யார்க்கு தான் பிரியாணி பிடிக்காது ? சைவமா இருந்தாலும் அசைவமா இருந்தாலும் இந்த பிரியாணிக்கு மட்டும் தனி நேயர்கள் இருக்க தான் செய்றாங்க. பிரியாணின்னு நினைச்சாலே நாக்குல எச்சில் ஊறுது எனக்கு, உங்களுக்கு ?
இந்த பிரியாணி செய்றதுக்கு நான் வீட்டில அரைச்ச
பிரியாணி பொடி சேர்த்திருக்கேன். ரொம்ப நல்ல இருந்துச்சு.
இந்த பிரியாணி எப்படி செய்றதுன்னு பாக்கலாம்.
தேங்காய் பால் வெஜிடபிள் பிரியாணி
தயார் செய்யும் நேரம் : 40 நிமிடம்
சமைக்கும் நேரம் : 15 நிமிடம்
அளவு : 4 பேர்
எந்தவகை உணவு : இந்திய உணவு
தேவையான பொருட்கள்:
தாளிப்பதற்கு :
நெய் + எண்ணெய் - 2 மேஜைக்கரண்டி
பிரியாணி இல்லை - 1
ஜாதிபத்திரி - 1
மராட்டி மொக்கு - 1
கிராம்பு - 2
அண்ணாச்சி மொக்கு - 1
பட்டை - 1" அளவு
பச்சை மிளகாய் - 1
முந்திரி - 6
அரைப்பதற்கு :
புதினா இலை - 1/2கட்டு
இஞ்சி - 1" அளவு
பூண்டு - 4-5 பல்
தேங்காய் பால் எடுப்பதற்கு :
துருவிய தேங்காய் - 1கப் (1 கப் அளவு தண்ணீர் ஊற்றி அரைத்து பாலை மட்டும் பிழிந்து வைத்துக் கொள்ளவும் )
மற்றவை :
சீராக சம்பா அரிசி/பாசுமதி அரிசி - 2 கப் / 1/2 கிலோ
பிரியாணி பொடி - 3/4 - 1மேஜைக்கரண்டி
பெரிய வெங்காயம் - 1 நீளமாக நறுக்கிக்கொள்ளவும்
தக்காளி - 1 சிறு துண்டுகளாக்கி கொள்ளவும்
சிறு துண்டுகளாக வெட்டிய காய்கறிகள் - 2 - 2.5கப் அளவு (கேரட் - 1, பீன்ஸ் - 6-8, காலிஃளார் - 1/2 கப், உருளைக்கிழங்கு-1, பச்சைபட்டாணி - 1/4 கப், குட்டி சோயா - 1/4 கப் )
உப்பு - தேவையான அளவு
குறிப்பு : குட்டி சோயாவை சுடு நீரில் 10 நிமிடம் ஊற விட்டு பின் வடிகட்டி குளிர்ந்த நீர் விட்டு அலசி அதன் பின் நன்றாக அதனுள் உள்ள நீரை பிழிந்து வைத்துக் கொள்ளவும்.
செய்முறை விளக்கம் ::
- சீராக சம்பா அரிசியை நன்றாக களைந்து 30 நிமிடம் ஊற விடவும். துருவிய தேங்காயை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு தண்ணீர் விட்டி அரைத்து பாலை மட்டும் வடிகட்டி வைத்துக் கொள்ளவும் .
- தேவையான காய்கறிகளை சுத்தம்செய்து வெட்டி வைத்துக் கொள்ளவும். புதினா இஞ்சி பூண்டு ஆகியவற்றையும் அரைத்துவைத்துக் கொள்ளவும்.
- குக்கரில் நெய் மற்றும் எண்ணெய் சேர்த்து சூடேற்றி "தாளிப்பதற்கு" என்று தேவையான பொருட்கள் கொடுத்துள்ள அட்டவணையில் உள்ளவற்றை போட்டு தாளிக்கவும். பின் அதனுடன் வெங்காயம் சேர்த்து வதங்கியவுடன், தக்காளி சேர்த்து வதக்கவும்.
- தக்காளி வதங்கியவுடன் வெட்டி வைத்துள்ள காய்கறிகள் மற்றும் சோயா சேர்த்து 1 நிமிடம் வதக்கவும். பின் தேவையான உப்பு மற்றும் புதினா கலவையை சேர்த்து கிளறவும்.
- புதினாவின் பச்சை வாசனை போகும் வரை வதக்கி பிரியாணி பொடி சேர்த்து கிளறி அரிசியை வடித்து இதனுடன் சேர்க்கவும். இதனுடன் தேங்காய் பால் சேர்த்துக் கொள்ளவும்.(2 கப் அளவு தேங்காய் பால் சேர்த்துள்ளேன்).
- பின் 2 கப் அளவு தண்ணீர் ஊற்றவும். தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும். பிரியாணி கலவை கொதிக்க ஆரம்பித்ததும் குக்கரை மூடி 2 விசில் விடவும். ஆவி முழுவதும் அடங்கியவுடன் குக்கரை திறந்து எலுமிச்சம்பழ சாற்றை ஊற்றி மெதுவாக கிளறி விடவும்.
வெஜிடபிள் பிரியாணி தயார் !
குறிப்பு :
1. சொன்னதை விட அதிக தண்ணீர் ஒற்ற வேண்டாம், பிரியாணி சொத சொதவென ஆகிவிடும்.
2. உங்களுக்கு விருப்பமான காய்கறிகளை சேர்த்துக் கொள்ளலாம்.
Glad that you like it. Keep on visiting. I have moved all the posts from this to www.arusuvaiulagam.com .You can check that website for updated recipes in future. Sure will check those websites :)
ReplyDelete