வாழைப்பூ வடை செய்வது எப்படி?

Image
வாழைப்பூ வடை செய்வது எப்படி புகைப்படத்துடன் கூடிய செய்முறை விளக்கம். கொங்கு மாவட்டங்களில் வடை பருப்பு ரொம்ப பிரசித்தம் ஆனால் மற்ற இடங்களில் வடை பருப்பு கிடைக்குமா என்று எனக்கு தெரிய வில்லை. எனவே நான் இங்கு கடலை பருப்பு கொண்டு வடை செய்துள்ளேன். நீங்கள் இருக்கும் இடத்தில வடை பருப்பு கிடைக்குமெனில் அதையே உபயோகிக்கவும். வாழைப்பூவின் மகத்துவத்தை நான் சொல்லித்தான் உங்களுக்கு தெரிய வேண்டும் என்பது இல்லை.   எப்பொழுது இதனை செய்வது என்று பார்க்கலாம். வாழைப்பூ வடை தயார் செய்யும் நேரம்  : 2 மணி நேரம்  சமைக்கும் நேரம் :  15 நிமிடம்    அளவு  :  15 - 18 வடை   தேவையான பொருட்கள் : வாழைப்பூ - 1 கப்  (சுத்தம் செய்து நறுக்கியது)  கடலை பருப்பு / வடை பருப்பு  - 3/4 kap சின்ன வெங்காயம் - 1/4 கப் பொடியாய் நறுக்கியது சோம்பு - 3/4 கப்  பெருங்காயம் - 1/4 kap உப்பு - தேவைகேற்ப பச்சை மிளகாய் - 2 -3 பொடியாக நறுக்கியது கருவேப்பில்லை  - 1 கொத்து கொத்தமல்லி இலை - 2 மேஜைகரண்டி  பொடியாக நறுக்கியது செமுறை விளக்...

பேபி கார்ன் மிளகு பிரட்டல் | Baby corn pepper fry in tamil

பேபி கார்ன் மிளகு பிரட்டல் புகைப்படத்துடன் கூடிய செயல் முறை விளக்கம் தமிழில். சின்ன வயசுல வீட்டுல விலையிற மக்காச்சோள கருத பிஞ்சுலையே பொரிச்சு பேபி கார்ன் சில்லி செஞ்சு சாப்பிடுவோம், அப்ப தெரியாது பேபி கார்ன் வேற வீட்டுல விலையிற மக்காச்சோளம் வேறைங்கிறது .

baby corn pepper fry recipe

இதில் நான் சிறிது குடைமிளகாயும் சேர்த்துள்ளேன், அதை சேர்ப்பதால் சுவை சற்று கூடுதலாக இருக்கும்.

சரி  வாங்க இந்த பேபி கார்ன் எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்.


பேபி கார்ன் பெப்பர் ப்ரை

தேவியான பொருட்கள் : 
பேபி கார்ன்  - 200 கிராம் (1" நீளவாக்கில் வெட்டிக் கொள்ளவும் )
குடை மிளகாய் - 1 சிறியது (1" துண்டுகளாக நீளவாக்கில் வெட்டிக் கொள்ளவும் )
பெரிய வெங்காயம் - 1 சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்
தக்காளி சாஸ்  - 1 மேஜைக்கரண்டி (விருப்பப்பட்டால் )
பூண்டு - 4 பல் சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்
இஞ்சி - 1/2" துண்டு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்
எண்ணெய் - 1 தேக்கரண்டி
ஜீரகம்  - 1/2 தேக்கரண்டி
கரம் மசாலா  - 1/2 தேக்கரண்டி
மஞ்சள் தூள்  - 1/8 தேக்கரண்டி (விருப்பப்பட்டால்)
உப்பு - தேவைக்கேற்ப
கொத்தமல்லி இலை  - சிறிதளவு

வறுத்து அரைப்பதற்கு :
ஜீரகம் - 3/4 தேக்கரண்டி
சோம்பு  - 1/2 தேக்கரண்டி
மிளகு - 1 தேக்கரண்டி


செய்முறை விளக்கம் 
:
  1. முதலில் பேபி கார்னை சுத்தம் செய்து நீளவாக்கில் 1" அளவிற்கு வெட்டிக் கொள்ளவும். அதாவது முதலில் ஒரு கார்னை இரண்டாக வெட்டி பின்பு அதனை மீண்டும் நாலு நாலு துண்டுகளாக வெட்டவும். குடை மிளகாயையயும் 1" நீள  துண்டுகளாக வெட்டவும்.
  2. வருத்து அரைக்க கொடுத்துள்ள பொருட்கள் அனைத்தையும் வாணலியில் போட்டு மணம் வரும் வரை வறுத்து எடுத்து பின் ஆறியவுடன் மிக்ஸியில் போட்டு  பொடித்து வைக்கவும்.
    baby corn pepper fry recipe step1
  3. ஒரு பாத்திரத்தில் வெட்டி வைத்துள்ள பேபி கார்ன் துண்டுகளை எடுத்து அது மூல்கும் வரை தண்ணீர் மற்றும் சிறிதளவு உப்பு சேர்த்து 10-12 நிமிடம் வரை வேக வைக்கவும். குலையுமளவு வேக விடவேண்டாம். மீதமுள்ள தண்ணீரை வடித்து விடவும்.( இதனை குக்கரில் போட்டு ஒரு விசில் விட்டும் வேக வைக்கலாம்).
    baby corn pepper fry recipe step2
  4. ஒரு வடசட்டியில், எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், ஜீரகம்,இஞ்சி பூண்டு ஆகியவற்றை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். பின் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கி, வேகவைத்த பேபி கார்ன் மற்றும் வெட்டி வைத்துள்ள குடை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
    baby corn pepper fry recipe step3
  5. இதனுடன் தக்காளி சாஸ் சேர்த்து பிரட்டி, மஞ்சள் தூள் கரம் மசாலா மற்றும் அரைத்துவைத்துள்ள பொடியை சேர்த்து 2 நிமிடம் கிளறி அடுப்பை அணைக்கவும்.
    baby corn pepper fry recipe step4
காரசாரமான பேபி கார்ன் மிளகு பிரட்டல் தயார் :)

என் குறிப்பு :

1. வறுத்து அரைக்க கொடுத்துள்ள பொருட்களை மிதமான சூட்டில் மெதுவாக வறுக்கவும் அப்பொழுது தன் சுவையாக இருக்கும்.


Comments

Popular posts from this blog

எலுமிச்சை ஊறுகாய் - lemon pickle / traditional lemon pickle in tamil

அதிரசம் / இடி கச்சாயம் - Adhirasam / idi kachayam in tamil

புடலங்காய் கூட்டு | pudalangai kootu recipe in tamil | Snake gourd kootu in tamil