கோல்ட் காபி | Cold coffee recipe in tamil

Image
கோல்ட்   காபி செய்வது எப்படி புகைப்படத்துடன் கூடிய செய்முறை விளக்கம். இந்த கோடைக்கு குளு குளுனு ஏதாச்சும் குடிக்கணும் போலவே இருக்கும் , அதுலயும் காபி குடிச்சு பழகினவுங்களுக்கு இந்த கோல்டு காபி ஒரு அருமையான காபி பதார்த்தம் இந்த கோடையில் சுவைத்து மகிழ. இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம். கோல்ட் காபி  தயார் செய்யும் நேரம்  : 5நிமிடம்  அளவு  :  2 பேர்  தேவையான பொருட்கள்: இன்ஸ்டன்ட் காபி பொடி - 1 தேக்கரண்டி அல்லது காபி டிகாஷன் - 1 மேஜைக்கரண்டி  சுடு நீர்  - 1 மேஜைக்கரண்டி வெனிலா ஐஸ் கிரீம்  - 1 பெரிய ஸ்கூப் குளிர்ந்த கொழுப்புள்ள பால்  - 1 கப் / 1/4 லிட்டர் ஐஸ் கட்டி  - 4 சக்கரை - 1.5 மேஜைக்கரண்டி சாக்லேட் சிரப்  - 1 மேஜைக்கரண்டி (அலங்கரிக்க) செய்வது எப்படி: ஒரு குட்டி பௌலில் காபி பொடி எடுத்துக் கொண்டு அதனுடன் சுடுநீர் சேர்த்து கலந்து வைக்கவும். ஒரு மிக்ஸி ஜாரில் நாம் கலந்து வைத்த காபி டிகாஷன் , சக்கரை மற்றும் ஐஸ் கிரீம் சேர்க்கவும். பின் அதனுடன் குளிர்ந்த பால் மற்றும் ஐஸ் கட்டி சேர்...

மேங்கோ பிஸ்தா குல்பி | Mango pista kulfi recipe in tamil

Image
மேங்கோ பிஸ்தா குல்பி செய்வது எப்படி புகைப்படத்துடன் கூடிய செய்முறை விளக்கம் தமிழில்.   வெயிலின் தாக்கத்தை குறைக்க அவ்வப்போது இந்த மாதிரி ஜில்லுனு குல்பி சாப்பிட்டா எப்படி இருக்கும். நினைக்கும் போதே குளு குளுனு இருக்குதா ? வீட்டுல செஞ்சு சாப்பிட்டு பாருங்க அதோட ருசியே தனி தான். அருமை அருமை ! இதை எப்படி செய்றதுன்னு பாக்கலாம். மேங்கோ பிஸ்தா குல்பி தயார் செய்யும் நேரம்  : 5 - 12 மணி நேரம்  சமைக்கும் நேரம்  :  15 நிமிடம்  அளவு   :  4 குல்பி  தேவையான பொருட்கள் : மாம்பழம் விழுது  - 1/2 கப் (நான் 2 மாம்பழம் உபயோகித்து 1/2 கப் அளவு விழுது தயாரித்தேன்) பால் - 1 கப் + 3 தேக்கரண்டி  கன்டென்ஸ்ட் மில்க்(Milk maid/Condensed milk)  - 6 மேஜைக்கரண்டி சோள மாவு  - 1.5 தேக்கரண்டி பிஸ்தா - 10 பொடியாய் நறுக்கிக் கொள்ளவும். செய்முறை விளக்கம் : பால் மற்றும்  கன்டென்ஸ்ட் மில்க் இரண்டையும் ஒரு பாத்திரத்தில் ஊற்றிக் கொல்லவம். பின் பாத்திரத்தை அடுப்பில் வைத்து காய்ச்சவும். பால் காய்ந்துகொண்டிருக்கும் சமயத்தில் ஒரு...

அரைச்சுவிட்ட சாம்பார் | araichuvitta sambhar recipe in tamil

Image
அரைச்சுவிட்ட சாம்பார் செய்வது எப்படி புகைப்படத்துடன் கூடிய செய்முறை விளக்கம். வழக்கமா சாதத்துக்கு இட்லி தோசைக்கும் ஆகுற மாதிரி குழம்போ இல்ல சட்னியோ செய்றது வழக்கம். அதே மாதிரி தான் இந்த சாம்பார் சாதம் இட்லி அல்லது தோசை எல்லாத்துக்கும் நல்லா இருக்கும். இப்ப இதை எப்படி செய்றதுன்னு பாக்கலாம். அரைச்சுவிட்ட சாம்பார் தயார் செய்யும் நேரம்  : 10 நிமிடம்  சமைக்கும் நேரம்  :  15  நிமிடம் அளவு  :  4 பேர் சாப்பிட     தேவையான பொருட்கள் :  துவரம் பருப்பு  - 1/2 கப் கோபுரமாக புலி - 1 எலுமிச்சை அளவு சின்ன வெங்காயம்  - 1 0 தக்காளி - 1  நறுக்கிக்கொள்ளவும் பூண்டு - 4-5 கொத்தமல்லி இலை  - 1-2 மேஜைக்கரண்டி நறுக்கிக்கொள்ளவும் உருளை கிழங்கு - 1 நறுக்கிக்கொள்ளவும் கேரட் - 1 நறுக்கிக்கொள்ளவும் வறுத்து அரைப்பதற்கு : மல்லி  - 1 தேக்கரண்டி கடலை பருப்பு  - 1 தேக்கரண்டி வர மிளகாய்  - 1 பச்சரிசி   - 1 தேக்கரண்டி துருவிய தேங்காய்  - 1மேஜைக்கரண்டி வெந்தயம்  - 1/4 தேக்கர...