வெந்தய கீரை கூட்டு புகைப்படங்களுடன் கூடிய செய்முறை விளக்கம் தமிழில். வெந்தயக் கீரை உடலிற்கு மிகவும் நல்லது. அதுவும் சர்க்கரை நோய் உள்ளவர்கள் இதனை அவர்களது உணவில் சேர்த்துக் கொள்வது மிகவும் அவசியம். வெந்தய கீரை கூட்டு மிகவும் சுவையாக இருக்கும். நான் அடிகடி சிறிதளவு வெந்தயக் கீரையை எனது தோட்டத்தில் வளர்ப்பது உண்டு. எனவே வாரம் ஒரு முறையேனும் வெந்தயக் கீரையை எதாவது வகையில் உணவில் சேர்த்து விடுவேன்.
இதனை எவ்வாறு செய்வது என்று பார்க்கலாம்.
வெந்தய கீரை கூட்டு
தேவையான பொருட்கள்:
வெந்தய கீரை - 1 கப் இறுக்கமாக அடைத்து
பாசி பருப்பு - 1/4 கப்
ஆயில்/நெய் - 2 தேகரண்டி
உளுத்தம் பருப்பு - 1 தேகரண்டி
கடுகு - 1/2 தேகரண்டி
பூண்டு - 2 பல் (நசுக்கிக் கொள்ளவும் )
சின்ன வெங்காயம் - 3 (நசுக்கிக் கொள்ளவும் )
பெரிய வெங்காயம் - 1/2 காய் பொடியாக நறுக்கவும்
தக்காளி - 1 சிறியது பொடியாக நறுக்கவும்
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
உப்பு - தேவைகேற்ப
அரைப்பதற்கு :
தேங்காய் - 2 -3 மேஜைகரண்டி
ஜீரகம் - 1 தேக்கரண்டி
செய்முறை விளக்கம்:
- முதலில் வெந்தய கீரையை நன்கு அலசி வேர் மற்றும் தண்டை நீக்கி விட்டு, இலையை மட்டும் கில்லி வெய்கவும். பிஞ்சு கீரை என்றால் தண்டையும் சேர்த்து உபயோகிக்கலாம். பின் ஒரு குக்கரில் பாசி பருப்பை எடுத்து ௧/௨ கப் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வெய்து ஒரு விசில் விடவும்.
- படத்தில் காண்பது போல கெட்டியாக குலையாமல் அதே சமயம் நன்கு வெந்தும் இருக்க வேண்டும். மிக்சியில் தேங்காய் மற்றும் ஜீரகம் சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி மையாக அரைத்துக் கொள்ளவும்.
- ஒரு வடசட்டியில் எண்ணெய்/ நெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு உளுத்தம் பருப்பு சேர்த்து தாளித்து பின் நறுக்கிய சின்ன வெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
- இதனுடன் வேக வெய்த பாசி பருப்பு சேர்த்து அதனுடன் 1 கப் தண்ணீர் சேர்க்கவும்.
- இதனுடன் நறுக்கிய பெரிய வெங்காயம், தக்காளி, உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து 2-3 நிமிடம் வேக விடவும். பின் அதில் வெந்தயக் கீரை சேர்த்து கிளறி 2 நிமிடம் விடவும்.
- கடைசியாக அரைத்து வைத்துள்ள தேங்காய் கலவையை சேர்த்து கிளறி ஒரு கொதிவிட்டு இறக்கவும்.
சூடான சுவையான வெந்தய கீரை கூட்டு தயார்.
குறிப்பு :
1. பருப்பு குலைய வேகவிட வேண்டாம்.
Comments
Post a Comment