வாழைப்பூ வடை செய்வது எப்படி?

Image
வாழைப்பூ வடை செய்வது எப்படி புகைப்படத்துடன் கூடிய செய்முறை விளக்கம். கொங்கு மாவட்டங்களில் வடை பருப்பு ரொம்ப பிரசித்தம் ஆனால் மற்ற இடங்களில் வடை பருப்பு கிடைக்குமா என்று எனக்கு தெரிய வில்லை. எனவே நான் இங்கு கடலை பருப்பு கொண்டு வடை செய்துள்ளேன். நீங்கள் இருக்கும் இடத்தில வடை பருப்பு கிடைக்குமெனில் அதையே உபயோகிக்கவும். வாழைப்பூவின் மகத்துவத்தை நான் சொல்லித்தான் உங்களுக்கு தெரிய வேண்டும் என்பது இல்லை.   எப்பொழுது இதனை செய்வது என்று பார்க்கலாம். வாழைப்பூ வடை தயார் செய்யும் நேரம்  : 2 மணி நேரம்  சமைக்கும் நேரம் :  15 நிமிடம்    அளவு  :  15 - 18 வடை   தேவையான பொருட்கள் : வாழைப்பூ - 1 கப்  (சுத்தம் செய்து நறுக்கியது)  கடலை பருப்பு / வடை பருப்பு  - 3/4 kap சின்ன வெங்காயம் - 1/4 கப் பொடியாய் நறுக்கியது சோம்பு - 3/4 கப்  பெருங்காயம் - 1/4 kap உப்பு - தேவைகேற்ப பச்சை மிளகாய் - 2 -3 பொடியாக நறுக்கியது கருவேப்பில்லை  - 1 கொத்து கொத்தமல்லி இலை - 2 மேஜைகரண்டி  பொடியாக நறுக்கியது செமுறை விளக்...

பன்னீர் பால்ஸ் | Paneer balls recipe in tamil

பன்னீர் பால்ஸ் | பன்னீர் உருண்டை செய்வது எப்படி? புகைப்படத்துடன் கூடிய செய்முறை விளக்கம்.   

குழந்தைகள் பள்ளி முடித்து வீட்டிற்கு வந்தவுடன் அவர்களுக்கு பிடித்தமாதிரி இந்த பன்னீர் பைல்ஸை செய்து கொடுத்து அசத்துங்கள். மிகவும் வித்யாசமான மற்றும் சுவையான பன்னீர் பால்ஸ்.
Paneer balls recipe

மேலும் பல பன்னீர் பதார்த்தங்கள் 

பன்னீர் புர்ஜி, பன்னீர் தோசை , வீட்டில் பன்னீர் செய்வது எப்படி ?.


Paneer balls recipe

இப்பொழுது பன்னீர் பால்ஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.


பன்னீர் பால்ஸ் ரெசிபி 

தயாரிக்கும் நேரம் :15 நிமிடம்
சமைக்கும் நேரம் 15 - 20 நிமிடம்
அளவு  : 20உருண்டை 
எழுத்து : அமுதா 

தேவையான பொருட்கள் :
பன்னீர் - 1கப் துருவியது  
பிரட் துண்டுகள்  - 2 (அல்லது ) பிரட்தூள் - 1/2கப் 
உருளைக்கிழங்கு - 1 சிறியது 
பெரிய வெங்காயம்  - 1 சிறியது 
புதினா இலை  - 1மேஜைக்கரண்டி நறுக்கியது 
கொத்தமல்லித்தழை - 2மேஜைக்கரண்டி 
பச்சை மிளகாய் - 1 பொடியாக நறுக்கியது 
மிளகாய் தூள்  - 3/4 தேக்கரண்டி 
சாட் மசாலா  - 1/4 தேக்கரண்டி (optional)
மாங்காய் தூள்  - 1/4 தேக்கரண்டி (optional)
எலுமிச்சை சாறு  - 2 தேக்கரண்டி 
சோள  மாவு  - 1மேஜைக்கரண்டி 
உப்பு - தேவைக்கேற்ப 
எண்ணெய் - 1 தேக்கரண்டி 

பொரிப்பதற்கு  :
எண்ணெய் - 4 தேக்கரண்டி 


செய்முறை விளக்கம் :
  1. பன்னீரை துருவி வைத்துக் கொள்ளவும். பிரட் துண்டுகளை மிக்ஸியில் போட்டு பொடித்து வைத்துக் கொள்ளவும்.
    Paneer balls recipe step1
  2. உருளைக்கிழங்கை வேகவைத்து தோலுரித்து மசித்து வைத்துக் கொள்ளவும். ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பச்சை மிளகாய் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கியவுடன் அடுப்பை அணைத்துவிடவும்.
    Paneer balls recipe step2
  3. அதனுடன் துருவிய பன்னீர், கொத்துமல்லி, புதினா, மசித்த உருளைக்கிழங்கு, சோள மாவு, மிளகாய் தூள், சாட் மசாலா, பிரட் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலக்கவும்.
    Paneer balls recipe step3
  4. இறுதியாக எலுமிச்சை சாறு சேர்த்து நாகு கைகளால் பிசையவும். 
    Paneer balls recipe step4
  5. அதில் இருந்து சிறிது எடுத்து உருண்டைகள் பிடிக்கவும். அதனை எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும். நான் பணியாரக் கல்லில் இதனை பொரித்து எடுத்தேன்.
    Paneer balls recipe step5
  6. சுற்றிலும் பொன்னிறமாக வரும் வரை நன்கு பொரித்து எடுக்கவும்.
    Paneer balls recipe step6
சுவையான பன்னீர் உருண்டை தயார் :)

Paneer balls recipe

என் குறிப்பு : 
1. சூடாக பரிமாற்றினால் சுவையாக இருக்கும்.
2. உருளைக்கிழங்கை  நிறைய வேண்டாம், அது சுவையை மாற்றிவிடும்.

Comments

Popular posts from this blog

எலுமிச்சை ஊறுகாய் - lemon pickle / traditional lemon pickle in tamil

அதிரசம் / இடி கச்சாயம் - Adhirasam / idi kachayam in tamil

புடலங்காய் கூட்டு | pudalangai kootu recipe in tamil | Snake gourd kootu in tamil